என் மலர்
நாமக்கல்
- திருச்சியில் இருந்து நாமக்கல் வழியாக பெங்களூரு நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.
- பிற்பகல் 3.25 மணியளவில் பொம்மைக் குட்டைமேடு பஸ் நிறுத்தம் பகுதியில் பஸ் வந்தபோது அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
நாமக்கல்:
திருச்சியில் இருந்து நாமக்கல் வழியாக பெங்களூரு நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. நேற்று பிற்பகல் 3.25 மணியளவில் பொம்மைக் குட்டைமேடு பஸ் நிறுத்தம் பகுதியில் பஸ் வந்தபோது அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் அந்த வாகனத்தில் சென்ற பேளுக்குறிச்சி மலைவேப்பன்குட்டையைச் சோ்ந்த ராஜேந்திரனின் மனைவி ஜீவா(40) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவருடன் வந்த நல்லுசாமியின் மனைவி கோமதி (27) என்பவா் பலத்த காயமடைந்தாா்.
அங்கிருந்த வா்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இந்த விபத்து குறித்து நல்லிபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
- இதனை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாமக்கல்:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டம் ரா.புதுப்பட்டி பேரூராட்சி சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.
இதில் ரா.புதுப்பட்டி பஸ் நிறுத்தம் மற்றும் மாரியம்மன் கோவில் பகுதியில் பேரூராட்சி தலைவர் சுமதி தலைமையில் துணைத் தலைவர் ஜெயக்குமார், செயல் அலுவலர் கோபி ராஜா மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கினர். இதனை தொடர்ந்து பேரூராட்சி பகுதியில் உள்ள ஒவ்வொரு வார்டிலும் வீடு, வீடாக சென்று நிலவேம்பு கசாயம் வழங்கும் பணி நடைபெற்றது.
- மே மாதம் முதல் தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது.
- என்இசிசி கூட்டத்தில், முட்டை விலை மேலும் 5 காசு உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.75 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
நாமக்கல்:
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), கடந்த மே மாதம் முதல் தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இதை அனைத்து பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று மாலை நடைபெற்ற என்இசிசி கூட்டத்தில், முட்டை விலை மேலும் 5 காசு உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.75 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
இதேபோல் பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ. 114 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 86 ஆக தென்னிந்திய கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.
- அங்கக விவசாயம் செய்யும் விவசாயிகள் இலவ சமாக அங்கக சான்றிதழ் பெற முடியும் என நாமக்கல் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர், சித்திரைசெல்வி தெரிவித்துள்ளார்.
- அங்கக விவசாயிகள் குறைந்தபட்சம் 5 முதல் அதிகபட்சம் 25 பேர் சேர்ந்து, ஒரு குழுவினை அமைக்க வேண்டும்.
பரமத்தி வேலூர்:
அங்கக விவசாயம் செய்யும் விவசாயிகள் இலவ சமாக அங்கக சான்றிதழ் பெற முடியும் என நாமக்கல் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர், சித்திரைசெல்வி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியி ருப்பதாவது:-
அங்கக சான்றிதழ் பெற விரும்பும் ஒரே கிராமத்தை சேர்ந்த அல்லது அருகிலுள்ள கிராமங்களை சேர்ந்த அங்கக விவசாயிகள் குறைந்தபட்சம் 5 முதல் அதிகபட்சம் 25 பேர் சேர்ந்து, ஒரு குழுவினை அமைக்க வேண்டும். பிறகு குழுவிற்கான பெயர் மற்றும் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். குழுவில் போதுமான அளவு பெண் உறுப்பினர்கள் இருப்பது அவசியம். குழுவினை அமைத்த பிறகு, உறுப்பினர்களின் அடிப்படை விவரங்களுடன், பங்கேற்பாளர் உத்தரவாத அமைப்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து உரிய ஆவணங்க ளுடன் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து, அதற்கான ஆவணங்களை மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு பதிவு செய்யப்படும் குழுக்களுக்கு குழு உறுப்பினர்களின் சக மதிப்பீட்டின் அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்பட்டு, சான்றிதழ்கள் இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு பதிவு செய்யப்படும் குழுக்களுக்கு ஆண்டு பயிர்களுக்கு 3 ஆண்டுகளும் நிரந்தர பயிர்களுக்கு 4 ஆண்டுகளும் மாறுதல் காலம் கடை பிடிக்கப்படுகிறது. இவ்வாறு பெறப்படும் வாய்ப்பு சான்றிதழ் மூலம், அங்கக விவசாயிகள், தங்களது விளை பொருட்களை மதிப்பு கூட்டு செய்து அதிக விலைக்கு விற்றுக் கூடுதல் லாபம் பெற முடியும் என அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் வைத்தல் மற்றும் ஊர்வலம் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவ லகத்தில் நடைபெற்றது.
- ஆலோசனை கூட்டத்திற்கு பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி தலைமை வகித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி முன்னிலை வகித்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டா ரத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் வைத்தல் மற்றும் ஊர்வலம் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவ லகத்தில் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டத்திற்கு பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி தலைமை வகித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி முன்னிலை வகித்தார். ஆலோசனை கூட்டத்தில் கடந்த வருடம் போலீசாரின் அனுமதியுடன் வைக்கப்பட்ட இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகள் வைக்க வேண்டும்.
சிலைகள் வைக்கப்படும் இடம் ஓலை மேய்ந்த குடிசையாக இருக்கக்கூடாது. தகரம் அல்லது சிமெண்ட் அட்டைகளால் தான் அமைக்கப்பட வேண்டும். சிலைகள் அனுமதிக்கப்பட்ட உயரத்தை விட அதிகமாக இருக்கக்கூடாது. போக்கு வரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சிலைகள் வைக்க வேண்டும். விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறும் போது பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டது.
கூட்டத்தில் இந்து முன்னணி நாமக்கல் மாவட்ட பொதுச்செயலாளர் கோபிநாத், மாவட்ட செயலா ளர்கள் ஜெகதீசன், சரவணன், பொருளாளர் பிரபாகரன், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- வீட்டிற்கு திரும்பிய போது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது
- பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.12 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை
பரமத்திவேலூர்
நாமக்கல் மாவட்டம் வேல கவுண்டம்பட்டி அருகே உள்ள அக்கலாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கொட்டாம்பட்டியை சேர்ந்த வர் மகேஷ் (42) விவசாயி. இவர் தனது குடும்பத்துடன் நேற்று கோவிலுக்கு சென்றார்.
பூட்டு உடைப்பு
பின்னர் வீட்டிற்கு திரும்பிய போது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மகேஷ் உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.12 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை யடித்து சென்றது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து மகேஷ் உடனடியாக வேலகவுண்டம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி மற்றும் வேலகவுண்டம்பட்டி போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் பரமத்திவேலூர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகைகள் மற்றும் ரூ.9 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இந்த நிலையில் இந்த 2 கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பலா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பகுதியில் தொடர்ந்து நடக்கும் கொள்ளை சம்பவங்கள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
- வருகிற 18-ந்தேதி (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி
- சிலைகள் ½ அடி முதல் 2 அடி வரை விற்ப னைக்கு உள்ளன. ½ அடி உள்ள விநாயகர் சிலைகளின் விலை ரூ.100-க்கும் விற்பனை
நாமக்கல்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் விற்பனை நாமக்கல்லில் மும்முர மாக நடந்து வருகிறது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்கள் தங்களுடைய வீடுகள் மற்றும் வேலை பார்க்கும் அலுவலகங்க ளில் விநாயகர் சிலைகளை வைத்து வழி படுவார்கள். அதன்படி வருகிற 18-ந்தேதி (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி கொண்டா டப்படுகிறது. இதனால் நாமக்கல்லில் விநாயகர் சிலைகள் விற்பனை மும்மு ரமாக நடந்து வருகிறது. கடைவீதி , சேலம் ரோடு, துறையூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலை கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
பல வண்ணங்களில்...
இதுகுறித்து விநாயகர் சிலை விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர் கூறும்போது:-
விநாயகர் சிலைகள் தரு மபுரி , கிருஷ்ணகிரரியில் இருந்து கொண்டுவரப்பட் டுள்ளன. சிலைகள் ½ அடி முதல் 2 அடி வரை விற்ப னைக்கு உள்ளன. ½ அடி உள்ள விநாயகர் சிலை களின் விலை ரூ.100-க்கும், 2 அடி உள்ள விநாயகர் சிலை ரூ.2 ஆயிரத்து 500-க்கும் விற்பனை செய்யப்ப டுகிறது. வண்ணம் தீட்டப்பட்ட ½ அடி உள்ள விநா யகர் சிலையின் விலை ரூ.180-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அனைத்து சிலைகளுமே மண்ணால் செய்யப் பட்டவை ஆகும். மேலும் பல வண்ணங்களில் விநா யகர் சிலைகள் உள்ளன. இதனால் மக்கள் ஆர்வமாக வந்து வாங்கி செல்கின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விநாயகர் சிலை களின் விலை ரூ.10 மற்றும் ரூ.20 உயர்ந்து உள்ளது என்றார்.
குமாரபாளையம்
குமாரபாளையம் நாராயண நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தேசிய மகளிர் போலீஸ் தினம் விடியல் ஆரம்பம் சார்பில், அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது. குமாரபாளையம் சப்-இன்ஸ்பெக்டர் சந்தியா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அவருக்கு பள்ளி தலைமை ஆசிரியை பாரதி சால்வை அணிவித்து பாராட்டினார்.இதன் பின் பேசிய சந்தியா, காவல்துறை பணி கள் பற்றியும்,அந்த துறையில் தன்னுடைய பணியை பற்றியும், மாணவிகளுக்கு உடற் பயிற்சியால் ஏற்படும் நன்மைகளையும் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, ஆரோக்கியம் பற்றியும் பேசினார். உதவி தலைமை ஆசிரியர் நவநீதன், ஆங்கில உச்சரிப்பு பயிற்சியாளர் சண்முகம், தீனா ஆகியோர் பங்கேற்றனர். போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சந்தியாவிற்கு மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில் சித்ரா, மல்லிகா, வினோதினி, மாவட்ட செயலாளர் காமராஜ் உள்பட பலர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதர பெண் போலீசாருக்கும் சால்வை அணிவிக்கப்பட்டது.
பரமத்திவேலூர்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் துணை மின் நிலையத்தில் நாளை (16-ந் தேதி) சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் மேற்கண்ட துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான பரமத்திவேலூர் பரமத்தி, நல்லியாம்பாளையம், பொத்தனூர், வி. சூரியாம்பாளை யம், வீராணம் பாளையம், கோப்பணம்பாளையம், குப்பிச்சி பாளையம், ஆகிய ஊர்களுக்கும் மேலும் மேற்கண்ட துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் இதர பகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது என பரமத்திவேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.
- பொது மக்களிடம் இருந்து டெபா சிட் பெற்று நிதி மோசடி செய்துள்ளது
- இந்த வழக்கு விசாரணை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன்கள் பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது
நாமக்கல்
நாமக்கல்லில் மோசடியில் ஈடுபட்ட ஈமு நிறுவ னத்தின் சொத்துக்கள் வரும் 20-ந் தேதி ஏலம் விடப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் தெரி வித்துள்ளார்.இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவ லர் சுமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ள தாவது:-
நாமக்கல் நகரில், மோகனூர் ரோட்டில் இயங்கி வந்த செல்லம் ஈமு பார்ம்ஸ் மற்றும் வேலவன் கார்டன் சிட்டி டெவலப்மெண்ட்ஸ் என்ற நிறுவனம் பொது மக்களிடம் இருந்து டெபா சிட் பெற்று நிதி மோசடி செய்துள்ளது. இதன்பேரில் அந்த நிறு வனம் மீது நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் வழக்குப் பதிவு செய்யப் பட்டது. இந்த வழக்கு விசா ரணை கோவையில் உள்ள, தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன்கள் பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிமன்ற உத்திரவின்படி நிறுவனத்திற்கு சொந்தமான ப.வேலூர் தாலுக்கா பிள்ளைகளத்தூரில் உள்ள 2 வீட்டுமனைகள் மற்றும் ராசிபுரம் வட்டம், காட்டூர் காட்டுக்கொட்டாய் பகுதியில் உள்ள ஒரு வீட்டு மனையும் ஏலம் விடப்பட உள்ளது.
இந்த ஏலம் இம்மாதம் 20-ந் தேதி மதியம் 2 மணிக்கு கலெக்டர் அலுவல கத்தில் ஏலம் விடப்பட உள்ளது. ஏல நிபந்தனைகள் நாமக்கல், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. மற்றும் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகங்க ளின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளன.
ஏல நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள அனைவரும், இந்த ஏலத்தில் கலந்து கொள்ளலாம். ஏல தேதிக்கு முன்பாக, நாமக்கல், பொருளாதார குற்றப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பா ளர் மூலமாக மேற்குறிப்பிட்ட சொத்துக்களை பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நிஷாந்தி திருமணத்திற்கு ஜவுளிகள் எடுக்க குடும்பத்தினர் அனைவரும் ஈரோட்டுக்கு சென்று இருந்தனர்.
- கந்தசாமியின் தாய் அருக்காணியிடம் பேச்சு கொடுத்து அவரை திசை திருப்பி வீட்டிற்குள் புகுந்தனர்.
பரமத்திவேலூர்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள குப்புச்சிபாளையம் குச்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (54). இவர் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் தாபா ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி கலைச்செல்வி (45). இவர்களது மகள் நிஷாந்தி (23).
இவருக்கு கடந்த வாரம் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் திருமணத்திற்கு ஜவுளிகள் எடுக்க குடும்பத்தினர் அனைவரும் ஈரோட்டுக்கு சென்று இருந்தனர்.
நகை, பணம் கொள்ளை
இந்தநிலையில் கந்தசாமியின் வீட்டிற்கு வந்த 2 மர்ம நபர்கள் அங்கு தனியாக இருந்த கந்தசாமியின் தாய் அருக்காணியிடம் பேச்சு கொடுத்து அவரை திசை திருப்பி வீட்டிற்குள் புகுந்தனர். பின்னர் பீரோவை திறந்து லாக்கரில் நிஷாந்தியின் திருமணத்திற்கு சீர்வரிசை கொடுப்பதற்காக வைத்திருந்த நகை மற்றும் பணத்தை அள்ளிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இது குறித்து அருக்காணி கந்தசாமிக்கு தகவல் அளித்தார். இதையடுத்து கந்தசாமி வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 60 பவுன் நகை, ரூ.9 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வேலூர் போலீசாருக்கு கந்தசாமி தகவல் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
4 தனிப்படை விசாரணை
இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.
- எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
பரமத்தி வேலூர்
சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.
இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் நிலக்கடலை காய் 110.45குவிண்டால் எடை கொண்ட 370-மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.84.70-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.62.53-க்கும், சராசரி விலையாக ரூ.82.16-க்கும் என ரூ 8 லட்சத்து 35ஆயிரத்து 317-க்கு விற்பனையானது.






