ரா.புதுப்பட்டி பேரூராட்சியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ரா.புதுப்பட்டி பேரூராட்சி சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்ட போது எடுத்த படம்.
ரா.புதுப்பட்டி பேரூராட்சி சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்ட போது எடுத்த படம்.
Published on

நாமக்கல்:

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டம் ரா.புதுப்பட்டி பேரூராட்சி சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.

இதில் ரா.புதுப்பட்டி பஸ் நிறுத்தம் மற்றும் மாரியம்மன் கோவில் பகுதியில் பேரூராட்சி தலைவர் சுமதி தலைமையில் துணைத் தலைவர் ஜெயக்குமார், செயல் அலுவலர் கோபி ராஜா மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கினர். இதனை தொடர்ந்து பேரூராட்சி பகுதியில் உள்ள ஒவ்வொரு வார்டிலும் வீடு, வீடாக சென்று நிலவேம்பு கசாயம் வழங்கும் பணி நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com