search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அங்கக விவசாயம் செய்யும் விவசாயிகள்இலவசமாக அங்கக சான்றிதழ் பெற ஆலோசனை
    X

    அங்கக விவசாயம் செய்யும் விவசாயிகள்இலவசமாக அங்கக சான்றிதழ் பெற ஆலோசனை

    • அங்கக விவசாயம் செய்யும் விவசாயிகள் இலவ சமாக அங்கக சான்றிதழ் பெற முடியும் என நாமக்கல் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர், சித்திரைசெல்வி தெரிவித்துள்ளார்.
    • அங்கக விவசாயிகள் குறைந்தபட்சம் 5 முதல் அதிகபட்சம் 25 பேர் சேர்ந்து, ஒரு குழுவினை அமைக்க வேண்டும்.

    பரமத்தி வேலூர்:

    அங்கக விவசாயம் செய்யும் விவசாயிகள் இலவ சமாக அங்கக சான்றிதழ் பெற முடியும் என நாமக்கல் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர், சித்திரைசெல்வி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியி ருப்பதாவது:-

    அங்கக சான்றிதழ் பெற விரும்பும் ஒரே கிராமத்தை சேர்ந்த அல்லது அருகிலுள்ள கிராமங்களை சேர்ந்த அங்கக விவசாயிகள் குறைந்தபட்சம் 5 முதல் அதிகபட்சம் 25 பேர் சேர்ந்து, ஒரு குழுவினை அமைக்க வேண்டும். பிறகு குழுவிற்கான பெயர் மற்றும் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். குழுவில் போதுமான அளவு பெண் உறுப்பினர்கள் இருப்பது அவசியம். குழுவினை அமைத்த பிறகு, உறுப்பினர்களின் அடிப்படை விவரங்களுடன், பங்கேற்பாளர் உத்தரவாத அமைப்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து உரிய ஆவணங்க ளுடன் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து, அதற்கான ஆவணங்களை மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு பதிவு செய்யப்படும் குழுக்களுக்கு குழு உறுப்பினர்களின் சக மதிப்பீட்டின் அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்பட்டு, சான்றிதழ்கள் இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு பதிவு செய்யப்படும் குழுக்களுக்கு ஆண்டு பயிர்களுக்கு 3 ஆண்டுகளும் நிரந்தர பயிர்களுக்கு 4 ஆண்டுகளும் மாறுதல் காலம் கடை பிடிக்கப்படுகிறது. இவ்வாறு பெறப்படும் வாய்ப்பு சான்றிதழ் மூலம், அங்கக விவசாயிகள், தங்களது விளை பொருட்களை மதிப்பு கூட்டு செய்து அதிக விலைக்கு விற்றுக் கூடுதல் லாபம் பெற முடியும் என அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×