என் மலர்
நீங்கள் தேடியது "Consultative meeting on regulations"
- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் வைத்தல் மற்றும் ஊர்வலம் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவ லகத்தில் நடைபெற்றது.
- ஆலோசனை கூட்டத்திற்கு பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி தலைமை வகித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி முன்னிலை வகித்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டா ரத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் வைத்தல் மற்றும் ஊர்வலம் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவ லகத்தில் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டத்திற்கு பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி தலைமை வகித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி முன்னிலை வகித்தார். ஆலோசனை கூட்டத்தில் கடந்த வருடம் போலீசாரின் அனுமதியுடன் வைக்கப்பட்ட இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகள் வைக்க வேண்டும்.
சிலைகள் வைக்கப்படும் இடம் ஓலை மேய்ந்த குடிசையாக இருக்கக்கூடாது. தகரம் அல்லது சிமெண்ட் அட்டைகளால் தான் அமைக்கப்பட வேண்டும். சிலைகள் அனுமதிக்கப்பட்ட உயரத்தை விட அதிகமாக இருக்கக்கூடாது. போக்கு வரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சிலைகள் வைக்க வேண்டும். விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறும் போது பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டது.
கூட்டத்தில் இந்து முன்னணி நாமக்கல் மாவட்ட பொதுச்செயலாளர் கோபிநாத், மாவட்ட செயலா ளர்கள் ஜெகதீசன், சரவணன், பொருளாளர் பிரபாகரன், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






