என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Neem decoction"

    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
    • இதனை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நாமக்கல்:

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டம் ரா.புதுப்பட்டி பேரூராட்சி சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.

    இதில் ரா.புதுப்பட்டி பஸ் நிறுத்தம் மற்றும் மாரியம்மன் கோவில் பகுதியில் பேரூராட்சி தலைவர் சுமதி தலைமையில் துணைத் தலைவர் ஜெயக்குமார், செயல் அலுவலர் கோபி ராஜா மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கினர். இதனை தொடர்ந்து பேரூராட்சி பகுதியில் உள்ள ஒவ்வொரு வார்டிலும் வீடு, வீடாக சென்று நிலவேம்பு கசாயம் வழங்கும் பணி நடைபெற்றது.

    • பருவநிலை மாற்றம் காரணமாக புதுவையில் வைரஸ் காய்ச்சல் அதிகமாக பரவுகிறது.
    • மைய நிர்வாகி மதன் பாபு வீடுவீடாக சென்று நிலவேம்பு கசாயம் வழங்குவதை தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    பருவநிலை மாற்றம் காரணமாக புதுவையில் வைரஸ் காய்ச்சல் அதிகமாக பரவுகிறது.

    வைரஸ் காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோலை நகர் முழுவதும் நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு தி.மு.க. பொதுமக்கள் சேவை மையம் மூலம் வழங்கப்பட்டது. மைய நிர்வாகி மதன் பாபு வீடுவீடாக சென்று நிலவேம்பு கசாயம் வழங்குவதை தொடங்கி வைத்தார்.

    தி.மு.க. தொகுதி செயலாளர் சவுரிராஜன், முன்னாள் கவுன்சிலர்கள் ரவி,தனசேகர் மற்றும் எழிலன், கோபிநாத், நவீன், தங்கராசு ,செந்தில் முருகன், சந்திரன், செல்வராஜ், முருகன், மற்றும் பார்த்திபன், ஸ்ரீகாந்த், கார்த்திகேயன், குமரன், ஜவகர் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

    ×