என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • எஸ்.வாழவந்தி துணைமின் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் மின் சாதனப் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்நிறுத்தம்.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    நாமக்கல்:

    எஸ்.வாழவந்தி துணைமின் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் மின் சாதனப் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (19- ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இதே போல் மோகனூர், ஒருவந்தூர், வளையப்பட்டி, புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, வடுகப்பட்டி , நெட்டையாம்பட்டி, ஜம்புமடை, செவ்வந்திபட்டி, குரும்பட்டி, நல்லூர், திப்ரமாதேவி, அரூர்மேடு ஆகிய பகுதிகளில் நாளை (19- ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
    • அதனைத் தொடர்ந்து மழை சற்று வேகமாக பெய்ய ஆரம்பித்தது. இரவு முழுவதும் மழை பெய்து கொண்டிருந்தது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, பரமத்தி, ஒத்தக்கடை, கந்தம்பாளையம், நல்லூர், மணியனூர் ,பெருங்குறிச்சி, குப்பிக்காபாளையம், சுள்ளிப் பாளையம், சோளசிராமணி, ஜமீன் இளம்பள்ளி, குரும்பல மகாதேவி, கொத்தமங்கலம், சிறுநல்லிகோவில், திடுமல், தி.கவுண்டம்பாளையம், பெரியசோளிபாளையம், கபிலக்குறிச்சி, இருக்கூர், வடகரை யாத்தூர், கு.அய்யம்பா ளையம், பிலிக்கல்பாளையம், சேளூர், கொந்தளம், கோப்ப ணம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.

    அதனைத் தொடர்ந்து மழை சற்று வேகமாக பெய்ய ஆரம்பித்தது. இரவு முழுவதும் மழை பெய்து கொண்டிருந்தது. இதன் காரணமாக தார் சாலை வழியாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நனைந்து கொண்டு அவதிப்பட்டு சென்றனர் .அதேபோல் சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த கட்டில் கடைகள், சிற்றுண்டி கடைகள், பூக்கடைகள் பழக்கடைகள் ,பலகார கடைகள், துணிக்கடைகள், மண்பாண்டம் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பல்வேறு கடைக்காரர்கள் மழையின் காரணமாக வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.

    தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மழையின் காரணமாக வெப்ப சீதோசன நிலை மாறி குளிர்ச்சியான சீதோசன நிலை ஏற்பட்டது. கடும் வெயிலின் காரணமாக பயிர்கள் வாடிய நிலையில் இருத்தது. மழையின் காரணமாக பயிர்கள் துளிர் விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மழையின் காரணமாக வியாபாரிகள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

    • குணசேகரன் மகன் வசந்தகுமார் (22). இவர் பள்ளி பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார்.
    • சவுந்தர்யா (21). இவர் ஈரோடு அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடமாக ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சேளூர் பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் வசந்தகுமார் (22). இவர் பள்ளி பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார்.

    திருச்செங்கோடு அருகே உள்ள ஆவாரம்பாளையம் ஆயக்காட்டை சேர்ந்தவர் சவுந்தர்யா (21). இவர் ஈரோடு அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடமாக ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர்.

    இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இவர்களது காதல் பெற்றோர்களுக்கு தெரிய வந்ததால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் காதல் ஜோடியினர் இருவரும் ஈரோடு மாவட்டம், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பெற்றோர்களுக்கு பயந்து பரமத்தி வேலூர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இரு தரப்பு பெற்றோர்க ளையும் போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் சவுந்தர்யா தனது காதல் கணவருடன்தான் செல்வேன் என கூறியதால் போலீசார் அவரை வசந்தகுமாருடன் அனுப்பி வைத்தனர்.

    • பஞ்சமுக ஹேரம்ப விநாயகர் கோவிலில் கடந்த 15-ந் தேதி முதல் விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • விழாவை முன்னிட்டு 108 வலம்புரி சங்கு மற்றும் 1008 சங்காபிஷேகமும் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பேட்டையில் பஞ்சமுக ஹேரம்ப விநாயகர் கோவிலில் கடந்த 15-ந் தேதி முதல் விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவை முன்னிட்டு 108 வலம்புரி சங்கு மற்றும் 1008 சங்காபிஷேகமும் நடைபெற்றது. சங்காபி ஷேகத்தை முன்னிட்டு வலம்புரி சங்குகள் வைக்கப்பட்டு சங்குகளுக்கு புனித நீரூற்றி அதில் பல்வேறு வகையான பூக்கள் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அக்னி குண்டத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓதி ஹோமம் செய்தனர்.

    தொடர்ந்து பஞ்சமுக ஹேரம்ப விநாயகருக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பஞ்சமுகஹேரம்ப விநாயகரை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ- மாணவிகள் மருத்துவ படிப்பு படித்து வருகின்றனர்.
    • நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் உணவு சாப்பிட்டனர். இதையடுத்து அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ- மாணவிகள் மருத்துவ படிப்பு படித்து வருகின்றனர். இதில் 13 மாணவர்கள் நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் உணவு சாப்பிட்டனர். இதையடுத்து அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் 13 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்தி ரியில் சேர்ந்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அவர்கள் சாப்பிட்ட உணவு சுகாதார இல்லாத உணவு என கூறப்படுகிறது. இதனால் அந்த உணவு விஷமாக மாறியதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • கபிலர்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சித்த மருத்துவ பிரிவு இணைந்து நடத்திய இலவச சித்த மருத்துவ முகாம் பரமத்திவேலூரில் நடைபெற்றது.
    • முகாமிற்கு முன்னாள் நிலவள வங்கி தலைவர் சந்துரு தலைமை வகித்தார்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் அரசு மருத்துவமனை சித்தமருத்துவ பிரிவு மற்றும் கபிலர்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சித்த மருத்துவ பிரிவு இணைந்து நடத்திய இலவச சித்த மருத்துவ முகாம் பரமத்திவேலூரில் நடைபெற்றது. முகாமிற்கு முன்னாள் நிலவள வங்கி தலைவர் சந்துரு தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற கூட்டுறவு கட்டிட சங்க செயலாளர் ஆறுமுக குமரன், ஓய்வுபெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னத்தம்பி, வேலூர் பேரூராட்சி முன்னாள் உறுப்பினர் பரமசிவம், அரசு வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் வழக்கறிஞர் முத்துவீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் பேரூராட்சி தலைவர் லட்சுமி முரளி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் மூட்டு வலி, தோல் நோய்கள், சுவாச நோய்கள், மூலம், பெண்களுக்கான மாதவிடாய் பிரச்சனை உள்ளிட்ட நோய்களுக்கு சித்த மருத்துவ டாக்டர்கள் ஆலோசனைகள் வழங்கி இலவசமாக மருந்து மாத்திரைகளை வழங்கினர். முகாமில் வேலூர் சித்த மருத்துவர் பிரிவு டாக்டர் பிரவேஷ்பாபு, கபிலர்மலை அரசு ஆரம்ப சுகாதார சித்த மருத்துவ பிரிவு டாக்டர் சித்ரா மற்றும் டாக்டர்கள் கோகிலா, செல்வராஜ் உள்ளிட்ட டாக்டர்கள் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டனர். பரமத்தி வேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 205 பேர் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • பரமத்திவேலூர் காவிரி கரை யோர பகுதிகளில் பல்லாயி ரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது.
    • விவசாயிகள் பரமத்தி வேலூர் ஏலச்சந்தைக்கு நேரடியாக வாழைத்தார்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி கரை யோர பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர், வேலூர், அனிச்சம் பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி மற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயி ரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது.

    இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

    ஏலச்சந்தை

    சிறு விவசாயிகள் பரமத்தி வேலூர் ஏலச்சந்தைக்கு நேரடியாக வாழைத்தார்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், ரஸ்தாலி அதிகபட்சமாக ரூ.300-க்கும், பச்சைநாடன் அதிகபட்சமாக ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.350-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.5-க்கும் ஏலம் போனது.

    விலை உயர்வு

    இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.500-க்கும், ரஸ்தாலி அதிகபட்சமாக ரூ.400-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.450-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.10-க்கு விற்பனையானது.

    விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வாழைத்தார்கள் விலை உயர்வடைந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • சுப்பிரமணி விவசாயம் பார்த்துக்கொண்டு பால் வியாபாரம் செய்து வந்தார்.
    • சாலையில் வந்து கொண்டிருந்தபோது ஜேடர்பாளையத்திலிருந்து பரமத்தி நோக்கி அதிவேகமாக வந்த லாரி சுப்பிரமணி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே அரசம்பாளையம் காலனி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (57). இவரது மனைவி விஜயா (53). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

    இந்நிலையில் சுப்பிரமணி விவசாயம் பார்த்துக்கொண்டு பால் வியாபாரம் செய்து வந்தார். நேற்று மதியம் ஜாதகம் பார்ப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் பரமத்திவேலூர் சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

    பரமத்தி- ஜேடர்பாளையம் சாலையில் வந்து கொண்டிருந்தபோது ஜேடர்பாளையத்திலிருந்து பரமத்தி நோக்கி அதிவேகமாக வந்த லாரி சுப்பிரமணி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சுப்பிரமணி நிலைத்தடுமாறி விழுந்ததில் பலத்த காயமடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சுப்பிரமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனிடையே லாரி டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு தப்பியோடி விட்டார்.

    விபத்து குறித்து சுப்பிரமணியின் மனைவி விஜயா ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் லாரி டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • சின்னகரசப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (60) விவசாயி.
    • அவருக்கு சொந்தமான விவசாய கிணறு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கினார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா சின்னகரசப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (60) விவசாயி.

    இவர் நேற்று இரவு சின்னக்கரசபாளையம் கூலக்காடு பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான விவசாய கிணறு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கினார்.

    இதனிடையே இரவு வெகுநேரம் ஆகியும் பாலசுப்பிரமணியன் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு பகுதிகளில் தேடி பார்த்தனர். அப்போது பாலசுப்பிரமணியன் செருப்பு தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது.

    உடனடியாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் கிணற்றுக்குள் தேடி பாலசுப்ரமணியனை பிணமாக மீட்டனர். பின்னர் இது குறித்து பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலசுப்ரமணியன் உடலை பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்செங்கோடு தலைமையகத்தில் நடைபெற்ற கொப்பரை ஏலத்தில் 165 மூட்டைகள் வந்தது.
    • மொத்தம் ரூ.5லட்சத்து 66ஆயிரத்துக்கு விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கம் திருச்செங்கோடு தலைமையகத்தில் நடைபெற்ற கொப்பரை ஏலத்தில் 165 மூட்டைகள் வந்தது. முதல் தரம் கிலோ ரூ 69 முதல் ரூ 77 வரையிலும், 2-ம் தரம் கிலோ ரூ 55 முதல் ரூ.68 வரையிலும் விலை போனது. மொத்தம் ரூ.5லட்சத்து 66ஆயிரத்துக்கு விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தொழில் மையம் சார்பில், மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மேம்பாட்டுக்கான சிறப்பு கடன் வழங்கும் முகாம், நாமக்கல்லில் நடைபெற்றது.
    • இதனைத் தொடர்ந்து முகாமில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சகுந்தலா பல்வேறு கடன் உதவி திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட தொழில் மையம் சார்பில், மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மேம்பாட்டுக்கான சிறப்பு கடன் வழங்கும் முகாம், நாமக்கல்லில் நடைபெற்றது.

    மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் வங்கி சார்பில், மத்திய அரசின் கடனுதவி திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு வாகனத்தை இந்தியன் வங்கியின் திருப்பூர் மண்டல மேலாளர் ஸ்ரீனிவாஸ் தொடங்கி வைத்தார். மாவட்டம் முழுவதும் செல்லும் வாகனங்கள் பொதுமக்களிடையே, மத்திய அரசின் கடன் திட்டங்கள், வங்கி சேவைகள் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்த உள்ளன.

    இதனைத் தொடர்ந்து முகாமில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சகுந்தலா பல்வேறு கடன் உதவி திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். தொடர்ந்து, மத்திய, மாநில அரசு துறைகள் மூலம் பல்வேறு தொழில்களின் மேம்பாட்டுக்காக 120 தொழில் முனைவோருக்கு ரூ. 16.50 கோடி கடனுதவிகளை, நாமக்கல் மாவட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் சங்கத் தலைவர் கோஸ்டல் இளங்கோ வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் தாட்கோ மாவட்ட மேலாளர் ராமசாமி, கனரா வங்கியின் துணை பொது மேலாளர் மோகன், மாவட்ட தொழில் மைய உதவி பொறியாளர் ஜான்சிராணி, கடன் ஆலோகர் அசோகன், முன்னோடி வங்கி மாவட்ட மேலாளர் முருகன் மற்றும் திரளான தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.

    • நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கம், மாவட்ட திட்ட அலுவலகம் மற்றும் மாவட்ட ஆசிரியா் கல்வி நிறுவனத்தில் பயிற்சி நடைபெற்றது.
    • இப்பயிற்சி முகாமை முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, மாவட்ட ஆசிரியா் கல்வி நிறுவன முதல்வா் பாஸ்கரன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் மாவட்டக் கல்வி அலுவலா்கள் (இடைநிலை, தொடக்கநிலை), முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் (மேல்நிலை, உயா்நிலை), உதவி திட்ட அலுவலா்-1, உதவி திட்ட அலுவலா்-2, பள்ளி துணை ஆய்வாளா்கள், அரசு மேல்நிலை, உயா்நிலைப்பள்ளி தலைமையாசிரியா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள், வட்டார வளமைய மேற்பாா்வையாளா்கள், ஆசிரியா் பயிற்றுநா்கள் ஆகியோருக்கு இந்தப் பயிற்சி வழங்கப்பட்டது.

    நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கம், மாவட்ட திட்ட அலுவலகம் மற்றும் மாவட்ட ஆசிரியா் கல்வி நிறுவனத்தில் பயிற்சி நடைபெற்றது.

    இப்பயிற்சி முகாமை முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, மாவட்ட ஆசிரியா் கல்வி நிறுவன முதல்வா் பாஸ்கரன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். அவா்கள் பள்ளிகளில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடா்பான வழிகாட்டுதல்களை வழங்கினா்.

    குறிப்பாக, பள்ளி வகுப்பறை செயல்பாடுகளை எவ்வாறு பாா்வையிடுவது, ஆசிரியா்கள், மாணவா்களின் கலந்துரையாடலை பாா்வையிட்டு தகவல்கள் சேகரிப்பது, தகவல்களின் உண்மைத் தன்மை, அதன் முக்கியத்துவம், பள்ளிப் பாா்வை செயலியில் பதிவிடுவது போன்றவை குறித்து கலந்துரையாடப்பட்டது.

    இதில் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளா் முருகன், மல்லசமுத்திரம் வட்டாரக் கல்வி அலுவலா் சக்திவேல், நாமக்கல் வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா் ரவிக்குமாா், பள்ளி துணை ஆய்வாளா்கள் கை.பெரியசாமி, கிருஷ்ணமூா்த்தி உள்பட 268 போ் கலந்து கொண்டனர்.

    ×