விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்களின் விலை கிடு கிடு உயர்வு

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் தினசரி பூக்கள் ஏல மார்க்கெட்டிற்கு கொண்டு வருகின்றனர். பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்களின் விலை கிடு கிடு உயர்வு
Published on

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் குண்டு மல்லி, முல்லை பூ, சம்பங்கி, ரோஜா, செவ்வந்தி, அரளி, கனகாம்பரம் உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.

இங்கு விளையும் பூக்களை கூலி ஆட்கள் மூலம் பறித்து விவசாயிகள் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் தினசரி பூக்கள் ஏல மார்க்கெட்டிற்கு கொண்டு வருகின்றனர். பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.

கடந்த வாரம் குண்டுமல்லி ஒரு கிலோ ரூ.400- க்கும்,சம்பங்கி கிலோ ரூ.120- க்கும், அரளி கிலோ ரூ.130- க்கும், ரோஜா கிலோ ரூ.200- க்கும், முல்லைப் பூ ரூ.400- க்கும், செவ்வந்திப்பூ ரூ.200- க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும் விற்பனையானது.நேற்று குண்டு மல்லி ஒரு கிலோ ரூ.1200-க்கும், சம்பங்கி கிலோ ரூ.300- க்கும், அரளி கிலோ ரூ.250- க்கும், ரோஜா கிலோ ரூ.300- முல்லைப் பூ கிலோ ரூ.1200-க்கும், செவ்வந்திப்பூ ரூ.320- க்கும், கனகாம்பரம் ரூ.1100-க்கும் விற்பனையானது. பூக்கள் விலை உயர்வடைந்துள்ளதால் பூ பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com