என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலவச சித்த மருத்துவ முகாம்
    X

    பரமத்தி வேலூரில் சித்த மருத்துவ முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்

    இலவச சித்த மருத்துவ முகாம்

    • கபிலர்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சித்த மருத்துவ பிரிவு இணைந்து நடத்திய இலவச சித்த மருத்துவ முகாம் பரமத்திவேலூரில் நடைபெற்றது.
    • முகாமிற்கு முன்னாள் நிலவள வங்கி தலைவர் சந்துரு தலைமை வகித்தார்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் அரசு மருத்துவமனை சித்தமருத்துவ பிரிவு மற்றும் கபிலர்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சித்த மருத்துவ பிரிவு இணைந்து நடத்திய இலவச சித்த மருத்துவ முகாம் பரமத்திவேலூரில் நடைபெற்றது. முகாமிற்கு முன்னாள் நிலவள வங்கி தலைவர் சந்துரு தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற கூட்டுறவு கட்டிட சங்க செயலாளர் ஆறுமுக குமரன், ஓய்வுபெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னத்தம்பி, வேலூர் பேரூராட்சி முன்னாள் உறுப்பினர் பரமசிவம், அரசு வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் வழக்கறிஞர் முத்துவீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் பேரூராட்சி தலைவர் லட்சுமி முரளி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் மூட்டு வலி, தோல் நோய்கள், சுவாச நோய்கள், மூலம், பெண்களுக்கான மாதவிடாய் பிரச்சனை உள்ளிட்ட நோய்களுக்கு சித்த மருத்துவ டாக்டர்கள் ஆலோசனைகள் வழங்கி இலவசமாக மருந்து மாத்திரைகளை வழங்கினர். முகாமில் வேலூர் சித்த மருத்துவர் பிரிவு டாக்டர் பிரவேஷ்பாபு, கபிலர்மலை அரசு ஆரம்ப சுகாதார சித்த மருத்துவ பிரிவு டாக்டர் சித்ரா மற்றும் டாக்டர்கள் கோகிலா, செல்வராஜ் உள்ளிட்ட டாக்டர்கள் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டனர். பரமத்தி வேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 205 பேர் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    Next Story
    ×