என் மலர்
நாமக்கல்
- எருமப்பட்டி, காளப்பநாய்க்கன்பட்டி துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
- எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
நாமக்கல்:
நாமக்கல் மின்வாரிய செயற் பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் கோட்டத்தில், அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின்சார விநியோகம் செய்வதற்காக, ஒவ்வொரு துணை மின் நிலையத்திற்கு உட்பட பகுதியிலும், மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி, துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (21-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் தடை செய்யப்படும். இதனால் எருமப்பட்டி, வரகூர், பொட்டிரெட்டிப்பட்டி, அலங்கா நத்தம், தோட்ட முடையாம்பட்டி, நவலடிப்பட்டி, பவித்திரம், தேவராயபும், முட்டான்செட்டி, வரதராஜ புரம், சிங்களங்கோம்பை, காவக்காரம்பட்டி, பவித்தி ரம்புதூர், செல்லிபாளையம், கஸ்தூரிப்பட்டி மற்றும் எருமப்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
காளப்பநாய்க்கன்பட்டி
காளப்பநாய்க்கன்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (21-ந் தேதி), பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை, காளப்பநாய்க்கன்பட்டி, பேளுக்குறிச்சி, திரும லைப்பட்டி, கொல்லிமலை, காரவள்ளி, ராமநாத புரம்புதூர், பள்ளம்பாறை, உத்திரகிடிகாவல், துத்திக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் சுமாா் 30 ஏக்கா் பரப்பளவில் ரூ.450 கோடியில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
- மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் 2 முறை நேரடியாக வந்து ஆய்வு மேற்கொண்டாா்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் சுமாா் 30 ஏக்கா் பரப்பளவில் ரூ.450 கோடியில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள மருத்துவ கல்லூரி செயல்பட்டு வரும் நிலையில் புதிய மருத்துவமனைக்கான பணிகள் நிறைவடைந்து ஓராண்டுக்கு மேலாகியும் செயல்படாமல் உள்ளது.
குடிநீர் வசதி
மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் 2 முறை நேரடியாக வந்து ஆய்வு மேற்கொண்டாா். மருத்துவமனைக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் வந்துவிட்ட நிலையில் முக்கிய தேவையான குடிநீா் வசதி இல்லாமல் உள்ளது.
அரசு மருத்துவமனை கட்டுமானப் பணியின்போது 11 ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தும் ஒன்றில் கூட தண்ணீா் கிடைக்கவில்லை. இதனால் மாற்று ஏற்பாடாக நாமக்கல் நகராட்சி மூலம் அரசு மருத்துவக் கல்லூரிக்கும், மாணவா்கள், ஆசிரியா்களின் விடுதிகளுக்கும் குடிநீா் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.
புதிய குடிநீா் திட்டப் பணிகளுக்காக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தமிழக அரசு ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அதாவது, ஜேடா்பாளையத்தில் இருந்து பெரியமணலி அருகே முசிறிப்புதூருக்கு வரும் காவிரி குடிநீரை புதிய அரசு மருத்துவமனை கட்டடத்திற்கு கொண்டு வருவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
90 சதவீத பணிகள்
சுமாா் 12.5 கி.மீ. தொலை வுடைய இந்தப் பகுதிக்கு குழாய் பதிக்கும் பணி 3 மாதங்களுக்கு முன்பாகத் தொடங்கியது. நாமக்கல் மாவட்ட குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் இணைந்து ஒப்பந்ததாரா்கள் பணியை மேற்கொண்டு வருகின்றனா். தற்போது 90 சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளன.
முசிறிப்புதூரில் 30 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி உள்ளது. இங்கிருந்து 15 லட்சம் லிட்டா் நீா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதற்காக முசிறிப்புதூரில் 30 ஹெச்.பி திறன் கொண்ட மோட்டாா் பொருத்தும் பணி மட்டும் நிலுவையில் உள்ளது. புது டெல்லியில் இருந்து அந்த மோட்டாா் வரவேண்டும் என்பதால் பணிகளில் தாமதம் நிலவுவதாக தெரிகிறது. அந்த மோட்டாா் பொருத்தப்பட்டு விட்டால் ஓரிரு மாதங்களில் புதிய அரசு மருத்துவ மனைக் கட்டிடம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும்.
இது குறித்து குடிநீா் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
நாமக்கல் புதிய அரசு மருத்துவ மனைக்காக குடிநீா் குழாய் பதிக்கும் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. வேலகவுண்டம்பட்டி அருகில் முசிறிப்புதூரில் இருந்து பொப்பம்பட்டி, மட்டப்பாறை புதூா், காதப்பள்ளி, காவல்துறை ஆயுதப்படை வளாகம் வழியாக 12.5 கி.மீ. தொலைவுக்கு குடிநீா் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தற்போது 11.7 கி.மீ. தொலைவுக்கு குழாய் பதிக்கப் பட்டுள்ளது. முக்கியமான இடங்களில் 22 ஏா் வால்வுகள் பொருத்தப்பட்டுள்ன.
15 லட்சம் லிட்டர் தண்ணீர்
30 லட்சம் லிட்டா் கொள்ள ளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் இருந்து 15 லட்சம் லிட்டா் நீா் அரசு மருத்துவக்கல்லூரி, புதிய மருத்துவமனைக் கட்டடத்திற்கு விநியோகம் செய்யப்பட உள்ளன. 30 குதிரைத் திறன் கொண்ட மோட்டாா் பொருத்தும் பணி ஓரிரு நாளில் தொடங்கும். அதன்பிறகு முழுமையாக குடிநீா் வழங்குவதற்கான நடை முறைகள் பின்பற்றப்படும். இதற்காக 1000 லிட்டருக்கு ரூ.75 வீதம் மருத்துவமனை நிா்வாகத்திடம் கட்டணமாக வசூலிக்கப்படும்.
சுமாா் ரூ.7 கோடி மதிப்பீட்டில் இந்தப் பணிகள் நடைபெற்று உள்ளன. அடுத்து சித்த மருத்துவக் கல்லூரி, சட்டக்கல்லூரி அமையும்பட்சத்தில் குடிநீா் தேவையென்றால் கூடுதலாக குழாய்களை பதித்து நீரை விநியோகம் செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- கபிலர்மலை அருகே உள்ள செஞ்சுடையாம் பாளையத்தில் உள்ள நாராயணமூர்த்தி என்பவரது வீட்டில் சென்ட்ரிங் வேலையில் ஈடுபட்டிருந்தார்.
- அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ராமதேவம் ஊராட்சிக்கு உட்பட்ட வாழநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் கிருஷ்ணகுமார் (34) கட்டிட தொழிலாளி. இவர் நேற்று கபிலர்மலை அருகே உள்ள செஞ்சுடையாம் பாளையத்தில் உள்ள நாராயணமூர்த்தி என்பவரது வீட்டில் சென்ட்ரிங் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதை பார்த்த அவருடன் வேலை பார்த்த சக தொழிலாளர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வர வைக்கப்பட்டு அவரை காப்பாற்றி பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து பரமத்தி போலீசில் புகார் செய்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்தி போலீசார் கிருஷ்ணகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விநாயகர் சிலைகள் வருகிற வெள்ளிக்கிழமை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட உள்ளது.
- விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லும் சிலைகள் கரைக்கப்படும் காவிரி ஆறு உள்ளிட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பரமத்திவேலூர்:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பரமத்திவேலூர் வட்டாரத்தில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் வருகிற வெள்ளிக்கிழமை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட உள்ளது.
ஆய்வு
இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் உள்ள காத்தாக்கண்டர் கடைவீதி பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம், அங்கிருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லும் திருவள்ளுவர் சாலை, பழைய பைபாஸ் சாலை, சந்தை பகுதி, பஸ் நிலையம் மற்றும் அண்ணா சாலை, காவிரி சாலை மற்றும் சிலைகள் கரைக்கப்படும் காவிரி ஆறு உள்ளிட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
600 போலீசார் பாதுகாப்பு
விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறும் வெள்ளிக்கிழமை அன்று போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலை மையில் சுமார் 600- க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி தெரிவித்தார்.
+4
- தனியார் ஓட்டல் ஒன்றில் கடந்த 16-ந் தேதி ஷவர்மா உள்ளிட்ட உணவை வாங்கி சாப்பிட்ட 44 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.
- இதைத்தொடர்ந்து நாமக்கல் கலெக்டர் உமா ஆஸ்பத்திரிகளுக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
நாமக்கல்:
நாமக்கல் பரமத்தி ரோட்டில் பழைய நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் கடந்த 16-ந் தேதி ஷவர்மா உள்ளிட்ட உணவை வாங்கி சாப்பிட்ட 44 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.
மாணவி இறந்தார்
இதில் நாமக்கல் கோட்டை நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்த மாணவி கலையரசி (14) என்பவர் உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து நாமக்கல் கலெக்டர் உமா ஆஸ்பத்திரிகளுக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
மேலும், சம்மந்தப்பட்ட கடைக்கு நேரில் சென்று சோதனை நடத்தி அந்த கடையை மூடி சீல் வைக்க உத்தரவிட்டார்.
4 பேர் கைது
மேலும் இது தொடர்பான புகாரின் பேரில் கடை உரிமையாளர் நவீன்குமார், ஓட்டலின் சமையல் தொழிலாளர்கள் 2 பேர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஓட்டலுக்கு கோழி இறைச்சி சப்ளை செய்த ராமாபுரம்புதூர் பகுதியில் உள்ள கறிக்கோழிக் கடையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதில் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனை செய்ததாக உரிமையாளர் சீனிவாசன் என்பவரை நேற்று கைது செய்தனர். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
விற்பனைக்கு தடை
இந்த சம்பவத்தை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள ஓட்டல்களில் சவர்மா, கிரில் சிக்கன், தந்தூரி சிக்கன் உணவு வகைகள் தயாரித்து விற்பனை செய்வதற்கு கலெக்டர் தடை விதித்துள்ளார். மேலும் மாவட்டத்தில் உள்ள ஓட்டல்கள், பாஸ்ட் புட் உணவகங்கள், மீன் இறைச்சி கடைகள், கறிக்கோழிக் கடைகள் உள்ளிட்ட கடைகளை சோதனையிடவும் உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து நேற்று முதல் சுகாதார மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மாவட்டத்தில் உள்ள ஓட்டல்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
குமாரபாளையம்
குமாரபாளையம் பகுதியில் உள்ள ஓட்டல்களில் நகராட்சி ஆணையர் சரவணன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு) சதீஷ், சுகாதார ஆய்வாளர்கள் சந்தான கிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் 9 கிலோ கிரில் சிக்கன், குளிர் சாதன பெட்டியில் பாக்கெட் செய்து வைக்கப்பட்ட 4 கிலோ பிரியாணி, 25 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அழித்தனர். அபராதமாக ரூ.7 ஆயிரம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வு தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருச்செங்கோடு
திருச்செங்கோடு சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், சுகாதாரத் துறை அதிகாரிகள் இணைந்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் 2 ஓட்டல்களில் இருந்து பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த கெட்டுப் போன சுமார் 250 கிலோ எடையுள்ள பழைய இறைச்சி, மீன் துண்டுகள், ஆகியவை கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. ஓட்டல் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப் பட்டது.
இதேபோல் நகரப் பகுதிகளில் உள்ள அனைத்து ஓட்டல்களிலும் அதிகாரிகள் அதிரடி சோதனை செய்தனர். இந்த ஆய்வு பணிகளில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் சிங்கார வேலன், நகர துப்புரவு அலுவலர் வெங்கடாசலம் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டனர்.
பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் பகுதியில் உள்ள 21 ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரி முத்துசாமி தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். இதில் உரிமம் பெறாமல் இயங்கிய 2 ஓட்டல்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் உணவு பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்குமாறு ஓட்டல்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த ஆய்வின்போது உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி, வேலூர் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் குருசாமி, துப்புரவு மேற்பார்வையாளர் ஜனார்த்தனன் உடன் இருந்தனர்.
பள்ளிப்பாளையம்
பள்ளிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அசைவ ஓட்டலில் நேற்று ஈரோடு உணவு பாதுகாப்பு துறை அலுவலர் குழந்தைவேல் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பள்ளிப்பாளையம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் அடங்கிய குழு ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் மொத்தம் 19 அசைவ ஓட்டிலில் ஆய்வு மேற்கொண்டு 3 ஓட்டலில் கெட்டுபோன 7½ கிலோ கோழி இறைச்சி குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அதிகாரிகள் பினாயில் ஊற்றி அழித்தனர். மேலும் சம்மந்தப்பட்ட 3 ஓட்டலுக்கும் தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
இதேபோல் இன்றும் சேந்தமங்கலம், ராசிபுரம், கொல்லிமலை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
- தமிழகத்திலும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் விரும்பி சாப்பிடும் உணவாக 'சவர்மா' இருக்கிறது.
- சில பாக்டீரியாக்கள் உடலுக்குள் சென்ற 6 மணி நேரத்தில் பாதிப்பு அறிகுறிகளை காட்டுகின்றன.
அரபு நாடுகளில் இறைச்சி துண்டுகளை உலோக குச்சியில் சொருகி நெருப்பில் சுட்டு சாப்பிடுகிறார்கள். இதில் சில மாற்றங்களை செய்து நமது நாட்டில் 'சவர்மா' என்ற பெயரில் தயாரித்து விற்பனை செய்கிறார்கள்.
சிக்கன், முட்டைகோஸ், வெங்காயம், மிளகாய்தூள் மற்றும் பல்வேறு உணவு பொருட்களை கொண்டு தயாரிக்கும் 'சவர்மா' வாலிபர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இவற்றில் சேர்க்கப்படும் உணவு பொருட்கள் அனைத்தும் கெட்டு போகாமல் இருந்தால் உடலுக்கு எந்த கேடும் ஏற்படுவதில்லை.
அதே நேரத்தில் கெட்டுப்போன இறைச்சியை பயன்படுத்தி செய்வதால், அதனை சாப்பிடுபவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு விடுகின்றன. சில நேரத்தில் உயிர் பலியும் ஏற்பட்டு விடுகிறது. கேரள மாநிலத்தில் சமீபத்தில் 'சவர்மா' சாப்பிட்ட சிறிது நேரத்தில் பள்ளி மாணவன் ஒருவன் பரிதாபமாக இறந்தான்.
தமிழகத்திலும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் விரும்பி சாப்பிடும் உணவாக 'சவர்மா' இருக்கிறது. மாநில தலைநகரான சென்னையில் பலர் விரும்பி சாப்பிடும் உணவாக 'சவர்மா' உள்ளது. இந்நிலையில் நாமக்கல்லில் 'சவர்மா' சாப்பிட்ட 14 வயது பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார்.
அவர் உணவு விஷமாகியதின் காரணமாக இறந்தது தெரிய வந்தது.
இதையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள உணவகங்களில் சுகாதாரத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அதில் பல கடைகளில் இருந்து பழைய உணவு பொருட்களை சுகாதாரத்துறையினர் கைப்பற்றினர்.
சில பாக்டீரியாக்கள் உடலுக்குள் சென்ற 6 மணி நேரத்தில் பாதிப்பு அறிகுறிகளை காட்டுகின்றன. சில பாக்டீரியாக்கள் 72 மணி நேரத்திற்கு பிறகு வேலை செய்கிறது. விஷமாகும் உணவு குழந்தைகள் மற்றும் முதியவர்களை அதிகமாக பாதிக்கின்றன. பாதிப்பு தீவிரமடைந்த உடன் அது மற்ற உறுப்புகளை பாதிக்கிறது.
'சவர்மா'வை பொறுத்தவரை பழைய உணவு பொருட்கள் மற்றும் கெட்டுப்போன இறைச்சியோ மற்றும் ஏற்கனவே தயாரித்த உணவை குளிர்ச்சி அடைய செய்து விட்டு மீண்டும் சூடுப்படுத்தி பயன்படுத்தாமல் இருந்தால் பயப்பட வேண்டியதில்லை என்று உணவுத்துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
- முட்டையின் விலை மீண்டும் 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் ரூ. 4.90 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது.
- பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 104 ஆக பிசிசி அறிவித்துள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), கடந்த மே மாதம் முதல் தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இதை அனைத்து பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர். கடந்த செப். 15-ந்தேதி ஒரு முட்டை விலை ரூ.4.70-ல் இருந்து 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் விலை ரூ. 4.75 ஆனது. 18-ந்தேதி 10 பைசா உயர்த்தப்பட்டு ரூ. 4.85 ஆனது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற என்இசிசி கூட்டத்தில், முட்டையின் விலை மீண்டும் 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் ரூ. 4.90 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது.
இதை அனைத்து பண்ணையாளர்களுக்கு தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும், என்இசிசி விலையை விட முட்டை விலையை குறைத்து விற்பனை செய்ய வேண்டாம் எனவும், என்இசிசி மற்றும் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 104 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 92 ஆக தென்னிந்திய கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.
- பழனியாண்டி (89) விவசாயி. இவரது மனைவி ஏற்கெனவே இறந்து விட்டார்.
- பழனியாண்டிக்கு அவரது மகள்கள் உதவி எதுவும் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் எஸ்.வாழவந்தி அருகே உள்ள வள்ளியப்பம்பட்டிபுதூரைச் சேர்ந்தவர் பழனியாண்டி (89) விவசாயி. இவரது மனைவி ஏற்கெனவே இறந்து விட்டார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். 2 மகள்களும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். பழனியாண்டிக்கு அவரது மகள்கள் உதவி எதுவும் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வெகு நேரமாகியும் பழனியாண்டி வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அருகில் இருந்தவர்கள் கதவை திறந்து பார்த்துள்ளனர்.
அப்போது பழனியாண்டி வீட்டில் உள்ள விட்டத்தில் கயிற்றால் தூக்கு போட்டு இறந்த நிலையில் தொங்கிக்கொண்டு இருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் பரமத்தி போலீசாருக்கும், அவரது மகள்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் பழனியாண்டியின் உடலை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே உள்ள கருக்கம்பாளையத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் தீபன் சக்ரவர்த்தி என்கிற நந்தகுமார் (22). கூலித்தொழிலாளி.
- காலையில் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த நந்தகுமார் வீட்டில் இருந்த சுவிட்சை போட்டுள்ளார். அப்போது மின் கசிவு காரணமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
பரமத்திவேலூர்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே உள்ள கருக்கம்பாளையத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் தீபன் சக்ரவர்த்தி என்கிற நந்தகுமார் (22). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா (21). இவர்களுக்கு இளமதி என்ற 1½ வயது பெண் குழந்தை உள்ளது. நந்தகுமாரின் மனைவி சங்கீதா கடந்த 15-ந் தேதி பெருமாபாளையத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு திருவிழாவிற்கு சென்று விட்டார். நந்தகுமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். காலையில் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த நந்தகுமார் வீட்டில் இருந்த சுவிட்சை போட்டுள்ளார். அப்போது மின் கசிவு காரணமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட நந்தகுமார் உயிருக்கு போராடியுள்ளார்.
அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று நந்தகுமாரை காப்பாற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கெனவே நந்தகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கணேஷ் (38). இவர் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
- திருச்சியிலிருந்து நாமக்கல் வழியாக சேலத்திற்கு அரசு பஸ்சில் வந்துள்ளார். நாமக்கல்லில் பஸ் நின்றபோது கழிப்பறைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது இவரது பையை காணவில்லை.
நாமக்கல்:
உத்திரபிரதேசம் மாநிலம் ஜான்சி பகுதியை சேர்ந்தவர் ராஜா ஐயர் மகன் கணேஷ் (38). இவர் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். கடந்த 16-ந் தேதி திருச்சியில் உள்ள உறவினர் ராகவனை பார்க்க வந்துள்ளார். பின்னர் நேற்று திருச்சியிலிருந்து நாமக்கல் வழியாக சேலத்திற்கு அரசு பஸ்சில் வந்துள்ளார். நாமக்கல்லில் பஸ் நின்றபோது கழிப்பறைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது இவரது பையை காணவில்லை. அதில் லேப்டாப், அலுவலகம் தொடர்பான ஆவணங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நாமக்கல் போலீசில் கணேஷ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- நாமக்கல் நகரில் நேற்று மாலை 6 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது.
- கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பகுதியில் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
நாமக்கல் நகரில் நேற்று மாலை 6 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. அரை மணி நேரத்திற்கும் மேலாக இந்த மழை நீடித்தது.
கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பகுதியில் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.
இதேபோல் ராசிபுரம், புதுச்சத்திரம், மங்களபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு 7 மணிக்கு ஆரம்பித்த மழை 1 மணி நேரம் விடாமல் கொட்டியது. இதனால் சாலைகளில் பெருமளவு வெள்ளம் தேங்கி நின்றது. இதில் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.
சேந்தமங்கலம் கொல்லிமலை பகுதிகளில் மாலை 5 மணிக்கு தொடங்கிய மழை இரவு 7 மணி வரை நீடித்தது. பின்னர் மீண்டும் இரவு 9 மணிக்கு ஆரம்பித்து 10 மணி வரை பெய்தது. இதனால் இரவு முழுவதும் இந்த பகுதியில் குளிர் நிலவியது.
மழையளவு
மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
எருமப்பட்டி-3, குமாரபாளையம்-1.6, மங்களபுரம்-22.4, நாமக்கல்-13.5, கலெக்டர் அலுவலகம்-15, பரமத்திவேலூர்-1, புதுச்சத்திரம்-23, ராசி புரம்-36, சேந்த மங்கலம்-14, திருச்செங்கோடு-2, கொல்லிமலை-16 என மாவட்டத்தில் நேற்று 147.8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
- நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.
- இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
நாமக்கல்:
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) கடந்த மே மாதம் முதல் தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இதை அனைத்து பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர்.
10 பைசா உயர்வு
கடந்த 15-ந் தேதி ஒரு முட்டை விலை ரூ.4.70-ல் இருந்து 5 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் விலை ரூ.4.75 என இருந்தது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற என்.இ.சி.சி. கூட்டத்தில் முட்டை விலை 10 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ.4.85 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்): சென்னை-540, பர்வாலா-520, பெங்களூர்-530, டெல்லி-525, ஹைதராபாத்-501, மும்பை-545, மைசூர்-530, விஜயவாடா-516, ஹொஸ்பேட்-490, கொல்கத்தா-615.
கோழிவிலை
பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ.104 ஆக பி.சி.சி. அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.92 ஆக தென்னிந்திய கோழி ப்பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.






