என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  நாமக்கல்லுக்கு பஸ்சில் வந்த வடமாநில பயணியிடம் பேக் திருட்டு
  X

  நாமக்கல்லுக்கு பஸ்சில் வந்த வடமாநில பயணியிடம் பேக் திருட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கணேஷ் (38). இவர் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
  • திருச்சியிலிருந்து நாமக்கல் வழியாக சேலத்திற்கு அரசு பஸ்சில் வந்துள்ளார். நாமக்கல்லில் பஸ் நின்றபோது கழிப்பறைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது இவரது பையை காணவில்லை.

  நாமக்கல்:

  உத்திரபிரதேசம் மாநிலம் ஜான்சி பகுதியை சேர்ந்தவர் ராஜா ஐயர் மகன் கணேஷ் (38). இவர் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். கடந்த 16-ந் தேதி திருச்சியில் உள்ள உறவினர் ராகவனை பார்க்க வந்துள்ளார். பின்னர் நேற்று திருச்சியிலிருந்து நாமக்கல் வழியாக சேலத்திற்கு அரசு பஸ்சில் வந்துள்ளார். நாமக்கல்லில் பஸ் நின்றபோது கழிப்பறைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது இவரது பையை காணவில்லை. அதில் லேப்டாப், அலுவலகம் தொடர்பான ஆவணங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நாமக்கல் போலீசில் கணேஷ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Next Story
  ×