search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "faint and die"

    • கபிலர்மலை அருகே உள்ள செஞ்சுடையாம் பாளையத்தில் உள்ள நாராயணமூர்த்தி என்பவரது வீட்டில் சென்ட்ரிங் வேலையில் ஈடுபட்டிருந்தார்.
    • அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ராமதேவம் ஊராட்சிக்கு உட்பட்ட வாழநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் கிருஷ்ணகுமார் (34) கட்டிட தொழிலாளி. இவர் நேற்று கபிலர்மலை அருகே உள்ள செஞ்சுடையாம் பாளையத்தில் உள்ள நாராயணமூர்த்தி என்பவரது வீட்டில் சென்ட்ரிங் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதை பார்த்த அவருடன் வேலை பார்த்த சக தொழிலாளர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வர வைக்கப்பட்டு அவரை காப்பாற்றி பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து பரமத்தி போலீசில் புகார் செய்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்தி போலீசார் கிருஷ்ணகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மூலிகை செடிகள் வியாபாரி மயங்கி விழுந்து பலியானார்.
    • அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    காஞ்சிபுரம் மாவட்டம் ஜல்லடியன் பட்டி பகுதியை சேர்ந்தவர் சுயம்பு (வயது61). இவர் மூலிகை செடிகளை வாங்கி வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வந்தார்.

    சுயம்பு தனது மனைவியை பிரிந்து வாழ்ந்தார். இதனால் அவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி யில் உள்ள தங்கை புஷ்பவள்ளி வீட்டில் தங்கியி ருந்தார். இந்த நிலையில் மூலிகை செடிகள் வாங்கி வெளிமாநிலங்களுக்கு அனுப்புவதற்காக மதுரை மாவட்டம் திருமங்கலத்திற்கு வந்தார்.

    இதற்காக அவர் கடந்த 10 நாட்களாக திருமங்கலத்தில் தங்கியிருந்தார். இந்த நிலையில் சோழவந்தான் சாலையில் உள்ள ஒருவரது தோட்டத்திற்கு நேற்று சென்ற சுயம்பு, திடீரென மயங்கி விழுந்தார்.சுயநினைவின்றி கிடந்த அவர் அங்கிருந்து மீட்கப்பட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து தங்கை புஷ்பவள்ளி திருமங்கலம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சுயம்பு உடல்நலம் பாதித்து இறந்தாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர் போராட்டம்
    • போலீசார் பேச்சுவார்த்தை

    சோளிங்கர்:

    சோளிங்கரை அடுத்த கொடைக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட புதுக்குடியானூரை சேர்ந்தவர் கோபால் (வயது 57). இவர் சோளிங்கரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் வழக்கம் போல நிறுவனத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது ஏற்கனவே கோபால் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த நிலையில் கணவரின் வேலையை தனது மகனுக்கு வழங்கக்கோரி கோபாலின் மனைவி மற்றும் குடும்பத்தினர் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சோளிங்கர் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது நிறுவனத்தில் பேசிய போது கோபாலின் வேலையை அவரது மகனுக்கு வழங்குவ தாக உறுதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் தெரிவித்தவுடன் அதனை ஏற்று போராட்டத்தை கைவிட்டு இறுதிச்ச டங்கு செய்ய உடலை பெற்றுக்கொண்டு சென்றனர்.

    ×