மூலிகை செடிகள் வியாபாரி மயங்கி விழுந்து சாவு

மூலிகை செடிகள் வியாபாரி மயங்கி விழுந்து பலியானார். அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூலிகை செடிகள் வியாபாரி மயங்கி விழுந்து சாவு
Published on

திருமங்கலம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஜல்லடியன் பட்டி பகுதியை சேர்ந்தவர் சுயம்பு (வயது61). இவர் மூலிகை செடிகளை வாங்கி வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வந்தார்.

சுயம்பு தனது மனைவியை பிரிந்து வாழ்ந்தார். இதனால் அவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி யில் உள்ள தங்கை புஷ்பவள்ளி வீட்டில் தங்கியி ருந்தார். இந்த நிலையில் மூலிகை செடிகள் வாங்கி வெளிமாநிலங்களுக்கு அனுப்புவதற்காக மதுரை மாவட்டம் திருமங்கலத்திற்கு வந்தார்.

இதற்காக அவர் கடந்த 10 நாட்களாக திருமங்கலத்தில் தங்கியிருந்தார். இந்த நிலையில் சோழவந்தான் சாலையில் உள்ள ஒருவரது தோட்டத்திற்கு நேற்று சென்ற சுயம்பு, திடீரென மயங்கி விழுந்தார்.சுயநினைவின்றி கிடந்த அவர் அங்கிருந்து மீட்கப்பட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து தங்கை புஷ்பவள்ளி திருமங்கலம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சுயம்பு உடல்நலம் பாதித்து இறந்தாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com