என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • தங்கம் 53 கிராம், வெள்ளி 131 கிராமும் பக்தர்களால் காணிக்கை
    • ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் உள்ள 6 உண்டியல்கள் மற்றும் நர சிம்மசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள 4 உண்டியல்கள்

    நாமக்கல்

    நாமக்கல் ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்ம சுவாமி கோவில் உண்டியல் கள் திறந்து எண்ணப் பட்டது. இதில் பக்தர்கள் ரூ.45 லட்சம் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

    நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் உள்ள 6 உண்டியல்கள் மற்றும் நர சிம்மசுவாமி கோயில் வளா கத்தில் உள்ள 4 உண்டியல்கள் என மொத்தம் 10 உண்டியல்கள், கோவில் அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது. மகளிர் சுய உதவி குழுவினர், அய்யப்பா சேவா சங்கத்தின் உண்டியலில் உள்ள காணிக்கைகள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.இதில் மொத்தம் ரூ 45, 24,833 ஆயிரம் காணிக்கை யாக இருந்தது. மேலும், தங்கம் 53 கிராம், வெள்ளி 131 கிராமும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப் பட்டிருந்தது. இந்த உண்டியல் திறப்பில், கோவில் செயல் அலுவலர் இளையராஜா, அறங்கா வலர் குழு உறுப்பினர் சீராளன் மற்றும் ரமேஷ்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ஓட்டலில் சாப்பிட்ட சந்தைப் பேட்டை புதூரை சேர்ந்த 14 வயது மாணவி கலையரசி பரிதாபமாக இறந்தார்.
    • 57 கிலோ காலாவதியான இறைச்சி பறிமுதல்

    நாமக்கல்

    நாமக்கல்லில் துரித உணவு தயாரிக்கும் ஓட்டலில் சாப்பிட்ட சந்தைப் பேட்டை புதூரை சேர்ந்த 14 வயது மாணவி கலையரசி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து கலெக்டர் உமா உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர் அருண் தலைமை யில் உணவு பாதுகாப்பு அலுவலர், துப்புரவு அலுவலர், சுகாதார ஆய்வாளர் அடங் கிய 10 குழுக்கள் அமைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் உள்ள துரித உணவகங்கள், அவைச ஓட்டல்களில் சோதனை நடத்தப்பட்டு வருகின்றன.இந்தநிலையில் நேற்று முன்தினம் 2-வது நாளாக மாவட் டம் முழுவதும் உணவு பாது காப்புத்துறை அதிகாரிகள் 108 ஓட்டல்களில் நடத்திய சோத னையில் 58 கிலோ காலாவதி யான உணவு மற்றும் இறைச்சி பறிமுதல் செய்தும், 24 கடைக ளுக்கு அபராதம் விதித்தனர், 24 கடைகளுக்கு அபராதம் விதித்தும் நோட்டீஸ் அனுப்பிவைக்கப் பட்டு இருப்பதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து நேற்று 3-வது நாளாக மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஓட்டல்களில் சோதனை நடத்தினர். மொத்த மாக 87 ஓட்டல் களில் நடந்த இந்த சோதனை யில் 57 கிலோ காலாவதியான உணவு மற்றும் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக் கப்பட்டதாகவும், 20 கடைகளுக்கு அபராதம் விதிக்கப் பட்டு, நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பலத்த அடிப்பட்டு ரமேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் கிரீன் கார்டன் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 49). இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் சிங்கப்பூரில் இருந்து ஊருக்கு வந்த ரமேஷ் வீட்டு வேலைகளை கவனித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு ரமேஷ் காட்டுப்புத்தூரில் இருந்து நாமக்கல்லில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவர் என்.புதுப்பட்டி பகுதியில் வந்தபோது மழை பெய்து கொண்டிருந்தது.

    இதனிடையே அந்த பகுதியில் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக சாலையில் ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ரமேஷ் இரவு நேரம் என்பதால் பள்ளம் இருப்பது தெரியாமல் தவறி பள்ளத்தில் விழுந்தார். இதில் பலத்த அடிப்பட்டு ரமேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இன்று காலையில் அப்பகுதி மக்கள் பள்ளத்தில் ரமேஷ் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரமேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அப்பகுதி மக்கள் கூறுகையில், சாலை பணிகள் நடைபெறும் நிலையில் அந்த பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்கவில்லை என புகார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பர்கர் சாப்பிட்ட மாணவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • கல்லூரி மாணவர்கள் உள்பட 21 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

    நாமக்கல்:

    நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள கடையில் ஷவர்மா சாப்பிட்டு 14 வயது சிறுமி உயிரிழந்தார். இந்நிலையில் மருத்துவக்கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் அதே கடையில் ஷவர்மா சாப்பிட்டு உடல் நலம் பாதித்த நிலையில் கடந்த 17 மற்றும் 18-ந் தேதி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மாணவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், நாமக்கல் சேலம் சாலையில் உள்ள கடையில் பர்கர் சாப்பிட்ட கல்லூரி மாணவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில் ஷவர்மா சாப்பிட்டு உடல்நிலை பாதித்த நிலையில் கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் உள்பட 21 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

    • நாமக்கல்லில் உள்ள வீட்டில் வசித்து வந்த உதயசந்திரன் தாயார் லீலாவதி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
    • சென்னையில் இருந்த உதயச்சத்திரன் அவரது தாயார் லீலாவதி மறைவு செய்தி அறிந்து நாமக்கல்லுக்குப் புறப்பட்டு வந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட சேலம் ரோட்டில் உள்ள என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் உதயச்சந்திரன். ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் தற்போது சென்னையில் தமிழக அரசின் நிதித்துறை செயலாளராகவும், சிறப்பு திட்டங்கள் அமலாக்கத்துறை செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.

    இந்த நிலையில் நாமக்கல்லில் உள்ள வீட்டில் வசித்து வந்த அவரது தாயார் லீலாவதி (72) கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

    சென்னையில் இருந்த உதயச்சத்திரன் அவரது தாயார் லீலாவதி மறைவு செய்தி அறிந்து நாமக்கல்லுக்குப் புறப்பட்டு வந்தார்.

    நாமக்கல் சேலம் சாலை என்.ஜி.ஜி.ஓ. காலனியில் வைக்கப்பட்டு இருந்த லீலாவதியின் உடலுக்கு தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, வீட்டு வசதி துறை அமைச்சர் செ.முத்துசாமி, வனத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.பி.யுமான கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

    மேலும் எம்.எல்.ஏ.க்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி, நாமக்கல் கலெக்டர் உமா, சேலம் கலெக்டர் கார்மேகம், கரூர் கலெக்டர் சிவசங்கர், விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விஸ்வநாத், நகர செயலாளர் ராணா ஆனந்த், பூபதி, சிவக்குமார், நாமக்கல் நகர மன்ற தலைவர் கலாநிதி மற்றும் ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

    உதயச்சந்திரன் தாயாரின் இறுதிச் சடங்கு இன்று மாலைசேந்தமங்கலம் சாலையில் உள்ள நகராட்சி மின் மயானத்தில் நடைபெற உள்ளது.

    • தேர்தல் நேரத்தில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு என்பது பா.ஜ.க.வின் அரசியல் நாடகம்.
    • வருகின்ற 5 மாநில சட்டசபைத் தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும்.

    நாமக்கல்:

    ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் 4-வது அகில இந்திய மாநாடு நாமக்கல் கொங்கு திருமண மண்டபத்தில் கடந்த 19-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    இதில் ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் சார்பில் விவாதம், தொகுப்புரை, அகில இந்திய கமிட்டி நிர்வாகிகள் தேர்வு ஆகியவை நடைபெறுகின்றன.

    மாநாட்டின் 2-ம் நாள் நிகழ்ச்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.பி.யுமான பிருந்தா காரத் தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தியாவில் கடந்த 9 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சி புரிந்து வருகிறது. இந்த நிலையில் தேர்தல் நேரத்தில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு என்பது பா.ஜ.க.வின் அரசியல் நாடகம். இந்த மசோதா நிறைவேறுவது கடினம்.

    ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது பா.ஜ.க.வின் அரசியல் தந்திரம். இது இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது.

    வருகின்ற 5 மாநில சட்டசபைத் தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும். அதற்குப் பின்னர் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் முடிவு செய்யப்படும்.

    தமிழக அரசு வழங்கி வரும் பெண்களுக்கான உரிமைத்தொகை பெண்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவும்.

    இந்தியா கூட்டணியில் உள்ளவர்கள் சனாதனம் குறித்து பேசுவது அந்தந்த கட்சியின் நிலைப்பாடு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இன்று 3-வது நாள் மாநாடு நடைபெறுகிறது. இதில் தீர்மானங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படும்.

    • 60 பவுன் தங்க நகை மற்றும் 9 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை பட்டப்பகலில் மர்ம நபர்கள் திருடி சென்றனர்
    • மளிகை பொருட்கள் வாங்கிக் கொண்டு தனது மொபட்டை எடுக்க வந்தபோது மொபட்டில் பணம் வைத்திருந்த பர்சை காணவில்லை

    பரமத்திவேலூர்

    பரமத்திவேலூர் அருகே உள்ள குப்புச்சிபாளையம், குச்சிக்காடு பகுதியில் கடந்த வாரம் ஓட்டல் உரிமையாளர் வீட்டில் வைத்திருந்த 60 பவுன் தங்க நகை மற்றும் 9 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை பட்டப்பகலில் மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலகவுண்டம்பட்டி அருகே விவசாயி ஒருவரின் வீட்டில் பட்டப் பகலில் கதவை உடைத்து 25 பவுன் தங்க நகை மற்றும் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.

    பரமத்திவேலூர் பகுதியில் அடுத்தடுத்து நடந்த இந்த திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    இதற்கிடையே பரமத்தி பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள ஒரு மளிகை கடை முன்பு பெண் ஒருவர் தனது மொபட்டை நிறுத்தி விட்டு அதில் பர்சை வைத்து விட்டு பொருட்கள் வாங்க சென்றார். பின்னர் மளிகை பொருட்கள் வாங்கிக் கொண்டு தனது மொபட்டை எடுக்க வந்தபோது மொபட்டில் பணம் வைத்திருந்த பர்சை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம், பக்கத்தி னரிடம் இது பற்றி தெரிவித்தார்.

    இதையடுத்து அங்கிருந்த சி.சி.டி.வி. கேமிராவை பார்த்தபோது மர்ம நபர்கள் மொபட்டில் இருந்த பர்சை நைசாக திருடி கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இந்த வீடியோ காட்சி தற்ேபாது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பரமத்தி பிரதான பகுதியில் பட்டப்பகலில் மர்ம நபர்கள் மொபட்டில் வைத்திருந்த பணப்பர்சை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதையடுத்து திருடர்களை விரைந்து பிடிக்க அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வ லர்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து கண்கா ணிப்பு கேமிராவில் பதி வான காட்சியை கொண்டு மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தீவிர வேட்டை யில் ஈடுபட்டுள்ளனர்.

    துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும்

    பரமத்தில்வேலூர்

    துணை மின் நிலையத்தில் நாளை (22-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் வில்லிபாளையம், ஜங்கமநாயக்கன்பட்டி, சின்னம நாயக்கன்பட்டி, சுங்ககாரம்பட்டி, நல்லாகவுண்டம்பாளையம், பெரியாக்கவுண்டம்பாளையம், தம்ம காளிபாளையம், பில்லூர், கூடச்சேரி, அர்த்தநாரிபாளையம், மாவுரெட்டி, ஓவியம்பாளையம், தேவிபாளையம், கீழக்கரை, கஜேந்திர நகர், சுண்டக்காம்பாளையம் ஆகிய ஊர்களுக்கும், மேலும் மேற்கண்ட துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் இதர பகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை பரமத்திவேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.

    • 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம்
    • தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்திவேலூர்

    புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திரு மஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி ,கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவி யங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்க ளுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்று வட்டார பகுதி களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிச னம் செய்து அருள் பெற்றனர்.

    அதேபோல் நன்செய் இடையாறு காவிரி ஆற்றங்கரை அருகே உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவி லில் உள்ள வள்ளி -தெய்வா னை சமேத சுப்பிரமணியர் கோவில், கபிலர்மலை பால சுப்பிர மணியசாமி கோவில், பரமத்தி அருகே உள்ள பிராந்தகத்தில் 34.5 அடி உயர முள்ள ஆறுமுகக்கட வுள், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவில் சுப்ர மணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன், அனிச்சம்பா ளையத்தில் வேல்வடிவம் கொண்ட சுப்ர மணியர், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்ட வர், நன்செய்இடையார் திருவேலீஸ்வரர் கோவில் சுப்ரமணியர், நன்செய் இடை யாறு ராஜா சாமி, கோப்ப ணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள பாலமுருகன், பாலப்பட்டி கதிர்மலை கந்தசாமி மற்றும் கந்தம்பாளையம் அருண கிரிநாதர் மலையில் உள்ள வள்ளி,தெய்வான சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட கோவில்களில் முருகப்பெரு மானுக்கு புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷே கமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதி களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகன் பெருமான தரிசனம் செய்த னர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • பரமத்திவேலூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன.
    • கடந்த 6 மாதங்களாக பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற வில்லை.

    பரமத்திவேலூர்

    நாமக்கல் மாவட்டம் பர மத்திவேலூர் பேரூராட்சி யில் 18 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. வைச் சேர்ந்த லட்சுமி தலைவராகவும், துணை தலைவராக ராஜாவும் தேர்ந்தெடுக்கப்பட்ட னர். கடந்த சில மாதங்களாக தலைவர் லட்சுமி மற்றும் துணை தலைவர் ராஜா ஆகிய இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேறு பாட்டால் பேரூராட்சி மன்ற கூட்டம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. கடந்த ஓராண்டாக வேலூர் பேரூ ராட்சியில் எந்த ஒரு தீர்மா னமும் நிறைவேற்றப்பட வில்லை.

    கூட்டம்

    கடந்த 6 மாதங்களாக பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெறாத நிலையில் நேற்று பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி தலை வர் லட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் துணை தலைவர் ராஜா, செயல் அலுவலர் திருநாவுக்கரசு மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்து.

    தீர்மானங்கள் நிராகரிப்பு

    காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்கிய நிலையில் பேரூராட்சி கவுன்சி லர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பேரூ ராட்சி தலைவர் லட்சுமி கொண்டு வந்த 95 தீர்மா னங்களுக்கு 7 பேரூராட்சி உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

    தீர்மானத்திற்கு 11 உறுப் பினர்கள் எதிர்ப்பு தெரி வித்தனர். உறுப்பி னர்களின் ஆதரவு இல்லாததால் அனைத்து தீர்மா னங்களும் நிராகரிக்கப் பட்டது.

    இதனால் தீர்மானங்களும் நிறை வேற்றப்படாமல் மன்ற கூட்டம் நிறை வடைந்தது.

    • சோழசிராமணி காவிரி ஆற்றில் 150- க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.
    • 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் போலீசார் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டது.

    பரமத்திவேலூர்

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், ஜேடர்பாளையம் மற்றும் சோழசிராமணி காவிரி ஆற்றில் 150- க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்கள் அந்தந்தப் பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்து வழிபட்டனர். பூஜை செய்து வழிபட்ட விநாயகர் சிலைகளை 3- நாளாக காவிரி ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாமக்கல் மற்றும் பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வேலூர், நன்செய் இடையாறு, குச்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காவிரி ஆற்றில் வேலூர் போலீசாரின் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டது.

    இதேபோல் சேலம், நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஜேடர்பாளையம் மற்றும் சோழசிராமணி காவிரி ஆற்றில் ஜேடர்பாளையம் போலீசார் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டது.

    • நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நாளை (21-ந் தேதி) பகல் 12.30 மணிக்கு நடைபெற உள்ளது.
    • மாவட்ட கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து நுகர்வோர்களின் குறைகளை கேட்டறிகிறார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் நுகர்வோர்களின் நலன் கருதி, அனைத்து துறையின் முதல்நிலை அலுவலர்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் ஆகியோர்களுடன், காலாண்டு நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நாளை (21-ந் தேதி) பகல் 12.30 மணிக்கு நடைபெற உள்ளது. மாவட்ட கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து நுகர்வோர்களின் குறைகளை கேட்டறிகிறார். பொது விநியோகத் திட்டம் தொடர்பான கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகர்வோர்கள் மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டு மனுக்களை அளிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ×