என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ்நாடு நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் தாயார் மறைவு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி
    X

    தமிழ்நாடு நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் தாயார் மறைவு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி

    • நாமக்கல்லில் உள்ள வீட்டில் வசித்து வந்த உதயசந்திரன் தாயார் லீலாவதி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
    • சென்னையில் இருந்த உதயச்சத்திரன் அவரது தாயார் லீலாவதி மறைவு செய்தி அறிந்து நாமக்கல்லுக்குப் புறப்பட்டு வந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட சேலம் ரோட்டில் உள்ள என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் உதயச்சந்திரன். ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் தற்போது சென்னையில் தமிழக அரசின் நிதித்துறை செயலாளராகவும், சிறப்பு திட்டங்கள் அமலாக்கத்துறை செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.

    இந்த நிலையில் நாமக்கல்லில் உள்ள வீட்டில் வசித்து வந்த அவரது தாயார் லீலாவதி (72) கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

    சென்னையில் இருந்த உதயச்சத்திரன் அவரது தாயார் லீலாவதி மறைவு செய்தி அறிந்து நாமக்கல்லுக்குப் புறப்பட்டு வந்தார்.

    நாமக்கல் சேலம் சாலை என்.ஜி.ஜி.ஓ. காலனியில் வைக்கப்பட்டு இருந்த லீலாவதியின் உடலுக்கு தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, வீட்டு வசதி துறை அமைச்சர் செ.முத்துசாமி, வனத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.பி.யுமான கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

    மேலும் எம்.எல்.ஏ.க்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி, நாமக்கல் கலெக்டர் உமா, சேலம் கலெக்டர் கார்மேகம், கரூர் கலெக்டர் சிவசங்கர், விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விஸ்வநாத், நகர செயலாளர் ராணா ஆனந்த், பூபதி, சிவக்குமார், நாமக்கல் நகர மன்ற தலைவர் கலாநிதி மற்றும் ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

    உதயச்சந்திரன் தாயாரின் இறுதிச் சடங்கு இன்று மாலைசேந்தமங்கலம் சாலையில் உள்ள நகராட்சி மின் மயானத்தில் நடைபெற உள்ளது.

    Next Story
    ×