என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • பரமத்தி வேலூர் தாலுகா பல பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது.
    • கரும்புகள் விளைந்தவுடன் வெட்டி செல்வதற்காக மோகனூரில் செயல்பட்டு வரும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்கின்றனர்.

        பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா அண்ணா நகர், பெரிய மரு தூர், சின்ன மருதூர், சேளூர் செல்லப்பம்பா ளையம், கொந்தளம், பிலிக்கல்பாளையம், அய்யம்பாளையம், வடகரை யாத்தூர், சின்ன சோளி பாளையம், பெரிய சோளி பாளையம், கொத்த மங்கலம், குரும்பலமகாதேவி, ஜமீன் இளம்பள்ளி,சோழ சிராமணி, சிறு நல்லிக்கோவில், திடுமல், தி.கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது.

    கரும்புகள் விளைந்தவுடன் வெட்டி செல்வதற்காக மோகனூரில் செயல்பட்டு வரும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்கின்றனர். பதிவு செய்யாத விவசாயிகள் கரும்புகளை கபிலர் மலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிக்கும் கரும்பு ஆலை உரிமையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர். வாங்கிய கரும்புகளை சாறு பிழிந்து கொப்பறையில் ஊற்றி பாகு தயார் செய்து உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர். பின்னர் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக (மூட்டைகளாக) கட்டி, உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரி களுக்கும் அருகாமையில் செயல்பட்டு வரும் ஏல மார்க் கெட்டிற்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். வெல்ல சிப்பங்களை வாங்கிச் செல்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியா பாரிகள் வந்திருந்து தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு வெல்ல சிப்பங்களை வாங்கி செல்கின்ற னர். வாங்கிய வெல்ல சிப்பங்களை லாரி களில் ஏற்றி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்க ளுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உத்திரபிரதேசம், சண்டிகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்க ளுக்கும் அனுப்பி வைக்கின்றனர். கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,260- வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,370 வரையிலும் விற்பனையானது.

    உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,260 வரை யிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று1,260 வரையிலும் விற்பனையானது. உற்பத்தி அதிகரிப்பால் அச்சு வெல்லம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிர் செய்துள்ளனர்.

    நாமக்கல்

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பெருங்குறிச்சி, குப்பிரிக்கா பாளையம், சுள்ளி பாளையம், சோழசிராமணி, ஜமீன் இளம்பிள்ளி, குறும்பல மகாதேவி, கொத்தமங்கலம், சிறு நெல்லி கோவில், திருமால் கவுண்டம்பாளையம் ,கபிலர்மலை, வடகரையாத்தூர்,ஆனங்கூர் , அண்ணா நகர், பெரிய மருதூர், சின்ன மருதூர், கபிலர்மலை, பாலப்பட்டி ,மோகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிர் செய்துள்ளனர். இவர்கள் தேங்காய் மற்றும் தேங்காய் பருப்புகளை பரமத்தி வேலூர் வெங்க மேட்டில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு விற்பனை கூடத்திற்கு கொண்டு சென்றும் விற்பனை செய்து வருகின்றனர்.மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் 7 ஆயிரத்து 474 கிலோ தேங்காய்களை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.24.69 -க்கும், குறைந்தபட்சமாக ரூ.22.06 - க்கும், சராசரியாக ரூ.23.30-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 லட்சத்து 69 ஆயிரத்து 82- க்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.அதேபோல் 10 ஆயிரத்து 248 கிலோ தேங்காய் பருப்பு ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்ச விலையாக கிலோ ரூ. 75.89- க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ. 53.33- க்கும், சராசரி விலையாக ரூ. 68.88- க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 8 லட்சத்து 74 ஆயிரத்து 288- க்கு ஏலம் நடைபெற்றது. ஒரே நாளில் சந்தையில் தேங்காய் மற்றும் தேங்காய் பருப்புகள் ரூ.10 லட்சத்து 43 ஆயிரத்து 370- க்கு விற்பனையானது.

    • சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்

    நாமக்கல்

    நாமக்கல் மாவட்டம் சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் நிலக்கடலை காய் 78.44 1/2குவிண்டால் எடை கொண்ட 263 மூட்டை விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ அதிகபட்ச விலையாக ரூ.84.10-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.61.17-க்கும், சராசரி விலையாக ரூ.80.40-க்கும் என ரூ. 5லட்சத்து 65 ஆயிரத்து 223-க்கு ஏலம் போனது.

    • ஆதவன் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி தலையில் பலத்த காயமடைந்தார்.
    • விரைந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    நாமக்கல்

    ராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆதவன் (36)கூலி தொழிலாளி. இவர் பெரியமனலியில் இருந்து திருச்செங்கோடு நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்ற போது கொன்னையர் பஸ் நிலையம் அருகே எதிர்பாராத விதமாக எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி தலையில் பலத்த காயம் அடைந்து சுயநினைவின்றி இருந்துள்ளார்.இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மருத்துவ உதவியாளர் மணிவேல் ஓட்டுநர் கங்காதரன் ஆகியோர் அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் சுயநினைவின்றி இருந்த ஆதவனை பரிசோதித்த போது அவரிடம் இருந்த ரூ.80 ஆயிரத்து 55 பணத்தை எடுத்து ஆதவனின் உறவினர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் நேர்மையை ஆதவனின் உறவினர்கள் பாராட்டினர்.

    • இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு தினந்தோறும் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் ஒவ்வொரு வருடமும் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு தினந்தோறும் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. பின்னர் 5-ம் நாள் விநாயகர் சிலை கள் ஊர்வலமாக எடுத்து சென்று பரமத்தி வேலூர் காசி விஸ்வநாதர் கோவில் காவிரி கரையில் உள்ள காவிரி ஆற்றில் கரைப்பது வழக்கம்.

    அதேபோல் இந்த வருட மும் நாமக்கல் மாவட்டம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் 118 விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு ஆங்காங்கே நீர் நிலைகளில் கரைக்கப்பட்டது. 5-ம் நாளான நேற்று மாலை வேலூரில் இருந்து காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் கடைவீதி, காத்தாக்கண்டர் பிரிவு சாலையில் இந்து முன்னணி சார்பில் இந்து எழுச்சி ஒற்றுமை பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவிற்கு பரமத்தி ஒன்றிய தலைவர் ராஜவேல் தலைமை வகித்தார். பரமத்தி ஒன்றிய கேசவன் முன்னிலை வகித்தார். பரமத்தி ஒன்றிய ரமேஷ் வரவேற்றார். இந்து முன்னணி சேலம் கோட்ட தலைவர் சந்தோஷ்குமார் எழுச்சியுரையாற்றினார். மாவட்ட பொதுச்செய லாளர் கோபிநாத், மாவட்ட செயலாளர்கள் சரவணன், ஜெகதீசன், மாவட்ட பொருளாளர் பிரபாகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

    அதனை தொடர்ந்து பரமத்தி வேலூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் செந்தில்குமார் கொடியசைத்து விநாயகர் சிலை ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

    கடைவீதி பகுதியில் இருந்து தொடங்கிய விநா யகர் விசர்ஜன ஊர்வலம் திருவள்ளுவர் சாலை, பழைய பை- பாஸ் சாலை, சந்தை பகுதி, பேட்டை பஞ்சமுக ஹேரம்ப விநாயகர் கோயில், பஸ்நிலையம், அண்ணா சாலை மற்றும் காவிரி சாலை வழியாக சென்று காசிவிஸ்வநாதர் கோவில் அருகில் உள்ள காவிரியாற்றில் விநாயகர் சிலைகள் நேற்று இரவு ஒவ்வொரு சிலையாக வரிசையாக கரைக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமையில், பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கம் திருச்செங்கோடு தலைமையகத்தில் நடைபெற்றது.
    • ரூ.3 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கம் திருச்செங்கோடு தலைமையகத்தில் நடைபெற்ற கொப்பரை டெண்டரில் 92 மூட்டைகள் வரத்து வந்தது. முதல் தரம் கிலோ ரூ 71 முதல் ரூ 76 வரையிலும் 2-ம் தரம் கிலோ ரூ 55 முதல் ரூ.69 வரையிலும் விலை போனது. ரூ.3 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை முன்னிட்டு பிரசன்ன வெங்கட்ரமண சாமிக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனை தொடர்ந்து மலர்கள் மற்றும் துளசி இலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலத்தில் உள்ள பிரசன்ன வெங்கட்ரமணசாமி கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை முன்னிட்டு பிரசன்ன வெங்கட்ரமண சாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து மலர்கள் மற்றும் துளசி இலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பிரசன்னவெங்கட்ரமண சாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வெங்கட்ரமண சாமி மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு துளசி இலை, தீர்த்தம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் பரமத்தி வேலூர் காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவிலிலும் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதி களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு லட்சுமி நாராயண பெரு மாளை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்க ளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • கடையில் ஏராளமான பல்வேறு ரகமான மரச்சாமன்களை விற்பனைக்காக அடுக்கி வைத்திருந்தார்.
    • ரூ.2 லட்சம் மதிப்பிலான மரங்கள் சேதம்

    பரமத்தி வேலூர்

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் குமார் ( வயது 54). இவர் பரமத்திவேலூர் பழைய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்க் எதிரே மரச்சாமான்கள் விற்பனை செய்யும் மரக் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த கடையில் ஏராளமான பல்வேறு ரகமான மரச்சாமன்களை விற்பனைக்காக அடுக்கி வைத்திருந்தார். நேற்று மாலை குமார் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.இந்த நிலையில் இரவு சுமார் 10.30 மணியளவில் மரக்கடையில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை.

    ரூ.2 லட்சம் மதிப்பு

    இது குறித்து குமார் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று மரக்கடையில் வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை அனைத்து கட்டுப்படுத்தி அருகில் உள்ள குடியிருப்புகளுக்கும், கடைகளுக்கும் தீ பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.இருப்பினும் ரூ.2 லட்சத்துக்கு மேல் மதிப்பிலான மரச்சாமான்கள் தீயில் எரிந்து விட்டது விசாரணையில் தெரியவந்தது.

    • 2023-2024 ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கைக்கான கடைசி தேதி இம்மாதம் 30-ந் தேதி
    • மாணவ, மாணவிகளும், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு (ஐடிஐ) நேரடியாக விருப்பமான தொழிற்பிரிவுகளை தேர்ந்தெடுத்து சேர்க்கை பெறலாம்

    நாமக்கல்

    நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல்லில் உள்ள அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ. தொழிற்பயிற்சி நிலையங்களில் 2023-2024 ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கைக்கான கடைசி தேதி, 4.0 தொழிற் பிரிவுகளுக்கு இம்மாதம் 30-ந் தேதி வரையும், என்சிவிடி பிரிவுகளுக்கு 23-ந் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    ஐ.டி.ஐ. தொழிற் பயிற்சி நிலை யங்க ளில்,கம்ப்யூட்டர் ஆபரேட்டர் புரோகிராமிங் அசிஸ்டன்ட் (என்சிவிடி) ஓராண்டு (பெண்கள் மட்டும்) 7 இடங்கள் காலியாக உள்ளன. தகவல் தொடர்பு தொழில் நுட்பம் மற்றும் கணினி பராமரிப்பு (என்சிவிடி) 2 ஆண்டு (பெண்கள் மட்டும்) 8 இடங்கள் காலியாக உள்ளன. கட்டிட பட வரைவாளர் (என்சிவிடி) 2 ஆண்டு, 5 இடங்கள் காலியாக உள்ளன.

    கம்மியர் ஆட்டோ பாடிரிப்பேர் (என்சிவிடி) ஓராண்டு 19 இடங்கள் காலியாக உள்ளன. இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் மற்றும் டிஜிட்டல் மேனுபாக்சரிங் டெக்னீசியன் (இண்டஸ்ட்ரி 4.0) ஓராண்டு 17 இடங்கள் காலியாக உள்ளன.நாமக்கல் மாவட்டத்தில் மேற்கண்ட பயிற்சியில் சேர விருப்பம் உள்ள அனைத்து மாணவ, மாணவிகளும், கீரம்பூரில் உள்ள, அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு (ஐடிஐ) நேரடியாக சென்று விண்ணப்பித்து விருப்ப மான தொழிற்பிரி வுகளை தேர்ந்தெடுத்து சேர்க்கை பெறலாம்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    கடந்த 17 மற்றும் 18- ந் தேதி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    நாமக்கல்

    நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள கடையில் சவர்மா சாப்பிட்டு 14 வயது சிறுமி உயிரிழந்தார்.

    இந்நிலையில் மருத்துவக்கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் அதே கடையில் சவர்மா சாப்பிட்டு உடல் பாதித்த நிலையில் கடந்த 17 மற்றும் 18- ந் தேதி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், நாமக்கல் சேலம் சாலையில் உள்ள கடையில் பர்கர் சாப்பிட்ட கல்லூரி மாணவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் சவர்மா சாப்பிட்டு உடல்நிலை பாதித்த நிலையில் கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் உள்பட 21 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

    செறிவூட்டப் பட்ட பால் 500 மி.லி. மற்றும் நிலைப்படுத்தப் பட்ட பால் 200 மி.லி, விற்பனை

    நாமக்கல்

    நாமக்கல் மாவட்டத்தில் டிலைட் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:

    நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தி யாளர்கள் ஒன்றியத்தின் மூலம் "டிலைட்" என்ற வைட்டமின் சத்துக்கள் நிறைந்த, செறிவூட்டப் பட்ட பால் 500 மி.லி. மற்றும் நிலைப்படுத்தப் பட்ட பால் 200 மி.லி, நேற்று (21-ந் தேதி) முதல் மாவட்டத்தில் விற்பனை செய்யபப்படுகிறது. நாமக்கல் மாவட்ட ஆவின் விற்பனை முகவர்கள் மற்றும் ஆவின் பாலகங்களின், இந்த பால் பாக்கெட் டுகளை பொதுமக்கள் வாங்கி பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பருத்தி ஏலத்திற்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வந்தனர்.
    • ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகம் உள்ளது.

    ராசிபுரம்

    ராசிபுரம் அருகே உள்ள ஆர்.கவுண்டம்பாளையம் பவர் ஹவுஸ் பின்புறம் ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகம் உள்ளது. இங்கு பருத்தி ஏலம் நடந்து வருவது வழக்கம். நேற்று நடந்த பருத்தி ஏலத்திற்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

    அதேபோல் ராசிபுரம், ஆத்தூர், ஈரோடு, சேலம், பெருந்துறை, திருப்பூர், திருச்செங்கோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்து பருத்தியை ஏலம் எடுத்தனர். ஏலத்திற்கு ஆர்.சி. எச்.ரக பருத்தி 116 மூட்டைகளும், சுரபி ரக பருத்தி 52 மூட்டைகளும், கொட்டு ரக பருத்தி 6 மூட்டைகளும் கொண்டுவரப்பட்டு இருந்தன. இதில் ஆர்.சி.எச். பருத்தி 1 குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.6 ஆயிரத்து 269 முதல் அதிகப்பட்சமாக 1 குவிண்டால் ரூ. 7 ஆயிரத்து 169-க்கும், சுரபி ரக பருத்தி 1 குவிண்டால் குறைந்தபட்சம் ரூ. 6 ஆயிரத்து 79-க்கும் அதிகப்பட்சமாக 1 குவிண்டால் ரூ. 7 ஆயிரத்து 199-க்கும், கொட்டு ரக பருத்தி 1குவிண்டால் குறைந்தபட்சம் ரூ. 4 ஆயிரத்து 399 முதல் அதிகபட்சமாக 1 குவிண்டால் ரூ.4 ஆயிரத்து 720-க்கும் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் மொத்தம் 174 பருத்தி மூட்டைகள் ரூ.4 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் பருத்தி வரத்து குறைந்து காணப்பட்டது. அதே வேளையில் விலையும் குறைந்து காணப்பட்டது.

    ×