search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prasanna Venkatramana Sami Temple"

    • பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை முன்னிட்டு பிரசன்ன வெங்கட்ரமண சாமிக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனை தொடர்ந்து மலர்கள் மற்றும் துளசி இலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலத்தில் உள்ள பிரசன்ன வெங்கட்ரமணசாமி கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை முன்னிட்டு பிரசன்ன வெங்கட்ரமண சாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து மலர்கள் மற்றும் துளசி இலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பிரசன்னவெங்கட்ரமண சாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வெங்கட்ரமண சாமி மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு துளசி இலை, தீர்த்தம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் பரமத்தி வேலூர் காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவிலிலும் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதி களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு லட்சுமி நாராயண பெரு மாளை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்க ளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    ×