என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "namakkaldistrict: கடந்த வாரத்தை விட இந்த வாரம் பருத்தி வரத்து குறைவு This week cotton supply is lower than last week"

    • பருத்தி ஏலத்திற்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வந்தனர்.
    • ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகம் உள்ளது.

    ராசிபுரம்

    ராசிபுரம் அருகே உள்ள ஆர்.கவுண்டம்பாளையம் பவர் ஹவுஸ் பின்புறம் ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகம் உள்ளது. இங்கு பருத்தி ஏலம் நடந்து வருவது வழக்கம். நேற்று நடந்த பருத்தி ஏலத்திற்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

    அதேபோல் ராசிபுரம், ஆத்தூர், ஈரோடு, சேலம், பெருந்துறை, திருப்பூர், திருச்செங்கோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்து பருத்தியை ஏலம் எடுத்தனர். ஏலத்திற்கு ஆர்.சி. எச்.ரக பருத்தி 116 மூட்டைகளும், சுரபி ரக பருத்தி 52 மூட்டைகளும், கொட்டு ரக பருத்தி 6 மூட்டைகளும் கொண்டுவரப்பட்டு இருந்தன. இதில் ஆர்.சி.எச். பருத்தி 1 குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.6 ஆயிரத்து 269 முதல் அதிகப்பட்சமாக 1 குவிண்டால் ரூ. 7 ஆயிரத்து 169-க்கும், சுரபி ரக பருத்தி 1 குவிண்டால் குறைந்தபட்சம் ரூ. 6 ஆயிரத்து 79-க்கும் அதிகப்பட்சமாக 1 குவிண்டால் ரூ. 7 ஆயிரத்து 199-க்கும், கொட்டு ரக பருத்தி 1குவிண்டால் குறைந்தபட்சம் ரூ. 4 ஆயிரத்து 399 முதல் அதிகபட்சமாக 1 குவிண்டால் ரூ.4 ஆயிரத்து 720-க்கும் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் மொத்தம் 174 பருத்தி மூட்டைகள் ரூ.4 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் பருத்தி வரத்து குறைந்து காணப்பட்டது. அதே வேளையில் விலையும் குறைந்து காணப்பட்டது.

    ×