என் மலர்
நீங்கள் தேடியது "namakkaldistrict:சி.சி.டி.வி கேமிராவில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை Investigation through CCTV footage"
- 60 பவுன் தங்க நகை மற்றும் 9 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை பட்டப்பகலில் மர்ம நபர்கள் திருடி சென்றனர்
- மளிகை பொருட்கள் வாங்கிக் கொண்டு தனது மொபட்டை எடுக்க வந்தபோது மொபட்டில் பணம் வைத்திருந்த பர்சை காணவில்லை
பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் அருகே உள்ள குப்புச்சிபாளையம், குச்சிக்காடு பகுதியில் கடந்த வாரம் ஓட்டல் உரிமையாளர் வீட்டில் வைத்திருந்த 60 பவுன் தங்க நகை மற்றும் 9 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை பட்டப்பகலில் மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலகவுண்டம்பட்டி அருகே விவசாயி ஒருவரின் வீட்டில் பட்டப் பகலில் கதவை உடைத்து 25 பவுன் தங்க நகை மற்றும் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.
பரமத்திவேலூர் பகுதியில் அடுத்தடுத்து நடந்த இந்த திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
இதற்கிடையே பரமத்தி பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள ஒரு மளிகை கடை முன்பு பெண் ஒருவர் தனது மொபட்டை நிறுத்தி விட்டு அதில் பர்சை வைத்து விட்டு பொருட்கள் வாங்க சென்றார். பின்னர் மளிகை பொருட்கள் வாங்கிக் கொண்டு தனது மொபட்டை எடுக்க வந்தபோது மொபட்டில் பணம் வைத்திருந்த பர்சை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம், பக்கத்தி னரிடம் இது பற்றி தெரிவித்தார்.
இதையடுத்து அங்கிருந்த சி.சி.டி.வி. கேமிராவை பார்த்தபோது மர்ம நபர்கள் மொபட்டில் இருந்த பர்சை நைசாக திருடி கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இந்த வீடியோ காட்சி தற்ேபாது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பரமத்தி பிரதான பகுதியில் பட்டப்பகலில் மர்ம நபர்கள் மொபட்டில் வைத்திருந்த பணப்பர்சை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து திருடர்களை விரைந்து பிடிக்க அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வ லர்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து கண்கா ணிப்பு கேமிராவில் பதி வான காட்சியை கொண்டு மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தீவிர வேட்டை யில் ஈடுபட்டுள்ளனர்.






