என் மலர்
நீங்கள் தேடியது "13 had vomiting-fainting"
- நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ- மாணவிகள் மருத்துவ படிப்பு படித்து வருகின்றனர்.
- நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் உணவு சாப்பிட்டனர். இதையடுத்து அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ- மாணவிகள் மருத்துவ படிப்பு படித்து வருகின்றனர். இதில் 13 மாணவர்கள் நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் உணவு சாப்பிட்டனர். இதையடுத்து அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் 13 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்தி ரியில் சேர்ந்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர்கள் சாப்பிட்ட உணவு சுகாதார இல்லாத உணவு என கூறப்படுகிறது. இதனால் அந்த உணவு விஷமாக மாறியதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.






