என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாமக்கல் மாவட்டம் முழுவதும் ஷவர்மா விற்க தடைதுரித உணவகங்களில் ஆய்வு செய்யஅதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
- கேரளாவில் கடந்த ஆண்டு துரித உணவான ஷவர்மா சாப்பிட்ட 16 வயது சிறுமி உயிரிழந்தார். தற்போது நாமக்கல் சிறுமி உயிரிழந்துள்ளார்.
- முறையாக வேக வைக்காமல் சாப்பிடும்போது உயிர்கொல்லியாக மாறி விடுவதால் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்பட்டு விடுகின்றன.
நாமக்கல்:
கேரளாவில் கடந்த ஆண்டு துரித உணவான ஷவர்மா சாப்பிட்ட 16 வயது சிறுமி உயிரிழந்தார். தற்போது நாமக்கல் சிறுமி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இறைச்சியை பொறுத்தவரையில் அவற்றை முறையாக பதப்படுத்தாவிட்டாலும் வேக வைக்காவிட்டாலும் நஞ்சு பாக்டீரியா உருவாகி விடுகிறது. முறையாக வேக வைக்காமல் சாப்பிடும்போது உயிர்கொல்லியாக மாறி விடுவதால் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்பட்டு விடுகின்றன.
'சவர்மா' விற்க தடை
இதனால் நாமக்கல் மாவட்டம் முழுவதும் 'சவர்மா', கிரில் சிக்கன் போன்ற துரித வகை உணவுகளை தயாரிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா நிருபர்களிடம் கூறியதாவது:-
சம்பந்தப்பட்ட உணவகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தி அங்கிருந்த உணவு வகைகள் அழிக்கப்பட்டு உணவகத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டது. இந்த உணவகத்தில் உணவு வாங்கி சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த தகவல் திங்கட்கிழமை தெரியவந்தது. சிறுமியின் குடும்பத்தார் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்றுள்ளனர். அங்கு போதிய சிகிச்சை அளிக்கவில்லை. இந்த நிலையில்தான் திங்கட்கிழமை காலை அச்சிறுமி தூக்கத்திலிருந்து எழுந்திருக்காமலேயே உயிரிழந்தார்.
ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
சம்பந்தப்பட்ட உணவகத்தில் இருந்து வழங்கப்பட்ட துரித உணவு, இறைச்சி ஆகியவை பரிசோதனைக்காக சேலம் உணவு பகுப்பாய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. முடி வுக்காக காத்திருக்கிறோம்.
வாந்தி, பேதி எனக் கூறி யார் வந்தாலும் உரிய சிகிச்சை அளிக்குமாறு தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் துரித உணவகங்களில் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்த சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்க தவறிய தனியார் மருத்துவமனையிடம் விளக்கம் கேட்டு தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






