நாமக்கல்லில் முட்டை விலை மேலும் 5 காசு உயர்வு

மே மாதம் முதல் தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது.என்இசிசி கூட்டத்தில், முட்டை விலை மேலும் 5 காசு உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.75 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
நாமக்கல்லில் முட்டை விலை மேலும் 5 காசு உயர்வு
Published on

நாமக்கல்:

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), கடந்த மே மாதம் முதல் தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இதை அனைத்து பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று மாலை நடைபெற்ற என்இசிசி கூட்டத்தில், முட்டை விலை மேலும் 5 காசு உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.75 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

இதேபோல் பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ. 114 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 86 ஆக தென்னிந்திய கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com