என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 கொள்ளை சம்பவத்திலும் ஒரே கும்பலுக்கு தொடர்பா?
    X

    2 கொள்ளை சம்பவத்திலும் ஒரே கும்பலுக்கு தொடர்பா?

    • வீட்டிற்கு திரும்பிய போது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது
    • பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.12 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை

    பரமத்திவேலூர்

    நாமக்கல் மாவட்டம் வேல கவுண்டம்பட்டி அருகே உள்ள அக்கலாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கொட்டாம்பட்டியை சேர்ந்த வர் மகேஷ் (42) விவசாயி. இவர் தனது குடும்பத்துடன் நேற்று கோவிலுக்கு சென்றார்.

    பூட்டு உடைப்பு

    பின்னர் வீட்டிற்கு திரும்பிய போது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மகேஷ் உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.12 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை யடித்து சென்றது தெரியவந்தது.

    போலீசார் விசாரணை

    இதுகுறித்து மகேஷ் உடனடியாக வேலகவுண்டம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி மற்றும் வேலகவுண்டம்பட்டி போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நேற்று முன்தினம் பரமத்திவேலூர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகைகள் மற்றும் ரூ.9 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இந்த நிலையில் இந்த 2 கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பலா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பகுதியில் தொடர்ந்து நடக்கும் கொள்ளை சம்பவங்கள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×