என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    60 பவுன், ரூ.9 லட்சம் கொள்ளை வழக்கில் மர்ம நபர்களை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு
    X

    60 பவுன், ரூ.9 லட்சம் கொள்ளை வழக்கில் மர்ம நபர்களை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு

    • நிஷாந்தி திருமணத்திற்கு ஜவுளிகள் எடுக்க குடும்பத்தினர் அனைவரும் ஈரோட்டுக்கு சென்று இருந்தனர்.
    • கந்தசாமியின் தாய் அருக்காணியிடம் பேச்சு கொடுத்து அவரை திசை திருப்பி வீட்டிற்குள் புகுந்தனர்.

    பரமத்திவேலூர்

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள குப்புச்சிபாளையம் குச்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (54). இவர் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் தாபா ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி கலைச்செல்வி (45). இவர்களது மகள் நிஷாந்தி (23).

    இவருக்கு கடந்த வாரம் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் திருமணத்திற்கு ஜவுளிகள் எடுக்க குடும்பத்தினர் அனைவரும் ஈரோட்டுக்கு சென்று இருந்தனர்.

    நகை, பணம் கொள்ளை

    இந்தநிலையில் கந்தசாமியின் வீட்டிற்கு வந்த 2 மர்ம நபர்கள் அங்கு தனியாக இருந்த கந்தசாமியின் தாய் அருக்காணியிடம் பேச்சு கொடுத்து அவரை திசை திருப்பி வீட்டிற்குள் புகுந்தனர். பின்னர் பீரோவை திறந்து லாக்கரில் நிஷாந்தியின் திருமணத்திற்கு சீர்வரிசை கொடுப்பதற்காக வைத்திருந்த நகை மற்றும் பணத்தை அள்ளிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

    இது குறித்து அருக்காணி கந்தசாமிக்கு தகவல் அளித்தார். இதையடுத்து கந்தசாமி வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 60 பவுன் நகை, ரூ.9 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வேலூர் போலீசாருக்கு கந்தசாமி தகவல் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    4 தனிப்படை விசாரணை

    இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    Next Story
    ×