'காலிங்கராயன் அத்திக்கடவு அவிநாசி திட்டம்' என்ற பெயருக்கு தமிழக அரசு பரிசீலனை- ஈஸ்வரன் எம்.எல்.ஏ. தகவல்

கடந்த 16.8.2023-ந்தேதி கடிதம் அனுப்பி மீண்டும் கோரிக்கையை வலியுறுத்தினேன். தமிழக அரசு தற்போது அதற்கான பரிசீலனை செய்வதாக தெரிவித்து இருக்கிறது.
'காலிங்கராயன் அத்திக்கடவு அவிநாசி திட்டம்' என்ற பெயருக்கு தமிழக அரசு பரிசீலனை- ஈஸ்வரன் எம்.எல்.ஏ. தகவல்
Published on

திருச்செங்கோடு எம்.எல்.ஏ. ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு காலிங்கராயன் அத்திக்கடவு அவிநாசி என்று பெயர் வைத்தால்தான் உண்மை நிலையை மக்கள் அறிய உதவும் என்று நான் கடந்த 10.4.2023 அன்று சட்டசபையில் பேசினேன். அதற்கு அன்றே நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பரிசீலிக்கப்படும் என்று அறிவித்தார். அதன் பிறகு கடந்த 16.8.2023-ந்தேதி கடிதம் அனுப்பி மீண்டும் கோரிக்கையை வலியுறுத்தினேன். தமிழக அரசு தற்போது அதற்கான பரிசீலனை செய்வதாக தெரிவித்து இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com