என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "namakkaldistrict: சாலை நெடுக வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கும் நிலை Long queues of road vehicles"

    • சாலையின் அகலம் சுமார் 15 அடி என்ற அளவில் உள்ளது.
    • குமாரபாளையம் - எடப்பாடி சாலையில் சின்னப்ப நாயக்கன் பாளையம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளது.

    குமாரபாளையம்

    குமாரபாளையம் - எடப்பாடி சாலையில் சின்னப்ப நாயக்கன் பாளையம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளது. அதிக போக்குவரத்து உள்ள இந்த சாலையில், சாலையின் அகலம் சுமார் 15 அடி என்ற அளவில் உள்ளது. இதனால் காலையில் பள்ளி, கல்லூரி பஸ்கள் வரும் நேரம், மாலையில் இதே போல் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பும் நேரம் உள்ளிட்ட பல சமயங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சாலை நெடுக வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கும் நிலை ஏற்படுகிறது.

    வாரச்சந்தை கூடும் வெள்ளிக்கிழமை நாளன்று காலை முதல், இரவு வரை கடும் போக்குவரத்து நெரிசல் சந்திக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. எடப்பாடி செல்லும் பேருந்துகள், பவானி பஸ் நிலையம் செல்லும் பேருந்துகள் உரிய நேரத்தில் செல்ல வழியில்லாமல் பயணிகள் தவிக்கும் நிலைக்கு ஆளாகி வருகிறார்கள்.

    ×