என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    மோசடி செய்த ஈமு நிறுவன சொத்துக்கள் 20-ந் தேதி ஏலம்
    X

    மோசடி செய்த ஈமு நிறுவன சொத்துக்கள் 20-ந் தேதி ஏலம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பொது மக்களிடம் இருந்து டெபா சிட் பெற்று நிதி மோசடி செய்துள்ளது
    • இந்த வழக்கு விசாரணை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன்கள் பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது

    நாமக்கல்

    நாமக்கல்லில் மோசடியில் ஈடுபட்ட ஈமு நிறுவ னத்தின் சொத்துக்கள் வரும் 20-ந் தேதி ஏலம் விடப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் தெரி வித்துள்ளார்.இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவ லர் சுமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ள தாவது:-

    நாமக்கல் நகரில், மோகனூர் ரோட்டில் இயங்கி வந்த செல்லம் ஈமு பார்ம்ஸ் மற்றும் வேலவன் கார்டன் சிட்டி டெவலப்மெண்ட்ஸ் என்ற நிறுவனம் பொது மக்களிடம் இருந்து டெபா சிட் பெற்று நிதி மோசடி செய்துள்ளது. இதன்பேரில் அந்த நிறு வனம் மீது நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் வழக்குப் பதிவு செய்யப் பட்டது. இந்த வழக்கு விசா ரணை கோவையில் உள்ள, தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன்கள் பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிமன்ற உத்திரவின்படி நிறுவனத்திற்கு சொந்தமான ப.வேலூர் தாலுக்கா பிள்ளைகளத்தூரில் உள்ள 2 வீட்டுமனைகள் மற்றும் ராசிபுரம் வட்டம், காட்டூர் காட்டுக்கொட்டாய் பகுதியில் உள்ள ஒரு வீட்டு மனையும் ஏலம் விடப்பட உள்ளது.

    இந்த ஏலம் இம்மாதம் 20-ந் தேதி மதியம் 2 மணிக்கு கலெக்டர் அலுவல கத்தில் ஏலம் விடப்பட உள்ளது. ஏல நிபந்தனைகள் நாமக்கல், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. மற்றும் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகங்க ளின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளன.

    ஏல நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள அனைவரும், இந்த ஏலத்தில் கலந்து கொள்ளலாம். ஏல தேதிக்கு முன்பாக, நாமக்கல், பொருளாதார குற்றப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பா ளர் மூலமாக மேற்குறிப்பிட்ட சொத்துக்களை பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×