என் மலர்
நீங்கள் தேடியது "இன்சூரன்ஸ் ஊழியர் சாவு"
- ஜெயபிரகாஷ் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
- ராசிபுரத்தை நோக்கி சென்றபோது பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் ஹெல்மெட் அணிந்த நிலையில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ஜெயப்பிரகாஷ் பரிதாபமாக இறந்தார்.
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே உள்ள அனணப் பாளையம் கிரா மத்தைச் சேர்ந்தவர் கருப்பண்ணன். இவரது மகன் ஜெயப்பிரகாஷ் (வயது 29). எம்.எஸ்சி.பி.எட். பட்டதாரி. இன்னும் திருமணம் ஆகவில்லை.
இன்சூரன்ஸ் ஊழியர்
இந்த நிலையில் ஜெயபிரகாஷ் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று திருச்செங்கோட்டில் உள்ள இன்சூரன்ஸ் கம்பெனி அலுவலகத்திற்கு சென்று விட்டு மாலையில் அவரது மொபட்டில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
அவர் ஹெல்மெட் அணிந்து வண்டியை ஓட்டி சென்றது குறிப்பிடத்தக்கது. திருச்செங்கோடு-ராசிபுரம் சாலையில் குருசாமிபாளையம்-வண்டிப்பேட்டை அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அருகில் ராசிபுரத்தை நோக்கி சென்றபோது பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் ஹெல்மெட் அணிந்த நிலையில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ஜெயப்பிரகாஷ் பரிதாபமாக இறந்தார்.
விசாரணை
அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் ஜெயப்பிரகாஷ் இறந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும் அவரது நண்பர்கள், உறவினர்கள், 500-க்கும் மேற்பட்டவர்கள் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். ஜெயப்பிரகாஷ் விபத்தில் இறந்த சம்பவம் அணைப்பாளையம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.






