சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ரூ.38.27 லட்சத்துக்கு ஏலம்

வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பிரபல எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ரூ.38.27 லட்சத்துக்கு ஏலம்
Published on

பரமத்தி வேலூர்:

சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலுார் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் தங்களது தோட்டத்தில் விளை வித்த வேளாண் பொருட்களை விற்பனை செய்வதற்காக கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பிரபல எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

தேங்காய்

இந்த வாரம் நடந்த ஏலத்தில் 32.57 குவிண்டால் எடை கொண்ட 8 ஆயிரத்து 613 தேங்காய் விற்பனைக்கு வந்தது.இதில் தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.24.59-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.20.00-க்கும், சராசரி விலையாக ரூ.23.19-க்கும் என மொத்தம் ரூ. 74ஆயிரத்து 825-க்கு விற்பனையானது.

தேங்காய் பருப்பு

அதேபோல்511.34 குவிண்டால் எடை கொண்ட 1019-மூட்டை தேங்காய் பருப்பு விற்ப னைக்கு வந்தது.

இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.78.90-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.72.89-க்கும், சராசரி விலையாக ரூ.77.29-க்கும் விற்பனையானது.

2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.76.77-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.59.19-க்கும், சராசரி விலையாக ரூ.71.99-க்கும் என மொத்தம் ரூ.37லட்சத்து52ஆயிரத்து 905-க்கு விற்பனையானது.

சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 38 லட்சத்து27 ஆயிரத்து 730-க்கு விற்பனையானது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com