என் மலர்
உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவி மாயம்
- மேல்சாத்தம்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.காம் படித்து கொண்டிருந்த இவர் கடந்த 1 மாதமாக கல்லூரிக்கு போகாமல் வீட்டில் இருந்து வருகிறார்.
- இந்நிலையில் கடந்த 8-ந் தேதி இரவு குடும்பத்தினர் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது ரீனாவை காணவில்லை.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டன்பட்டி அருகே சிங்கிலிபட்டி பகுதியை சேர்ந்தவர் வீரமணி (45). இவரது மனைவி நல்லம்மாள் (38). இவர்கள் கூலி வேலை செய்து வருகிறார்கள். இவரது மகள் ரீனா (19).
மேல்சாத்தம்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.காம் படித்து கொண்டிருந்த இவர் கடந்த 1 மாதமாக கல்லூரிக்கு போகாமல் வீட்டில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 8-ந் தேதி இரவு குடும்பத்தினர் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது ரீனாவை காணவில்லை. இதையடுத்து பெற்றோர் பல்வேறு இடங்களில் ரீனாவை தேடி பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து நல்லம்மாள் வேலகவுண்டன்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவி ரீனாவை தேடி வருகின்றனர்.
Next Story






