என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Election of new administrators"

    • நீதிபதிகள் பாராட்டு
    • பரிசுகள் வழங்கினார்

    பரிசுகள் வழங்கினார்திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது.

    அதில் தலைவராக ஏ.ஞானமோகன், செயலாளராக எம்.முத்தமிழ் செல்வி, துணைத் தலைவராக பி.பால மணவாளன், பொருளாளராக சி.சேரன், உட்பட பல்வேறு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    நிர்வாகிகளுக்கு மாவட்ட கூடுதல் நீதிபதி எஸ் மீனா குமாரி, சார்பு நீதிபதி எஸ். அசின்பானு, உட்பட நீதிபதிகள், நீதித்துறை நடுவர்கள், மூத்த வழக்கறிஞர்கள், பொதுமக்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். பின்னர் மூத்த வழக்கறிஞர்களை நீதிபதிகள் பாராட்டி பரிசுகளை வழங்கினார்கள்.

    • நாமக்கல்லை மையமாக கொண்டு லாரி உரிமையாளர்கள் சங்கமான நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது.
    • தேர்தல் வாக்குப்பதிவு காலை காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்கு பதிவு நடைபெற உள்ளன.

    நாமக்கல்:

    நாமக்கல் தாலுக்கா லாரி உரி மையாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறன.

    தேர்தல்

    நாமக்கல்லை மையமாக கொண்டு லாரி உரிமையாளர்கள் சங்கமான நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் மொத்தம் 4,445 உறுப்பினர்கள் உள்ளனர்.

    தேர்தல் வாக்குப்பதிவு காலை காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்கு பதிவு நடைபெற உள்ளன.

    பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தலைவர், செயலாளர், பொருளாளர், உதவி தலைவர், உதவி செயலாளர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று மாலை எண்ணப்படும். தொடர்ந்து நாளை 11ந் தேதி காலை செயற்குழு உறுப்பினர்கள் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு கள் அறிவிக்கப்படஉள்ளன.

    இந்த நிலையில் நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்க தற்போதைய செயலாளர் அருள் தலைமையில் ஒரு அணியினரும், தற்போதைய உதவித் தலைவர் சுப்புரத்திணம் தலைமையில் ஒரு அணியினரும் புதிய நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்.

    காலை 11 மணி நிலவரப்படி 1800 வாக்குகள் பதிவாகின. சங்க தேர்தல் நாமக்கல் பகுதி லாரி உரிமையாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×