என் மலர்
நாமக்கல்
- நாமக்கல் மாவட்டம் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை லேசான சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
- மேலும் வெயிலின் கடும் தாக்கம் காரணமாக வாடிய பயிர்கள் துளிர்விடும் நிலை ஏற்பட்டுள்ளது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஆனங்கூர், அய்யம்பாளை யம், பிலிக்கல் பாளையம், அண்ணா நகர், சானார் பாளையம், பாண்டமங்கலம், ஜேடர்பாளையம், வடகரை யாத்தூர், கபிலர்மலை, பரமத்தி, மணியனூர், கந்தம்பாளையம், பெருங் குறிச்சி, சோழசிரமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை லேசான சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து பலத்த மழை இரவும் பெய்து கொண்டிருந்தது. மழையின் காரணமாக தார் சாலை வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்கள், பல்வேறு பகுதிகளுக்கு கூலி வேலைக்கு சென்று விட்டு நடந்து செல்பவர்கள் நனைந்து கொண்டே சென்றனர்.
அதேபோல் சுற்று வட்டாக பகுதிகளில் சாலை ஓரங்களில் விற்பனை கடைகள், பூக்கடைகள், பழக்கடைகள், சிற்றுண்டி கடைகள், உள்ளிட்ட பல்வேறு கடைக்காரர்களும் மழையின் காரணமாக வியாபாரம் செய்ய முடி யாமல் அவதிப்பட்டனர்.
அதேபோல் அக்னி நட்சத்திரம் தொடங்கி பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் தொடர்ந்து வாட்டி வந்த கடும் வெயி லின் தாக்கம் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிப் பட்டு வந்தனர். இந்நிலையில் பெய்த மழையால் குளிர்ச்சியான சீதோசன நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வெயிலின் கடும் தாக்கம் காரணமாக வாடிய பயிர்கள் துளிர்விடும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மழையால் தார் சாலை ஓரங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
மழையின் காரணமாக விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- தமிழகத்தில் கடந்த, 3 ஆண்டுகளுக்கு முன்பு, கடைகள் மற்றம் வணிக நிறுவனங்களில் பயன்ப டுத்தப்படும், அனைத்து வகையான தராசுகளுக்கும் முத்திரை கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டது.
- சிறு வணிகர்கள் பயன்படுத்தும் எடை போடும் தராசுகளின் ஆண்டு முத்திரைக் கட்டணத்தை, 50 சதவீதம் உயர்த்தி உள்ளது.
நாமக்கல்:
வணிகர் சங்கங்களின் பேரமைப்பின், நாமக்கல் மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் கடந்த, 3 ஆண்டுகளுக்கு முன்பு, கடைகள் மற்றம் வணிக நிறுவனங்களில் பயன்ப டுத்தப்படும், அனைத்து வகையான தராசுகளுக்கும் முத்திரை கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டது. கொரோனா காலங்களில் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி, வணிகர்களின் வாழ்வாதாரம் பரிதாப நிலைக்கு சென்று, தற்போது படிப்படியாக மீண்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழக அரசின், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுதுறை, சிறு வணிகர்கள் பயன்படுத்தும் எடை போடும் தராசுகளின் ஆண்டு முத்திரைக் கட்ட ணத்தை, 50 சதவீதம் உயர்த்தி உள்ளது. மேலும், முறையான பயன்பாட்டிற்கான அபராத கட்டணத்தையும் உயர்த்தி அறிவித்துள்ளது.
அதில், குறிப்பாக, 30 கிலோ வரை எடை போடும் தராசுகளின் முத்திரை கட்டணத்தை, ரூ.400-ல் இருந்து, 600 ஆக உயர்த்தி யுள்ளது. அதேபோல், ஒவ்வொரு எடை போடும் தராசுகளின் அளவுகளுக்கு ஏற்ப, அதன் மறு முத்திரைக் கட்டணம் வெகுவாக உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போதுள்ள நெருக்க டியான பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு, உயர்த்தப்பட்ட முத்திரை கட்டணம் மற்றும் அபராத கட்டண அறிவிப்பை தமிழக அரசு திரும்பப் பெற்று, சிறு குறு வணிகர்களின் வாழ்வா தாரத்தை காத்திட வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.
- கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ், நடப்பு கல்வி ஆண்டில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில், மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், கடந்த, ஏப்ரல் மாதம் ஆன்லைன் மூலம் பெறப்பட்டது.
- 103 பள்ளிகளில், நிர்ணயம் செய்யப்பட்ட இடங்களைக் காட்டிலும், கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
நாமக்கல்:
கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ், நடப்பு கல்வி ஆண்டில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில், மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், கடந்த, ஏப்ரல் மாதம் ஆன்லைன் மூலம் பெறப்பட்டது.
அதன்படி 145 தனியார் பள்ளிகளில், 25 சதவீதம் இடஒதுக்கீட்டில் சேர்க்கை பெற 1,892 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், 103 பள்ளிகளில், நிர்ணயம் செய்யப்பட்ட இடங்களைக் காட்டிலும், கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
மீதம் உள்ள, 42 தனியார் பள்ளிகளில், இருக்கின்ற இடங்களுக்கு ஏற்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதை யடுத்து, குலுக்கல் முறையில் மாணவ, மாணவிகள் சேர்க்கை பெற 103 பள்ளிக ளில் சிறப்பு முகாம் நடந்தது.
அதற்காக, ஒவ்வொரு தனியார் பள்ளிகளுக்கும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் அடங்கிய குழுவினர் நியமிக்கப்பட்டனர்.
மேலும், அரசு விதிமுறைகளைப் பின்பற்றி குலுக்கல் நடக்கிறதா என்பதை கண்காணிக்கவும், மாவட்ட கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில், நுழைவு நிலை வகுப்பில் சேர்க்கை பெற, 1,600 மாணவ, மாணவியர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். அதேபோல், 42 தனியார் பள்ளிகளில், 25 சதவீதம் இடஒதுக்கீட்டின் கீழ், நேரடியாக மாணவ, மாண வியர் தேர்வு செய்யப்பட்ட னர் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தனியார் நர்சரிகள் அமைத்து பழக்கன்றுகள், தென்னங்கன்றுகள் மற்றும் காய்கறி நாற்றுகள் கொள்முதல் செய்தும், உற்பத்தி செய்தும் விற்பனை செய்யப்படுகிறது.
- இவ்வாறு விற்பதற்கு விதைச் சட்டத்தின் படி லைசென்ஸ் பெற வேண்டியது கட்டாயமாகும்.
நாமக்கல்:
சேலம், நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், பரவலாக தனியார் நர்சரிகள் அமைத்து பழக்கன்றுகள், தென்னங்கன்றுகள் மற்றும் காய்கறி நாற்றுகள் கொள்முதல் செய்தும், உற்பத்தி செய்தும் விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறு விற்பதற்கு விதைச் சட்டத்தின் படி லைசென்ஸ் பெற வேண்டியது கட்டாயமாகும். லைசென்ஸ் பெறாமல் விற்பனை செய்பவர்கள் மீது விதைகள் கட்டுப்பாட்டு சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோர்ட் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
புதிய லைசென்ஸ் வேண்டி விண்ணப்பிக்க, சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், 4-வது தளத்தில் அறை எண் 402-ல் இயங்கும், விதை ஆய்வு துணை இயக்குநர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களை ஒப்படைத்து, கட்டணம் ரூ.1,000 செலுத்தி லைசென்ஸ் பெறலாம்.
பழம், காய்கறி நாற்றுகள், தென்னங்கன்றுகள் இருப்பு பதிவேட்டில் பயிர் மற்றும் ரகம் வாரியாக இருப்பு வைத்து பதிவேடுகளை பராமரிக்க வேண்டும். விற்கப்படும் நாற்றுகளுக்கு விற்பனை ரசீது, வாங்குபவர்கள் கையொப்பம் பெற்று வழங்கப்பட வேண்டும்.
இருப்பு மற்றும் விலைப் பலகை பராமரிக்க வேண்டும், லைசென்ஸ் இல்லாமல், நர்சரி அமைத்துள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்து லைசென்ஸ் பெற்றுக்கொள்ள வேண்டும். லைசென்ஸ் பெறாமல் விற்பனை செய்வர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் விதை ஆய்வு துணை இயக்குநர் செல்வ மணி தெரிவித்துள்ளார்.
- விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர்.
- விவசாயிகள் தங்களின் கரும்புகளை விற்றுச் செல்வதற்காக மோகனூரில் செயல்பட்டு வரும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா அண்ணா நகர், சாணார்பாளையம், சேளூர், பிலிக்கல் பாளையம், சின்ன மருதூர், பெரிய மருதூர், செல்லப்பம்பாளையம், கபிலர் மலை, கபிலக்குறிச்சி, பாகம் பாளையம், ஆனங்கூர், கண்டிபாளையம், ஜேடர்பாளையம், சிறு நல்லிகோவில், கொத்தமங்கலம், குரும்பலம் மகாதேவி, ஜமீன் இளம்பள்ளி, சோழசிராமணி மாரப்பம்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர். விவசாயிகள் தங்களின் கரும்புகளை விற்றுச் செல்வதற்காக மோகனூரில் செயல்பட்டு வரும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள் தங்களின் கரும்புகளை வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வரை விற்பனை செய்து வருகின்றனர்.
வாங்கிய கரும்புகள் மூலம் சாறு பிழிந்து பாகு ஆக்கி அச்சு வெல்லம் மற்றும் உருண்டை வெல்லம், நாட்டு சக்கரை தயாரித்து 30 கிலோ சிப்பம் ஆக்குகின்றனர். தயார் செய்யப்பட்ட வெல்ல சிப்பங்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பிலிக்கல் பாளையத்தில் செயல்பட்டு வரும் வெல்லம் ஏலம் மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.
வெல்லம் சிப்பங்களை வாங்கி தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தராஞ்சல் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர். கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,250-க்கும், அச்சுவெல்லம் ரூ.1,320 க்கும் விற்பனையானது.
நேற்று 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,285-க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,370-க்கும் விற்பனையானது. கரும்பு ஒரு டன் ரூ.3000 வரை விற்பனையாகிறது. உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்வு அடைந்துள்ளது. இதனால் கரும்பு பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- பரமத்திவேலூர் அருகே வெங்கமேடு பெரியார் நகரில் உள்ள சுயம்பு வெள்ளைக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த 13-ந் தேதி இரவு கிராம சாந்தி மற்றும் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
- 14-ந் தேதி கரகம் பாளித்தலும், 15-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை தினந்தோறும் இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், தீபா ராதனையும் நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே வெங்கமேடு பெரியார் நகரில் உள்ள சுயம்பு வெள்ளைக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த 13-ந் தேதி இரவு கிராம சாந்தி மற்றும் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
14-ந் தேதி கரகம் பாளித்தலும், 15-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை தினந்தோறும் இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், தீபா ராதனையும் நடைபெற்றது.
கடந்த 21-ந் தேதி மறு காப்பு கட்டும் நிகழ்ச்சியும், 22-ந் தேதி மாலை அம்ம னுக்கு வடி சோறு படைத்தல் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து பூத்தட்டு எடுத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பூ தட்டுகளுடன் ஊர்வல மாக கோவிலுக்கு சென்றனர்.
பின்னர் அம்மனுக்கு பூச்சொரிதல் நடைபெற்றது. நேற்று முன்தினம் 23-ந் காலை பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, தீர்த்த குடம் எடுத்து வந்தனர். மாலை பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தலும், இரவு பொங்கல் மாவிளக்கு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நேற்று காலை கிடா வெட்டும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபேற்றது. திருவிழா விற்கான ஏற்பாடுகளை பெரியார் நகர் வெள்ளக்கல் மாரியம்மன் கோவில், திருவிழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- குப்புச்சிபாளை யத்தில் பா.ம.க வினர் சார்பில் வன்னியர் சங்க முன்னாள் தலைவர் காடுவெட்டி குருவின் 5-ம் ஆண்டு நினைவு அஞ்ச லிக்காக பேனர் வைக்கப் பட்டிருந்தது.
- மோகனூர் செல்லும் சாலை யில் குப்புச்சிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட னர்.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் அருகே உள்ள குப்புச்சிபாளை யத்தில் பா.ம.க வினர் சார்பில் வன்னியர் சங்க முன்னாள் தலைவர் காடுவெட்டி குருவின் 5-ம் ஆண்டு நினைவு அஞ்ச லிக்காக பேனர் வைக்கப் பட்டிருந்தது. இந்த பிளக்ஸ் பேனரை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் கிழித்து சென்றனர்.
நேற்று காலை பிளக்ஸ் பேனரை கிழிக்கப்பட்டி ருந்ததை பார்த்த பா.ம.க. வினர் 50-க்கும் மேற்பட் டோர் மர்ம நபர்களை கைது செய்யக்கோரி பரமத்திவேலூரில் இருந்து மோகனூர் செல்லும் சாலை யில் குப்புச்சிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட னர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரமத்தி வேலூர் போலீசார் பிளக்ஸ் பேனரை கிழித்த மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்கப்ப டும் என உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பா.ம.க வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- அர்த்தநாரீஸ்வரர் நகருக்கு எழுந்தருளி திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வைகாசி விசாகத்தேர் திருவிழா 14 நாட்கள் விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
- அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்த்துடன் தொடங்கியது.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு மலைக்கோவிலில் எழுந்தருளி உள்ள அர்த்தநாரீஸ்வரர் நகருக்கு எழுந்தருளி திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வைகாசி விசாகத்தேர் திருவிழா 14 நாட்கள் விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்த்துடன் தொடங்கியது. செங்கோட்டுவேலவர் சந்நதிக்கு எதிரில் அமைந்துள்ள 36 கணுக்களை உடைய கொடிமரத்தில் பாரம்பரிய முறைப்படி செங்குந்தர் எழுகரை நாடு நெசவாளர்கள் கொடுத்த துணியை கொண்டு கொடி ஏற்றப்பட்டது.
கொடிசீலையின் ஒரு முனையில் தெய்வத்தின் வாகன வரைபடம் உள்ளது. அந்த முனையில் மாவிலை கூர்ச்சம் வைத்துகட்டி பூஜைகள் செய்து தர்பைகயிறு,கொடிதுணி, கயிறு என்ற மூன்றும் ஒன்றாக சேர்த்து கொடிமரத்தில் ஏற்றி சுற்றி கட்டுவார்கள்.
முன்னதாக முதல் நிகழ்ச்சியாக துவஜாரோகணம் என்னும் சிறப்பு பூஜைகள் அர்த்நாரீஸ்வரருக்கு நடந்தது. தொடர்ந்து உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளிக்க கலச பூசைகள் செய்த சிவாச்சாரியர்கள் கொடியுடன் தர்ப்பை, மாவிலை மற்றும் மலர்கள், கூர்சரம் ஆகியவற்றை வைத்து கட்டி கொடியேற்றினார்கள். தொடர்ந்து அரத்தநாரீஸ்வர் சந்நிதானம் முன்பு உள்ள கொடி மரத்திலும் கொடியேற்றப்பட்டது.
நிகழ்ச்சியில் திருச்செங்கோடு எம்.எல்.ஏ. ஈஸ்வரன், நாமக்கல் எம்.பி. சின்ராஜ், நகர்மன்றத்தலைவர் நளினி சுரேஷ்பாபு, அர்த்நாரீஸ்வரர் கோவில் இணைஆணையர் மற்றும் செயல் அலுவலர் ரமணிகாந்தன், அறங்காவலர் குழுத்தலைவர் தங்கமுத்து, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கார்த்திகேயன், பிரபாகரன், அர்ஜீனன், அருணா சங்கர்,கொத்துகாரர் அன்பரசன், ஊர்கவுண்டர் ராஜா, நகர்மன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.டி. நிறுவனங்களின் மேலாண்மை இயக்குநர் பரந்தாமன், கொங்கு நாடுமக்கள் தேசிய கட்சி மாவட்ட பொருளாளர் வெங்கடாசலம், கொள்கை பரப்பு செயலாளர் நந்தகுமார், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் வெற்றி, செந்தில் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
விழாவின் தொடர் நிகழ்வாக வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) 4 ம் திருவிழா அன்று உற்சவர் சுவாமி திருமலையில் இருந்து நகருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. 2-ந்தேதி(வெள்ளிக்கிழமை) 9 ம் திருவிழா அன்று திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் திருத்தேர் வடம் பிடித்தலும் நடக்க உள்ளது.
7-ந்தேதி(புதன்கிழமை) 14-ம் திருவிழா அன்று அர்த்தநாரீஸ்வர் பரிவார தெய்வங்களுடன் திருமலை சந்நிதானத்திற்கு எழுந்தருளுவார். விழாவை ஒட்டி கண்ணகி விழா கம்பன் விழா சேக்கிழார் விழா வள்ளலார் விழா நடக்கிறது. இதில் பல்வேறு தலைப்புகளில் பட்டி மன்றங்கள், கவியரங்குகள், வழக்காடுமன்றங்கள் நடக்க உள்ளது.
- பரமத்திவேலூர் தாலுகா நன்செய் இடையாறு மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் உடல் வலி காரணமாக பல்வேறு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
- குருணை மருந்தை நேற்று குடித்தார். அப்போது வயிறு எரிச்சல் ஏற்படவே சத்தம் போட்டுள்ளார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நன்செய் இடையாறு மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 73). இவர் உடல் வலி காரணமாக பல்வேறு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
இருப்பினும் உடல் வலி சரியாகாததால் அவதியில் இருந்து வந்துள்ளார். இதனால் அடிக்கடி மது அருந்தி வந்துள்ளார். உடல் வலி குணமாகாததால் விரக்தியில் இருந்த ராஜகோபால், வீட்டில் இருந்த குருணை மருந்தை நேற்று குடித்தார். அப்போது வயிறு எரிச்சல் ஏற்படவே சத்தம் போட்டுள்ளார்.
சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து ஆம்புலன்ஸ் மூலம் பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு ராஜகோபால் உயிரிழந்தார். இது குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தாலுகா மற்றும் பரமத்தி வட்டார போக்கு வரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட தனி யார் பள்ளி வாக னங்களை திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. கவுசல்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- அவற்றில் 180 பள்ளி வாக னங்கள் மட்டும் தகுதியான நிலையில் உள்ளது என கண்டறியப்பட்டது.
பரமத்திவேலூர்:
தமிழக அரசு உத்தரவுபடி வரும் ஜூன் மாதம் பள்ளி கள் திறக்கப்படுகின்றன. இதையெட்டி பரமத்தி வேலூர் தாலுகா மற்றும் பரமத்தி வட்டார போக்கு வரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட தனி யார் பள்ளி வாக னங்களை திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. கவுசல்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கந்தம்பாளையம் தனி யார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்த ஆய்வில் வருவாய்த்துறை. பள்ளிக் கல்வித் துறை, போலீசார் மற்றும் போக்கு வரத்து துறை அலுவலர்கள் ஆய்வில் ஈடுபட்டனர். அவற்றில் 180 பள்ளி வாக னங்கள் மட்டும் தகுதியான நிலையில் உள்ளது என கண்டறியப்பட்டது.
மீதமுள்ள 10 பள்ளி வாகனங்கள் குறைகளை கண்டறியப்பட்டு அவற்றை நிவர்த்தி செய்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்திய பின் இயக்க வேண்டும் என ஆர்.டி.ஓ. கவுசல்யா அவற்றை திருப்பி அனுப்பினார்.
இந்த ஆய்வின் போது நாமக்கல் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகன், பரமத்தி மோட்டார் வாகன ஆய்வா ளர் சரவ ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவல ரின் உதவி யாளர் கோபால கிருஷ்ணன் உடன் இருந்தனர். மேலும் 204 பள்ளி பஸ் டிரைவர் மற்றும் உதவியா ளர்களுக்கு இலவச கண் பரிசோதனையும், உடல் பரி சோதனையும் மேற்கொ ள்ளப் பட்டது. பள்ளி டிரைவர்க ளுக்கு வாகனம் ஓட்டும்போது சாலையில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து பரமத்தி மோட்டார் வாகன ஆய்வாளர் சரவ ணன் விளக்கம் அளித்தார்.
- பர மத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் மகா மாரி யம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது.
- 18 வகை யான வாசனைத் திரவியங்க ளால் அபிஷேகம் நடை பெற்றது.
பரமத்தி வேலூர்;
நாமக்கல் மாவட்டம் பர மத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் மகா மாரி யம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதை முன்னிட்டு நேற்று மஹா மாரியம்மனுக்கு பால், தயிர் ,பன்னீர், இளநீர் ,சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் ,பஞ்சா மிர்தம் உள்ளிட்ட 18 வகை யான வாசனைத் திரவியங்க ளால் அபிஷேகம் நடை பெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.பின்னர் மகா மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர் களுக்கு காட்சி அளித்தார்.
இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்ன தானம் வழங்கப்பட்டது.மாலை 6 மணிக்கு மேல் உற்சவர் மகா மாரி யம்மனுக்கு அலங்காரம் நடைபெற்று. அதனைத் தொடர்ந்து மகா மாரி யம்மன் சப்பாரத்தில் திரு விதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
- ஏராளமான வியாபாரிகள் நேரடியாக வந்து மொத்தமாக கொள்ளமுதல் செய்து, இந்தியா முழுவதும் விற்பனை செய்வர்கள்.
- விசைத்தறி தொழிலாளர்களுக்கு 10 சதவீதம் புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் உடன்பாடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் ஏராளமான விசைத்தறி கூடங்கள் செயல்படுகிறது. இந்த விசைத்தறி கூடத்தில் லுங்கி, துண்டு உள்ளிட்டடை உற்பத்தி செய்யப்படுகிறது. ஏராளமான வியாபாரிகள் நேரடியாக வந்து மொத்தமாக கொள்ளமுதல் செய்து, இந்தியா முழுவதும் விற்பனை செய்வர்கள்.
கடந்த வாரம் விசைத்தறி தொழிலாளர்களுக்கு புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் 10 சதவீதம் கூலி உயர்வு வழங்க உடன்பாடு ஏற்பட்டது. ஏற்கனவே துணிகளின் உற்பத்தி செலவு அதிகப்பு, விற்பனை தொய்வு, உற்பத்தியாளர்கள் தினமும் அதிகளவு நஷ்டத்தை சந்தித்து வரு கின்றனர். தற்போது புதிய கூலி உயர்வால் நஷ்டம் அதிகரித்து காணப்படும்.
இந்நிலையில் தனியார் மண்டபத்தில் பள்ளிபாளையம் வட்டார லுங்கி உற்பத்தியாளர்கள் சங்க கூட்டம் தலைவர் பி.எஸ்.கே (எ) கந்தசாமி தலையைில் நடந்தது. இதில், நஷ்டத்தை சமாளிக்கும் வகையில் உற்பத்தி செய்யும் லுங்கி, மற்றும் துணிகளுக்கு கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வது என உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து, பள்ளி பாளையம் வட்டார லுங்கி உற்பத்தியார்கள் சங்கத்தின் தலைவர் பி.எ ஸ்.கே. (எ) கந்தசாமி கூறியதாவது:-
விசைத்தறி தொழிலாளர்களுக்கு 10 சதவீதம் புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே துணிகளின் உற்பத்தி செலவு அதிகரிப்பு, பராமரிப்பு செல்வு, மின்கட்டணம், இதர செலவு களால் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. புதிய கூலி உயர்வால் நஷ்டம் மேலும் அதிகரிக்கும். இதனை சமாளிக்க, வேறு வழியில்லா மல் உற்பத்தி செய்யும் லுங்ககளுக்கு, ஒரு மீட்டருக்கு 3 ரூபாய் உயர்த்த வேண்டும். அப்போது ஒரளவுக்கு சமாளிக்க முடியும். ஆனால், தற்போது சூழ்நிலை பொறுத்து, ஒரு ரூபாய் மட்டும் உயர்த்த சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. விற்பனையாளர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கூறினார்.






