என் மலர்
நாகப்பட்டினம்
வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். டெல்லியில் போராடும் விவசாயிகளை அழைத்து பேசி சுமுக தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
நாகப்பட்டினம்:
நாகை கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத்தலைவர் ராஜு தலைமை தாங்கினார். ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் காந்தி, அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு மாநில செயலாளர் சிவக்குமார், மாவட்ட செயலாளர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மாவட்ட பொருளாளர் அந்துவன் சேரல் நன்றி கூறினார்.வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். டெல்லியில் போராடும் விவசாயிகளை அழைத்து பேசி சுமுக தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
நாகூர் தர்காவில் நடந்த சிறப்பு வழிபாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
நாகை:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி தேவாலயத்தில் இன்று காலை நடைபெற்ற பிரார்த்தனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
பிரார்த்தனையில் பங்கேற்ற முதலமைச்சருக்கு தேவாலயம் சார்பில் வேளாங்கண்ணி மாதா சொரூபம் வழங்கப்பட்டது.

மழையால் சேதமடைந்த நாகூர் தர்கா குளத்தை ஆய்வு செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுச்சுவரை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் நாகூர் தர்காவில் நடந்த சிறப்பு வழிபாட்டில் தொப்பி அணிந்தபடி முதலமைச்சர் கலந்து கொண்டார்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி தேவாலயத்தில் இன்று காலை நடைபெற்ற பிரார்த்தனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
பிரார்த்தனையில் பங்கேற்ற முதலமைச்சருக்கு தேவாலயம் சார்பில் வேளாங்கண்ணி மாதா சொரூபம் வழங்கப்பட்டது.
பின்னர் நாகை மாவட்டம் நாகூர் தர்காவில் கனமழையால் சேதமடைந்த குளத்தின் சுற்றுச்சுவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார்.

மழையால் சேதமடைந்த நாகூர் தர்கா குளத்தை ஆய்வு செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுச்சுவரை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் நாகூர் தர்காவில் நடந்த சிறப்பு வழிபாட்டில் தொப்பி அணிந்தபடி முதலமைச்சர் கலந்து கொண்டார்.
மயிலாடுதுறையில் கொட்டித்தீர்த்த கனமழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளது. எனவே உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையால் பல இடங்களில் விளை நிலங்கள் நீரில் மூழ்கி உள்ளன. ஆறுகள், ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
மயிலாடுதுறை அருகே உள்ள நல்லத்துக்குடி, கோடங்குடி, செருதியூர் ஆகிய ஊராட்சி பகுதிகளுக்கு வடிகாலாக மஞ்சளாறு உள்ளது. இந்த மஞ்சள் ஆற்றில் நீர் நிரம்பி செல்வதாலும் நல்லத்துக்குடி பகுதியில் வடிகால் வாய்க்கால்கள் சரிவர தூர்வாரப்படாததாலும் 350 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. கடந்த 5 நாட்களாக நீரில் மூழ்கியுள்ள நெற்பயிர்கள் அழுகி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். நல்லத்துக்குடி பகுதியில் வடிகால்களை உடனடியாக சீரமைத்து நீரில் மூழ்கியுள்ள நெற்பயிர்களை காப்பாற்ற வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதைப்போல உளுத்துக்குப்பை, கடுவங்குடி, அருவாப்பாடி, ஆனதாண்டவபுரம் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
பொறையாறு அருகே உள்ள திருக்கடையூர் பகுதியில் கொட்டித்தீர்த்த பலத்த மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. திருக்கடையூர் பகுதியில் தாழ்வான இடங்களை மழைநீர் சூழ்ந்து உள்ளது. திருக்கடையூர், டீ.மணல்மேடு, கிள்ளியூர், மாத்தூர், பிள்ளைபெருமாநல்லூர், ஆக்கூர், கிடங்கல், மாமாகுடி, காலமநல்லூர், மருதம்பள்ளம், மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பயிர் செய்த பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் வெள்ளநீர் இடுப்பு அளவு சூழ்ந்து உள்ளதால் கதிர் வரும் நிலையில் உள்ள நெற்பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளது. நீரில் மூழ்கிய பயிர்களை வேளாண்மை உதவி இயக்குனர் தாமஸ், பாரம்பரிய நெல் சாகுபடி திட்ட ஒருங்கிணைப்பாளர் செழியன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். அப்போது அவரிடம் விவசாயிகள் வயல்களில் சூழ்ந்துள்ள மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
கொள்ளிடம் அருகே பழையபாளையம், வேட்டங்குடி, கடைவாசல், மகாராஜபுரம், பச்சைபெருமாநல்லூர், ஆலங்காடு, திருக்கருகாவூர் உள்ளிட்ட 10 கிராமங்களில் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.
இந்த கிராமங்களில் சுமார் 15,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. தற்பொழுது நீரில் மூழ்கி உள்ள நெற்பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த நஷ்டத்தை சந்தித்து உள்ளனர். இப்பகுதியில் வடிகால் வாய்க்கால்கள் சரியாக தூர்வாரப்படாததால் தண்ணீர் வடிய குறைந்தது ஒரு வாரம் ஆகும் என கூறப்படுகிறது.
இது குறித்து கொள்ளிடம் ஒன்றியக்குழு உறுப்பினர் சுகன்யாபிரேம்குமார் கூறியதாவது:-
விவசாயிகள் ஒரு ஏக்கர் சம்பா சாகுபடி செய்ய குறைந்தபட்சம் ரூ.40 ஆயிரம் செலவு ஆகும். தொடர்ந்து பெய்த கனமழையால் சாகுபடி செய்த அனைத்து சம்பா பயிர்களும் அழுகும் நிலையில் உள்ளது. எனவே விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர் மழையால் நாகூர் தர்கா குளத்தின் கரையோரத்தில் உள்ள சாலை உள்வாங்கியது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
நாகூர்:
புரெவி புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக கன மழை பெய்தது. இந்த மழையினால் பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மேலும் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. வயல்களில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காணப்படுகிறது.
நாகையை அடுத்த நாகூர் தர்கா குளத்தின் தென்கரை பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இடிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் மேலும் உடைப்பு ஏற்படாமல் இருக்க மண் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் கனமழை காரணமாக நேற்று முன்தினம் இரவு தர்கா குளத்தின் கிழக்கு பகுதியில் சுற்றுசுவரின் கரை பகுதியில் சாலை திடீரென உள்வாங்கியது. இதனால் சுற்றுச்சவர் சேதமடைந்தது. பயங்கர சத்தத்துடன் சாலை உள்வாங்கியதால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களை வீடுகளில் இருந்து நள்ளிரவில் வெளியேற்றப்பட்டனர். மேலும் அந்த பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் உத்தரவின் பேரில் நாகை நகராட்சி ஆணையர் ஏகராஜ், தாசில்தார் கமலாதேவி, வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர்.
நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தர்கா குளம் தெருவில் 4 பாதைகளும் தடுப்புகள் வைத்து அடைத்தனர். மழை தொடர்ந்து பெய்து வருவதால் தர்கா குளத்தின் சுற்றுச்சுவர் எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ள அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தற்காலிக குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி நாகையில், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை கோட்டை வாசல்படி அருகே நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் நாகை, நாகூர் சுற்றுவட்டார பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தன. இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு குப்பைகளை தரம் பிரிக்கும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக புது ஆர்ச் சுடுகாடு அருகே நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தற்காலிகமாக குப்பை கிடங்கு செயல்படுகிறது. தற்போது இங்கு குப்பைகள் கொட்டப்படுகிறது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நாகை புது ஆர்ச் அருகே மெயின் ரோட்டில் அமர்ந்து மரக்கட்டைகளை போட்டு திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, எங்கள் பகுதியில் 100-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். இங்கு குப்பைகள் கொட்டப்படுவதால் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. அதில் ஏற்படும் புகை மூட்டத்தின் காரணமாக மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுவாச நோய்கள் ஏற்படுகிறது.
மேலும் குப்பை லாரிகள் அதிகவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகிறது. ஒரு மாதம் மட்டும் தற்காலிகமாக குப்பை கிடங்கு செயல்படும் என தெரிவித்து விட்டு கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக இந்த பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் குப்பைக்கிடங்கில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் குடியிருப்பு பகுதியில் வசிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். எனவே இந்த தற்காலிக குப்பை கிடங்கை மீண்டும் பழைய இடத்துக்கோ? அல்லது வேறு இடத்திற்கோ? மாற்ற வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாகை அருகே சிக்கல் கிராமத்தில் அரசு வேளாண் அறிவியல் நிலையம் உள்ளது. இந்த வேளாண் நிலையத்திற்கு சொந்தமாக 50 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. வேளாண் அறிவியல் நிலையம் அமைந்துள்ள பகுதியில் உள்ள சிக்கல் ஊராட்சி மோழித்திடலில் 40-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு வசித்து வந்தவர்களுக்கு ஆவராணி ரோடு பகுதியில் புதிதாக இடம் கொடுக்கப்பட்டு அதில் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையினால் சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்துக்கு சொந்தமான வயல்களில் தேங்கிய மழைநீர் குடியிருப்பு பகுதியில் புகுந்துள்ளது. இதை சீர் செய்து வயல்களில் இருந்து தண்ணீர் குடியிருப்பு பகுதியில் புகாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிக்கல் - பாலக்குறிச்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார், சிக்கல் வேளாண் அறிவியல் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதைதொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டத்தில் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாகையில், 15 நாட்களுக்கு பிறகு விசைப்படகு மீனவர்கள், கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் மீன்பிடி தொழில் பிரதான தொழிலாக உள்ளது. மாவட்ட பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும் மீன்பிடித்தொழில் விளங்கி வருகிறது. நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார் நகர், பழையார், புதுப்பட்டினம், பூம்புகார், தரங்கம்பாடி, திருமுல்லைவாசல், செருதூர், வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி, விழுந்தமாவடி, வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், கோடியக்கரை உள்ளிட்ட 54 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான நிவர் புயல் காரணமாக நாகையில் கடல் சீற்றமாக காணப்பட்டதால் கடந்த மாதம் 22-ந் தேதியில் இருந்து நாகையில் விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
இதையடுத்து நிவர் புயல் கரையை கடந்த பிறகு 3 நாட்டிக்கல் தூரம் சென்று மீன்பிடிக்க பைபர் படகு மீனவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவான புரெவி புயலால் நாகையில் மீண்டும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் மீண்டும் பைபர் படகு மீனவர்களும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதையடுத்து கடல் சீற்றம் குறைந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர். விசைப்படகு மீனவர்களும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லலாம் என மீன்வளத்துறை மூலம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விசைப்படகு மீனவர்கள் 15 நாட்களுக்கு பிறகு நேற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். முன்னதாக விசைப்படகுகளில் ஐஸ் மற்றும் தங்களுக்கு தேவையான சமையல் பொருட்கள், பாத்திரங்கள் உள்ளிட்டவற்றையும் ஏற்றி வைத்திருந்தனர்.
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருமருகலில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திட்டச்சேரி:
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் திருத்த சட்ட மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தியும் திருமருகல் தபால் நிலையம் எதிரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் மாசிலாமணி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாபுஜி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சரபோஜி, ஒன்றிய துணைச் செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய பொருளாளர் சந்திரசேகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
வேளாண் திருத்த சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பபட்டன.
அதேபோல் திருமருகல் பஸ்நிலையம் எதிரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவர் வி.சுப்பிரமணியன், நாகை மாவட்ட செயலாளர் அம்பிகாபதி, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் பொன் மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் ஸ்டாலின்பாபு, ஜனநாயக வாலிபர் சங்க உறுப்பினர் என்.எம்.பாலு மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
நாகை மாவட்டத்தில் மழையால் அதிக அளவில் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.
நாகப்பட்டினம்:
நாகை கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், நிவர், புரெவி புயல்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைச்சர் வேலுமணி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் ஓ.எஸ். மணியன், விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், நாகை எம்பி. செல்வராஜ், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனியநாதன், மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர், எம்.எல்.ஏ.க்கள் தமிமுன் அன்சாரி (நாகை), பவுன்ராஜ் (பூம்புகார்), பாரதி(சீர்காழி), ராதாகிருஷ்ணன் (மயிலாடுதுறை) மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் வேலுமணி பேசுகையில், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று(செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை(புதன்கிழமை) ஆகிய 2 நாட்கள் பார்வையிட உள்ளார் என கூறினார். மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 25 பயனாளிகளுக்கு நிவாரண உதவிவழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் அதிகமான மழை பெய்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மழை பாதிப்பு குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மூலமாக ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். நாகை மாவட்டத்தில் 191 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு 60 ஆயிரத்து 583 பேருக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன மாவட்டத்தில் 1,001 வீடுகள் சேதம் அடைந்துள்ளன, 252 கால்நடைகளும் இறந்துள்ளன. 1 லட்சத்து 48 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்சி உள்ளன.
ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் 122 இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அவற்றை சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பல்வேறு பகுதியில் இருந்து பொக்லின் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
நாகை மாவட்டத்தில் அதிக அளவில் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா காலத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஒரு அறையில் இருந்து கொண்டு என்ன செய்தார் என்று அனைவருக்கும் தெரியும். விளம்பரம் தேடுவதற்காக ஸ்டாலின் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
இதை தொடர்ந்து மகிழி, இறையான்குடி, ஆய்மூர் ஆகிய பகுதிகளில் மழையால் சேதமடைந்த பயிர்களை அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
புரெவி புயல் வலுவிழந்து கடல் சீற்றம் குறைந்ததால் நாகையில் 12 நாட்களுக்கு பிறகு பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் நிவர் புயல் காரணமாக கடந்த 23-ந் தேதி நாகை துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து புயல் தீவிரம் அடைந்ததால் 8-ம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. நிவர் புயல் உருவானதில் இருந்து நாகையில் விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதையடுத்து புயல் கரையை கடந்த பிறகு 3 நாட்டிக்கல் தூரம் மட்டும் சென்று மீன்பிடிக்க பைபர் படகு மீனவர்களுக்கு மீன்வளத்துறையினர் அனுமதி அளித்தனர்.
இதை தொடர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான புரெவி புயல் காரணமாக நாகையில் மீண்டும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் துறைமுக அலுவலகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
இந்த நிலையில் புரெவி புயல் வலுவிழந்ததால் கடல் சீற்றமும் குறைந்தது. இதையடுத்து 12 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இன்று (திங்கட்கிழமை) முதல் விசைப்படகு மீனவர்களும் கடலுக்கு செல்லலாம் என மீன்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து விசைப்படகுகளில் ஐஸ் ஏற்றும் பணியில் மீன்பிடி தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டனர். மேலும் தங்களுக்கு தேவையான சமையல் பொருட்கள், பாத்திரங்கள் உள்ளிட்டவற்றையும் விசைப்படகுகளில் ஏற்றி தயார் நிலையில் வைத்துள்ளனர்.
வாய்மேடு அருகே பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி சாலையோரத்தில் கவிழ்ந்தது.
வாய்மேடு:
கரூரில் இருந்து நாகை மாவட்டம் வேதாரண்யத்திற்கு பெட்ரோல் ஏற்றி கொண்டு ஒரு டேங்கர் லாரி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்த பழனியப்பன் மகன் திருமுருகன் (வயது30) என்பவர் ஓட்டி வந்தார். கிளீனராக சேலம் மாவட்டத்தை சேர்ந்த செல்வகுமார் மகன் ரமேஷ்குமார் (22) என்பவர் இருந்தார்.
இந்த நிலையில் வாய்மேட்டை அடுத்த மருதூர் மாடிக்கடை என்ற இடத்தில் சென்ற போது டிரைவரின் கட்டுபாட்டை இழந்து டேங்கர் லாரி, சாலையோரத்தில் கவிழ்ந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்து 2 கிரேன்கள் மூலம் டேங்கர் லாரியை மீட்டனர். இந்த விபத்தில் டிரைவரும், கிளீனரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சீர்காழி தட்சிணாமூர்த்தி நகரில் ஒருவரது வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் புக் செய்யப்பட்டதை அடுத்து ஏஜென்சி ஊழியர் ஒருவர், தேங்கிய வெள்ள நீரில் சிலிண்டரில் கயிறை கட்டி இழுத்து சென்று விநியோகம் செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து 1 வாரமாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இதனால் சீர்காழி தட்சிணாமூர்த்தி நகர், சின்ன தம்பி நகர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் குடியிருப்புகளை மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக மக்கள் மழை நீரைக் கடந்து அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு வெளியே சென்று வர சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சீர்காழி தட்சிணாமூர்த்தி நகரில் ஒருவரது வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் புக் செய்யப்பட்டதை அடுத்து ஏஜென்சி ஊழியர் ஒருவர், தேங்கிய வெள்ள நீரில் சிலிண்டரில் கயிறை கட்டி இழுத்து சென்று விநியோகம் செய்தார். இடைவிடாது மழையிலும் பணியாற்றிய அந்த ஊழியரின் செயலை மக்கள் பாராட்டினர்.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாகப்பட்டினத்தில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் நாகை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கருப்புக்கொடி ஏந்தி நாகை அவுரித்திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் போலீஸ் பன்னீர் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மதிவாணன் எம்.எல்.ஏ, செயற்குழு உறுப்பினர்கள் மேகநாதன், கோவிந்தராசு, ராஜேந்திரன்,
செந்தில்குமார் மற்றும் தி.மு.க.வினர் கொட்டும் மழையில் குடைபிடித்து கொண்டு கலந்து கொண்டனர்.
விவசாயிகளை வஞ்சிக்கும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய மத்திய அரசை கண்டிப்பது. விவசாயிகளின் உற்பத்தி செலவுக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.






