என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகையில், விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு புறப்பட்டு சென்றபோது எடுத்த படம்.
    X
    நாகையில், விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு புறப்பட்டு சென்றபோது எடுத்த படம்.

    நாகையில், 15 நாட்களுக்கு பிறகு விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்

    நாகையில், 15 நாட்களுக்கு பிறகு விசைப்படகு மீனவர்கள், கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் மீன்பிடி தொழில் பிரதான தொழிலாக உள்ளது. மாவட்ட பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும் மீன்பிடித்தொழில் விளங்கி வருகிறது. நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார் நகர், பழையார், புதுப்பட்டினம், பூம்புகார், தரங்கம்பாடி, திருமுல்லைவாசல், செருதூர், வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி, விழுந்தமாவடி, வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், கோடியக்கரை உள்ளிட்ட 54 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான நிவர் புயல் காரணமாக நாகையில் கடல் சீற்றமாக காணப்பட்டதால் கடந்த மாதம் 22-ந் தேதியில் இருந்து நாகையில் விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    இதையடுத்து நிவர் புயல் கரையை கடந்த பிறகு 3 நாட்டிக்கல் தூரம் சென்று மீன்பிடிக்க பைபர் படகு மீனவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவான புரெவி புயலால் நாகையில் மீண்டும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் மீண்டும் பைபர் படகு மீனவர்களும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதையடுத்து கடல் சீற்றம் குறைந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர். விசைப்படகு மீனவர்களும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லலாம் என மீன்வளத்துறை மூலம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விசைப்படகு மீனவர்கள் 15 நாட்களுக்கு பிறகு நேற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். முன்னதாக விசைப்படகுகளில் ஐஸ் மற்றும் தங்களுக்கு தேவையான சமையல் பொருட்கள், பாத்திரங்கள் உள்ளிட்டவற்றையும் ஏற்றி வைத்திருந்தனர்.

    Next Story
    ×