என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேங்கிய வெள்ள நீரில் சிலிண்டரில் கயிறை கட்டி இழுத்து சென்று விநியோகம்
    X
    தேங்கிய வெள்ள நீரில் சிலிண்டரில் கயிறை கட்டி இழுத்து சென்று விநியோகம்

    குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் சிலிண்டரை கட்டி இழுத்து சென்று விநியோகம் செய்த ஊழியர்

    சீர்காழி தட்சிணாமூர்த்தி நகரில் ஒருவரது வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் புக் செய்யப்பட்டதை அடுத்து ஏஜென்சி ஊழியர் ஒருவர், தேங்கிய வெள்ள நீரில் சிலிண்டரில் கயிறை கட்டி இழுத்து சென்று விநியோகம் செய்தார்.


    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து 1 வாரமாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இதனால் சீர்காழி தட்சிணாமூர்த்தி நகர், சின்ன தம்பி நகர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் குடியிருப்புகளை மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக மக்கள் மழை நீரைக் கடந்து அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு வெளியே சென்று வர சிரமப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் சீர்காழி தட்சிணாமூர்த்தி நகரில் ஒருவரது வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் புக் செய்யப்பட்டதை அடுத்து ஏஜென்சி ஊழியர் ஒருவர், தேங்கிய வெள்ள நீரில் சிலிண்டரில் கயிறை கட்டி இழுத்து சென்று விநியோகம் செய்தார். இடைவிடாது மழையிலும் பணியாற்றிய அந்த ஊழியரின் செயலை மக்கள் பாராட்டினர்.

    Next Story
    ×