என் மலர்
செய்திகள்

வாய்மேடு அருகே கவிழ்ந்த டேங்கர் லாரியை கிரேன்கள் மூலம் மீட்கும் பணி நடந்த போது எடுத்த படம்.
வாய்மேடு அருகே பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்தது
வாய்மேடு அருகே பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி சாலையோரத்தில் கவிழ்ந்தது.
வாய்மேடு:
கரூரில் இருந்து நாகை மாவட்டம் வேதாரண்யத்திற்கு பெட்ரோல் ஏற்றி கொண்டு ஒரு டேங்கர் லாரி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்த பழனியப்பன் மகன் திருமுருகன் (வயது30) என்பவர் ஓட்டி வந்தார். கிளீனராக சேலம் மாவட்டத்தை சேர்ந்த செல்வகுமார் மகன் ரமேஷ்குமார் (22) என்பவர் இருந்தார்.
இந்த நிலையில் வாய்மேட்டை அடுத்த மருதூர் மாடிக்கடை என்ற இடத்தில் சென்ற போது டிரைவரின் கட்டுபாட்டை இழந்து டேங்கர் லாரி, சாலையோரத்தில் கவிழ்ந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்து 2 கிரேன்கள் மூலம் டேங்கர் லாரியை மீட்டனர். இந்த விபத்தில் டிரைவரும், கிளீனரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
Next Story






