என் மலர்
நாகப்பட்டினம்
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் காரைக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
முதல் அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று செம்மையான ஆட்சியை, திறமையான நிர்வாகத்தை தர எங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
மத்திய அரசின் அதிகார பலம், பண பலம், பாரதப் பிரதமர், மத்திய உள்துறை மந்திரி ஆகியோர் இணைந்து தொடர்ந்து தொடுத்து வந்த உக்கிரமான போர் என எல்லாவற்றையும் எதிர்த்து தன்னந்தனியாக போராடி மிகப்பெரிய வெற்றியை பெற்ற மம்தா பானர்ஜிக்கும். அவரது கட்சியினருக்கும் எனது பாராட்டுகள்.
அசாம் காங்கிரசில் மூத்த தலைவர்கள் இல்லாவிட்டாலும் இரண்டாவது தலைமுறையினர் சிறப்பாகப் பணியாற்றி பெரும் சவால்களுக்கு இடையே நல்ல இடங்களைக் கைப்பற்றி உள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வின் சீடராக மாறி விட்டார். அதுவே அவரது கட்சியின் தோல்விக்கு காரணமாகி விட்டது.
விவசாயிகள் தங்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காமல் போராட்டத்தை முடிக்க மாட்டார்கள். பொல்லாத வேளாண் சட்டங்களை விலக்கிக்கொண்டு விவசாயிகள், எதிர்க்கட்சிகளை கலந்து ஆலோசித்து விவசாயிகளுக்கு தேவையான ஆதரவான புதிய சட்டம் கொண்டு வந்தால் அதனை அனைவரும் ஏற்றுக்கொள்வர் என தெரிவித்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 44) இவருடைய மகள் ஆயக்காரன்புலம் பெண்கள் கல்லூரியில் படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார்.
இந்தநிலையில் ஆயக்காரன்புலம் 3-ம் சேத்தி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் பக்கிரிசாமி மகன் கலியமூர்த்தி (21) டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கிறார். இவர் அந்தப் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி முத்துப்பேட்டை அருகே நாச்சிகுளம் பகுதிக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.
இதுகுறித்து இளம்பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சரக துணை கண்காணிப்பாளர் மகாதேவன் பரிந்துரையின்பேரில் இன்ஸ்பெக்டர் சுப்ரியா, சப்இன்ஸ்பெக்டர் பத்மசேகர் ஆகியோர் வழக்குபதிவு செய்து கலியமூர்த்தியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு ஒன்றியம் காடந்தேத்தியில் இருந்து வைக்கோல் ஏற்றி சென்ற லாரி மின்கம்பி உரசி தீ பிடித்தது. தஞ்சாவூரை சேர்ந்தவர் ரகுபதி (வயது 54) டிரைவர்.
இவர் நேற்று காலை தஞ்சாவூரிலிருந்து வந்து தலைஞாயிறு காடந்தேத்தி பகுதியில் உள்ள வயலில் வைக்கோல் கட்டுகளை லாரியில் ஏற்றி தஞ்சைக்கு புறப்பட்டு சென்றார்
அப்போது மின்கம்பி உரசி வைக்கோல் லாரி தீப்பிடித்தது இதை கவனித்த டிரைவர் ரகுபதி அருகில் வீடு இருந்ததால் தண்ணீர் உள்ள இடத்திற்கு லாரியை ஓட்டிச் சென்றார் அப்போது லாரியில் தீ மளமளவென்று பரவி லாரியும் எரிந்தது இந்த தீ விபத்தில் டிரைவர் ரகுபதியும் காயமடைந்தார்.
உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு மேலும் பரவாமல் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் காயமடைந்த ரகுபதி திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து தலைஞாயிறு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம் | அதிமுக |
கீழ்வேளூர் | மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் |
நாகப்பட்டினம் | அதிமுக |
நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் தோப்பு துறை, அகஸ்தியன்பள்ளி, மணியன்தீவு, ஆறு காட்டுத்துறை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதல் விட்டு விட்டு இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது.
கடந்த ஒரு மாதமாக வாட்டி வதைத்து வந்த வெயிலின் தாக்கம் இந்த மழையினால் குறைந்தது.இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதேவேளையில் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளியில் பெய்த மழையால் சுமார் 3,000 ஏக்கரில் நடைபெற்றுக் கொண்டிருந்த உப்பு உற்பத்தியின் ஒரு பகுதி பாதிக்கப்பட்டது. கடுமையான வெயிலின் காரணமாக தீவிரமாக நடைபெற்று வந்த உப்பு உற்பத்தி மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் உப்பள தொழிலாளர்கள் வேலை இல்லாமல் வீடு திரும்பினர். மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்க குறைந்தபட்சம் 5 நாட்களாகும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். மழையின் காரணமாக தங்கள் சேமித்து வைத்திருந்த உப்பை பிளாஸ்டிக் தார்பாய் கொண்டு மூடி வைத்துள்ளனர்.
நாகை 2 வங்கிகளில் கொரோனா தொற்று ஊழியர்களுக்கு இருந்ததால் மூடப்பட்டன. எச்.டி.எப்.டி மற்றும் ஸ்டேட் பாங்க் ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதனால் நேற்று 2 வங்கிகளும் மூடப்பட்டது.
நாகை மாவட்டத்தில் கொரோனா தொற்று 12,871 ஆக உயர்ந்துள்ளது. நாகை கொள்ளை தடுப்பு நோய் டாக்டர் லியாக்கத் அலி கூறினார். ஸ்டேட் பாங்கில் கடந்த வாரம் ஒரு ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் ஏற்கனவே ஒருமுறை மூடப்பட்ட நிலையில் மீண்டும் 2-வது முறையாக மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாகப்பட்டினம்:
நாகை அருகே கருவேலங்கடை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டியன்(39). பால் வியாபாரி. இவர் நாகையில் பாபாக்கோவில் பகுதியில் உள்ள வீடுகளில் பால் வியாபாரம் செய்து வருகிறார்.
அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியை சுந்தரபாண்டியன் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாத்தாவிடம் தெரிவித்தார்.
இது குறித்து அவர் நாகை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுந்தரபாண்டியனை கைது செய்தனர்.
சீர்காழி அருகே வைத்தீஸ் வரன்கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோவிலில் தனி சன்னதியில் செல்வமுத்துக் குமாரசுவாமி, நவகிரகங் களில் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், தன்வந்திரி சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர்.
பிரசித்திப்பெற்ற இக்கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு நாளை 29-ந்தேதி குடமுழுக்குவிழா சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி பக்தர்கள் பங்கேற்பின்றி, அரசின் நெறிமுறைகளை பின்பற்றி நடைபெறவுள்ளது.
விழாவையொட்டி 147 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 8 கால யாகசாலை பூஜைகள் 25-ந்தேதி தொடங்கியது. நேற்று காலை மங்களவாரம், விஷேசசாந்தி, பாவனா பிஷேகம் செய்விக்கப்பட்டு நான்காம் கால யாகசாலை பூஜைகள், பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மாலை விசேஷசாந்தி 5-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. பரிவார மூர்த்திகளுக்கு பிம்பசுத்தி பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. இன்று காலை 6-ம் கால யாக பூஜைகள் தொடங்கியது. மாலை 7-ம் கால யாக பூஜைகள் நடக்கிறது. நாளை காலை 8-ம் கால யாக பூஜைகளுக்கு பின் கடங்கள் புறப்பாடு, தொடர்ந்து ராஜகோபுரங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்ற குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. யாக சாலை பூஜைகள், குடமுழுக்கு விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
யாக சாலை பூஜைகளில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணதேசிக பரமாச்சாரியசுவாமிகள், திருமுதுகுன்றம் குமாரத்தேவர் ஆதீனம் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது திருநெல்வேலி கட்டளை மடம் திருஞான சம்பந்தத் தம்பிரான் சுவாமிகள், வைத்தீஸ்வரன்கோவில் கட்டளை திருநாவுக்கரசுத் தம்பிரான் சுவாமிகள், திருப்பனந்தாள் சபாபதி தம்பிரான் சுவாமிகள், தருமபுரம் மாணிக்கவாசகத் தம்பிரான் சுவாமிகள் பங்கேற்றனர்.
இந்த ஆலயம் கீழை நாடுகளின் ‘லூர்து நகர்' என அழைக்கப்படுகிறது. இந்த பேராலயத்திற்கு எதிரே வங்க கடல் அமைந்திருப்பது மேலும் சிறப்பு.
இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆலயங்களில் நடைபெறக்கூடிய திருவிழாக்கள், மத கூட்டங்கள் மற்றும் கடற்கரையில் கூட்டம் கூட தமிழக அரசு தடை விதித்துள்ளது.
தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி ஆலயங்களில் நேற்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
அதன்படி வேளாங்கண்ணி பேராலயத்திற்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.. இதை தொடர்ந்து பேராலயத்தின் முன் கதவு சாத்தப்பட்டு பக்தர்கள் இன்றி திருப்பலி மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றது. இதனால் ஏமாற்றம் அடைந்த பக்தர்கள் பேராலய. வாசலில் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.
கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் நகர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக வெயில் சுட்டெரித்து வந்தது. இரவு வரை வெப்பத்தின் தாக்கம் இருந்ததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் திடீரென குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. சிறிது நேரத்தில் சூறை காற்றாக மாறி மழை பெய்ய தொடங்கியது.. நேரம் செல்ல செல்ல இடியுடன் கனமழையாக மாறியது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.
சுமார் 2 மணி நேரம் நீடித்த மழையால் இதமான சூழல் நிலவியது. 40.2 மி.மீ. மழை அளவு பதிவானது.
இந்த மழை வேதாரண்யம் நகரில் மட்டுமே கருணை காட்டியது. புறநகர் பகுதிகளில் மழை பெய்யவில்லை என்பது குறிப்பிடதக்கது.






