என் மலர்
நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பாலகுறிச்சியில் அரசு மதுபான கடை(டாஸ்மாக்) உள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கடந்த 10-ந்தேதியில் இருந்து டாஸ்மாக் கடைகள் அனைத்தும் பூட்டப்பட்டு உள்ளன. அதன்படி பாலக்குறிச்சியில் உள்ள டாஸ்மாக் கடையும் பூட்டப்பட்டு இருந்தது.
கீழையூர் மேல ஈசனூர் பகுதியை சேர்ந்த மைக்கேல்ராஜ்(59), முப்பத்தி கோட்டகம் மாதா கோவில் தெரு பகுதியை சேர்ந்த அந்தோணி (45) ஆகிய இருவரும் இரவு காவல் பணியாளராக இங்கு பணியாற்றி வருகின்றனர். இவர்கள் வழக்கம்போல் டாஸ்மாக் கடையின் அருகில் உள்ள சிறிய கீற்று கொட்டகையில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தனர்.
நள்ளிரவு சுமார் 1 மணியளவில் அந்த மதுபான கடைக்கு 5 பேருக்கு மேல் வந்துள்ளனர். அவர்களில் சிலர் மதுக்கடையில் காவல் பணியில் ஈடுபட்டு இருந்த இருவரின் வாய், கைகள் மற்றும் கால்களை கட்டி விட்டு கத்தி மற்றும் அரிவாளை காட்டி மிரட்டி உள்ளனர்.
மேலும் டாஸ்மாக் கடையின் ஷட்டரில் பூட்டி இருந்த பூட்டை உடைத்து கடையின் உள்ளே சென்று அங்கு இருந்த ரூ.73 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை கொள்ளையடித்து விட்டு தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்சென்று விட்டனர். மர்ம நபர்கள் அங்கிருந்து சென்ற பின்னர் இரவு காவலர்கள் இருவரும் தங்களுக்குள்ளாகவே கட்டப்பட்டு இருந்த கட்டை அவிழ்த்து விட்டு பின்னர் நடந்த சம்பவத்தை டாஸ்மாக் கடை மேலாளருக்கு தெரிவித்தனர். தகவல் அறிந்த வேளாங்கண்ணி போலீசார் கொள்ளை நடந்த மதுக்கடைக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை செய்தனர். மேலும் 3 தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த 10-ந்தேதி முதல் வருகிற 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தவிர மற்ற கடைகளை திறக்க அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகள் அளித்து நேற்று முதல் நாட்டு மருந்து கடைகள், பழக்கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி நாகை பெரிய கடை வீதியில் 10-க்கும் மேற்பட்ட நாட்டு மருந்து கடைகள் திறக்கப்பட்டன. அதேபோல் பழக்கடைகளும் திறக்கப்பட்டன.
இந்த கடைகளுக்கு வந்த வாடிக்கையாளர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடன் பொருட்களை வாங்கி சென்றனர். நாட்டு மருந்து கடைகள் திறக்க அரசு அனுமதி அளித்ததால் கடை உரிமையாளர்கள், நாட்டு மருந்து பயன்படுத்துவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பழக்கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்ததால் பழ வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
வேதாரண்யம் தாலுகாவில் கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வாணவன்மகாதேவி உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் உள்ளன. நாள்தோறும் இப்பகுதியில் இருந்து 5 முதல் 10 டன் வரை மீன்கள் பிடிக்கப்பட்டு உள்ளூர் தேவைகளுக்கும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இதனால் ஆறுகாட்டுத்துறையில் 60 விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வேதாரண்யம் பகுதியில் பைபர் படகில் நாள்தோறும் மீனவர்கள் மீன்பிடித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி முதல் வருகிற 24-ந் தேதி வரை கொரோனா பரவலை தடுக்க அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இதனால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் தங்களது பைபர் படகுகளை கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
கடல் மீன்கள் பிடிக்க முடியாத சூழ்நிலையில் தற்போது வேதாரண்யம் தாலுகாவில் அவரிக்காடு, கரியாப்பட்டினம், தென்னம்புலம், கள்ளிமேடு, கோடியக்காடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள குளங்கள், குட்டைகள், நீரோடைகள் மற்றும் வளர்ப்பு மீன்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. வேதாரண்யம் பகுதியில் உள்ள உப்பனாறு, அடப்பாறு, மாணங்கொண்டான் ஆறு உள்ளிட்ட ஆற்று பகுதிகளில் சிறு,சிறு வலைகளை வைத்து மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். இவர்களது வலைகளில் மடவாய், சிலேபி, கெளுத்தி, குறவை மீன், விரால், கெண்டை உள்ளிட்ட பல்வேறு மீன்கள் கிடைக்கின்றன. ஆற்று பகுதிகளில் அதிகாலையில் கையால் தடவி ஏராளமானோர் இறால் பிடிக்கின்றனர்.
கடல் மீன்கள் கிடைக்காத நிலையில் மீன்பிரியர்கள் இப்பகுதியில் கிடைக்கும் நாட்டு மீன்களை விரும்பி வாங்கி செல்கின்றனர். ஆற்றில் பிடிக்கப்படும் இறால் கிலோ ரூ.300, மடவா மீன் ரூ.200, சிலேபி ரூ.100, உளூவை ரூ.100, உயிருடன் உள்ள விரால் ரூ.400, இறந்த விரால் ரூ.200, கெண்டை மீன் ரூ.150-க்கும் விலை போகிறது. காலையில் பிடிக்கப்படும் மீன்கள் உடனுக்குடன் விற்பனையாவதால் உள்நாட்டு மீனவர்கள் மற்றும் சில்லரை மீன் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உயிருடன் மீன்கள் கிடைப்பதால் மீன்பிரியர்களும் மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் அடிப்படையில் அப்பகுதிக்கு போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அப்போது காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட சாராயத்தை கடந்தி வந்து வீரன் கோவில் மற்றும் அக்கரகடம்பனூர் அருகே விற்பது தெரியவந்தது.
இதையடுத்து சாராயம் விற்றதாக அதே பகுதியை சேர்ந்த செல்வவிநாயகம் (வயது 42), ராஜேஷ்(29) ஆகிய இருவரை போலீசார் விரட்டிப் பிடித்தனர். இவர்களிடமிருந்து 220 லிட்டர் சாராயம் கைப்பற்றினர். மேலும் 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
மதுவிலக்கு தொடர்பான வழக்குகள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் அய்யர் தனபால் (வயது 58) குற்றம் புரிந்தான்இருப்பு. மொட்டை முருகன் என்கிற முருகையன் (47) எரும்புகன்னி, ராதாமங்கலம். தேவேந்திரன் (56), சிவன் கோவில் தெரு கோவில் கடம்பனூர். ஆகியோர் மீது பல்வேறு சாராய வழக்குகள் உள்ளது
இதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா. பரிந்துரையின் படி மாவட்ட கலெக்டர் பிரவீன் பி நாயர். கைது செய்ய உத்தரவிட்டார் அதன்படி தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 3 பேரும் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
| நாகப்பட்டினம் | ||||||
| வ.எண். | வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| 1 | ஆளூர் ஷாநவாஸ் | விசிக | 66281 | |||
| 2 | தங்க.கதிரவன் | அதிமுக | 59043 | |||
| 3 | மஞ்சுளா சந்திரமோகன் | அமமுக | 3503 | |||
| 4 | சையது அனாஸ் | மநீம | 2540 | |||
| 5 | அகஸ்டின் அற்புதராஜ் | நாம் தமிழர் | 9976 | |||
| கீழ்வேளூர் (தனி) | ||||||
| வ.எண். | வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| 1 | நாகை மாலி | சிபிஎம் | 67988 | |||
| 2 | வடிவேல் ராவணன் | பாமக | 51003 | |||
| 3 | நீதிமோகன் | அமமுக | 2503 | |||
| 4 | டாக்டர் ஜி.சித்து | மநீம | 2906 | |||
| 5 | பொன் இளவழகி | நாம் தமிழர் | 15173 | |||
| வேதாரண்யம் | ||||||
| வ.எண். | வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| 1 | ஓ.எஸ்.மணியன் | அதிமுக | 78719 | |||
| 2 | எஸ்.கே.வேதரத்தினம் | திமுக | 66390 | |||
| 3 | பி.எஸ்.ஆறுமுகம் | அமமுக | 1284 | |||
| 4 | முகமது அலி | மநீம | 437 | |||
| 5 | ராசேந்திரன் | நாம் தமிழர் | 9106 | |||






