என் மலர்
செய்திகள்

கோப்புப்படம்
வேதாரண்யத்தில் 3 ஊழியர்களுக்கு கொரோனா - தனியார் வங்கி மூடல்
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
வேதாரண்யம்:
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முககவசம் அணியாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் வடக்கு வீதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வரும் ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த வங்கி மூடப்பட்டது.
Next Story






