என் மலர்
நாகப்பட்டினம்
மழையால் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டதால் வேதாரண்யத்தில் இருந்து தூத்துக்குடிக்கு 40 ஆண்டுகளுக்கு பிறகு லாரிகளில் உப்பு அனுப்பி வைக்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் 3,000 ஏக்கரில் சிறு, குறு உப்பு உற்பத்தியாளர்கள் உப்பு உற்பத்தி செய்து வருகின்றனர். ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி நடைபெற்று தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது கொரோனா ெதாற்று காரணமாக வருகிற 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உப்பள பகுதிகளில் குறைந்த ஆட்களுடன் சமூக இடைவெளிவிட்டு உப்பு வாரும் பணி நடைபெறுகிறது. மேலும் தினமும் 10 முதல் 20 லாரிகளில் உப்பு ஏற்றுமதியும் நடைபெறுகிறது. உப்பு உற்பத்தியில் முதலிடத்தை பிடித்துள்ள தூத்துக்குடிக்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு வேதாரண்யத்தில் இருந்து உப்பு அனுப்பி வைக்கப்பட்டது.
தற்போது தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி மழையால் நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று வேதாரண்யத்தில் இருந்து தூத்துக்குடிக்கு லாரிகள் மூலம் உப்பு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த உப்பிற்கு நல்ல விலை கிடைத்து வருகிறது என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்

நாகை மாவட்டத்தில் ‘இ-பதிவு’ இல்லாமல் பயணம் செய்த 39 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் 19 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகப்பட்டினம்:
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க வருகிற 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 10 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு நடவடிக்கை எடுத்தும் கொரோனா தாக்கம் குறைந்தபாடில்லை. தமிழகத்தில் நேற்று முதல் ‘இ-பதிவு’ முறை அமலுக்கு வந்தது.
முக்கிய உறவினர்கள் இறப்பு, மருத்துவ சிகிச்சை போன்ற மிக அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் பயணம் மேற்கொள்ள ‘இ-பதிவு’ அனுமதி பெற வேண்டும். இதன் மூலம் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் இருந்து யார்?, யார்? வருகிறார்கள் என்பதை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் நாகை மாவட்டத்தின் எல்லை பகுதிகளான நாகூர், கானூர், வால்மங்கலம், சேசமூலை, மானம்பேட்டை, அருந்தவன்புலம், செங்காதலை உள்ளிட்ட மாவட்டத்தின் எல்லை பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வெளி மாவட்டங்களில் இருந்து வந்த அனைத்து வாகனங்களையும் சோதனை செய்தனர். ‘இ-பதிவு’ அனுமதி இருந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
இதுதவிர நகர் பகுதிக்குள் இரும்பு தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் வாகனங்களை நிறுத்தி விசாரணை நடத்தினர். இதில் அத்தியாவசிய தேவைக்கு செல்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். தேவையின்றி சுற்றியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் ‘இ-பதிவு’ இல்லாமல் பயணம் செய்த 39 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 19 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
வாய்மேட்டை அடுத்த தாணிக்கோட்டகம் மற்றும் துளசியாப்பட்டினம் ஆகிய இரண்டு இடங்களில் இரும்பு தடுப்பு அமைத்து வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் ‘இ-பதிவு’ அனுமதி உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதித்தனர்.
திட்டச்சேரி, திருமருகல், அண்ணாமண்டபம், கங்களாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன், திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இரணியன் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசின் முழு ஊரடங்கு உத்தரவை மீறியும், முக கவசம் அணியாமலும் மோட்டார் சைக்கிள்களில் சென்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இலுப்பூர், பட்டமங்கலம், வடக்காலத்தூர் பகுதிகளை சேர்ந்த 45 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே இலுப்பூர் சத்திரத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமிற்கு நாகை ஊரக வளர்ச்சி துறை உதவி திட்ட அலுவலர் குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனா, தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் இலுப்பூர், பட்டமங்கலம், வடக்காலத்தூர் பகுதிகளை சேர்ந்த 45 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் தேவூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பிரபு, செவிலியர் மல்லிகா. மருந்தாளுனர் காஞ்சனா, சுகாதாரத்துறை பணியாளர்கள், துணை. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபால் வேதாரண்யம் நகராட்சி பகுதியில் வணிக நிறுவனங்கள் வைத்துள்ளவர்களுக்கு நகராட்சியும், வர்த்தக சங்கமும் இணைந்து கொரோனா தடுப்பூசி முகாமை நடத்தியது. வர்த்தக சங்க கட்டிடத்தில் நடைபெற்ற முகாமை வேதாரண்யம் வர்த்தக சங்க தலைவர் தென்னரசு தொடங்கி வைத்தார். முகாமில் நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, ஆய்வாளர் வெங்கடாசலம், டாக்டர்கள் ராஜசேகர், சுந்தர்ராஜன் சுகாதார ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது
வடக்குபட்டக்கால் தெரு, வெள்ளத்திடல் உள்ளிட்ட 15 வார்டுகளிலும் குப்பைகள் அள்ளப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.
திட்டச்சேரி:
தஞ்சை மண்டல உதவி இயக்குனர் மாஹிம் அபுபக்கர் அறிவுறுத்தலின்படியும், திட்டச்சேரி பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன் வழிகாட்டுதலின் படியும் திட்டச்சேரி பேரூராட்சிக்குட்பட்ட தைக்கால் தெரு, வாணியத்தெரு, தமிழர் தெரு, மேலத்தெரு, தெற்கு தெரு வடக்குதெரு, வடக்குபட்டக்கால் தெரு, வெள்ளத்திடல் உள்ளிட்ட 15 வார்டுகளிலும் குப்பைகள் அள்ளப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இதில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் ப.கோவிந்தராஜ், வரித்தண்டலர் ஜெகவீரப்பாண்டியன், அலுவலக உதவியாளர் மாதவன், அமானுல்லா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
நாகை மாவட்டத்தில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் போலீசார் சாலைகளில் இரும்பு தடுப்புகளை அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் காலை 10 மணிவரை அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து 10 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் மூடப்பட்டன.மேலும் கட்டுப்பாடுகளை தீவிர படுத்துவதற்காக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது போலீஸ் துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி நாகை மாவட்டத்தில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் போலீசார் சாலைகளில் இரும்பு தடுப்புகளை அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் முழு ஊரடங்கின் போது போலீசார் சாலைகளில் இரும்பு தடுப்புகளை அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் செல்வோரை அனுமதித்தனர். ஊரடங்கு உத்தரவை மீறியதாக 33 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இதுவரை 24 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவல் அதிகரிப்பால் கடும் மருத்துவ நெருக்கடியையும், நிதி நெருக்கடியையும் அரசு சந்தித்து வருகிறது.
நாகப்பட்டினம்:
நாகையில், திருமணம் முடிந்தவுடன் புதுமண தம்பதி மாவட்ட கலெக்டரை சந்தித்து முதல்-அமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.50 ஆயிரம் வழங்கினர்.
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவல் அதிகரிப்பால் கடும் மருத்துவ நெருக்கடியையும், நிதி நெருக்கடியையும் அரசு சந்தித்து வருகிறது. இதற்கு பொதுமக்கள், வாய்ப்புள்ளவர்கள் தாமாக முன்வந்து முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற நிதியளிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதை தொடர்ந்து தொழில் அதிபர்கள், நடிகர்கள், அரசியல் கட்சியினர் உள்பட பலர் முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் நாகை புத்தூர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மகன் ஷெரின் ராஜூக்கும், திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியை சேர்ந்த விக்டர் ராஜ் என்பவரது மகள் சூர்யாவுக்கும் நாகையில் நேற்று திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்தவுடன் புதுமண தம்பதி தங்களது பெற்றோருடன் நாகை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு கலெக்டர் பிரவீன் நாயரை சந்தித்து முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.50 ஆயிரத்தை வழங்கினர். அதனை பெற்றுக்கொண்ட கலெக்டர், புதுமண தம்பதியை பாராட்டி திருமண வாழ்த்து தெரிவித்தார்.

கீழ்வேளூர் காவல் சரகம் சிக்கல் குற்றம்புறிந்தானிருப்பு பகுதியிலுள்ள ஐயர் தனபால் என்பவரது வயலில் உள்ள வைக்கோல் போரில் சாராயம் 1400 லிட்டர் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் மது குற்றங்களை தடுக்கும் பொருட்டு எஸ்.பி. ஓம் பிரகாஷ் மீனா. உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் கீழ்வேளூர் காவல் சரகம் சிக்கல் குற்றம்புறிந்தானிருப்பு பகுதியிலுள்ள ஐயர் தனபால் என்பவரது வயலில் உள்ள வைக்கோல் போரில் சாராயம் 1400 லிட்டர் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக சஞ்சய் செங்குட்டுவன், மற்றும் அவரது நண்பர்களான குமரேசன், ஐயர் தனபாலன், ரகு ஆகிய 5 பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

வேளாங்கண்ணி அருகே டாஸ்மாக்கில் கொள்ளை அடித்த 8 வாலிபர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
வேளாங்கண்ணி காவல் சரகத்திற்கு உட்பட்ட பாலக்குறிச்சி அரசு மதுபான கடையில் ரூ. 75 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
பின்னர் எஸ்.பி. ஓம் பிரகாஷ் மீனா பார்வையிட்டார். 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டார்.
இந்நிலையில் டாஸ்மாக்கில் கொள்ளையடித்த ஹரிஹரன் (வயது 27) திருக்கண்ணங்குடி, குரு பாலன் (20), தனராஜ்(20) ரதீஷ் குமார் (26) கலையரசன் (20), சதீஷ் (27), தமிழ்மாறன் (21), புல்புல் (எ) பிரவீன் (19) ஆகிய 8 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

வேதாரண்யம் அருகே மதுபாட்டில் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் சரக காவல் துணை கண்காணிப்பாளர் மகாதேவன் அறிவுரையின்படி இன்ஸ்பெக்டர் சுப்பிரியா, சப்- இன்ஸ்பெக்டர் பத்மசேகர் மற்றும் போலீசார் செம்போடையில் சோதனையில் ஈடுபட்டபோது ஒரு கடையில் திருட்டுதனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த கடையில் இருந்து 175 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.32 ஆயிரத்து 780 ரொக்கம் ஆகியவற்றையும், பதுக்கி வைத்திருந்த எரிசாராயம் 50 லிட்டரையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அதே பகுதியை அன்பரசன் (வயது 42), சேகர்(42) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
நாகையை அடுத்த நாகூர் ஆண்டவர் அரசினர் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது.
நாகூர்:
நாகையை அடுத்த நாகூர் ஆண்டவர் அரசினர் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் தொடங்கி வைத்தார். இதில் 10 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
வாய்மேட்டை அடுத்த தென்னடார் ஊராட்சி சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வாய்மேடு:
வாய்மேட்டை அடுத்த தென்னடார் ஊராட்சி சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தேவி செந்தில், கூட்டுறவு சங்க தலைவர் சோமசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் பொது மக்களுக்கு வழங்கினர். இதேபோல தகட்டூர் ஊராட்சி சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தகட்டூர் கடைத்தெரு, சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதியில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி பாலகுரு, , ஊராட்சி செயலாளர் கலையரசி உள்பட பலர் கலந்து கொண்டனர். தலைஞாயிறு அடுத்த வாட்டாகுடி ஊராட்சியில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
ரம்ஜான் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலேயே தொழுகை நடத்தினர். இதனால் நாகூர் தர்கா நேற்று வெறிச்சோடியது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வர சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
நாகூர்
இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் ரம்ஜான் பண்டிகையை விமரிசையாக கொண்டாடி மகிழ்வார்கள். கடந்த ஆண்டு(2020) கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரம்ஜான் பண்டிகை எளிமையாக கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருவதால் கடந்த 10-ந் தேதி முதல் வருகிற 24-ந் தேதி வரை தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவால் பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்களில் கூட்டமாக கூடி தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ரம்ஜான் பண்டிகையன்று நாகை மாவட்டம் நாகூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்காவில் ஏராளமான இஸ்லாமியர்கள் ஒன்றுகூடி தொழுகை நடத்துவார்கள்

கொரோனா ஊரடங்கு காரணமாக ரம்ஜான் பண்டிகையையொட்டி நேற்று நாகூர் பகுதியை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலேயே தொழுகை நடத்தினர். இதனால் நாகூர் தர்கா பூட்டப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது.
நாகூர் தர்காவின் கால்மாட்டு வாசலில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வர சிலர் சமூக இடைவெளியுடன், முககவசம் அணிந்து சிறப்பு பிரார்த்தனை செய்தனர். ரம்ஜான் பண்டிகையில் நாகூர் தர்காவில் நடைபெறும் கூட்டுப் பிரார்த்தனை, விளக்கவுரை, துவா, பாத்திஹா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை.
இதேபோல் நாகை மாவட்டத்தில் அனைத்து பள்ளிவாசல்கள், தர்காக்கள் மூடப்பட்டதால் இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலேயே தொழுகை நடத்தினர்.