search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யம் உப்பளத்தில் உப்பு வாரும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளதை காணலாம்
    X
    வேதாரண்யம் உப்பளத்தில் உப்பு வாரும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளதை காணலாம்

    வேதாரண்யத்தில் இருந்து தூத்துக்குடிக்கு உப்பு- 40 ஆண்டுகளுக்கு பிறகு லாரிகளில் அனுப்பி வைப்பு

    மழையால் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டதால் வேதாரண்யத்தில் இருந்து தூத்துக்குடிக்கு 40 ஆண்டுகளுக்கு பிறகு லாரிகளில் உப்பு அனுப்பி வைக்கப்பட்டது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் 3,000 ஏக்கரில் சிறு, குறு உப்பு உற்பத்தியாளர்கள் உப்பு உற்பத்தி செய்து வருகின்றனர். ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி நடைபெற்று தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது கொரோனா ெதாற்று காரணமாக வருகிற 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உப்பள பகுதிகளில் குறைந்த ஆட்களுடன் சமூக இடைவெளிவிட்டு உப்பு வாரும் பணி நடைபெறுகிறது. மேலும் தினமும் 10 முதல் 20 லாரிகளில் உப்பு ஏற்றுமதியும் நடைபெறுகிறது. உப்பு உற்பத்தியில் முதலிடத்தை பிடித்துள்ள தூத்துக்குடிக்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு வேதாரண்யத்தில் இருந்து உப்பு அனுப்பி வைக்கப்பட்டது.

    தற்போது தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி மழையால் நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று வேதாரண்யத்தில் இருந்து தூத்துக்குடிக்கு லாரிகள் மூலம் உப்பு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த உப்பிற்கு நல்ல விலை கிடைத்து வருகிறது என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்
    Next Story
    ×