என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வேளாங்கண்ணி அருகே டாஸ்மாக்கில் கொள்ளை அடித்த 8 வாலிபர்கள் கைது

    வேளாங்கண்ணி அருகே டாஸ்மாக்கில் கொள்ளை அடித்த 8 வாலிபர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    வேளாங்கண்ணி காவல் சரகத்திற்கு உட்பட்ட பாலக்குறிச்சி அரசு மதுபான கடையில் ரூ. 75 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    பின்னர் எஸ்.பி. ஓம் பிரகாஷ் மீனா பார்வையிட்டார். 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டார்.

    இந்நிலையில் டாஸ்மாக்கில் கொள்ளையடித்த ஹரிஹரன் (வயது 27) திருக்கண்ணங்குடி, குரு பாலன் (20), தனராஜ்(20) ரதீஷ் குமார் (26) கலையரசன் (20), சதீஷ் (27), தமிழ்மாறன் (21), புல்புல் (எ) பிரவீன் (19) ஆகிய 8 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×