என் மலர்
நாகப்பட்டினம்
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை புயல் வேகத்தில் பரவிவருகிறது. இதை கட்டுப்படுத்த கடந்த 10-ந்தேதி முதல் வருகிற 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பால் கடும் மருத்துவ நெருக்கடியையும், நிதி நெருக்கடியையும் அரசு சந்தித்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் தாமாக முன்வந்து முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு நிதியளிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.இதையடுத்து தொழில் அதிபர்கள், நடிகர்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினர் நிதி அளித்து வருகின்றனர்.
நாகை மாவட்டம் திருமருகல் வடக்கு ஒன்றியம் அருள்மொழி தேவன் கிராமத்தை சேர்ந்த பாண்டியன், சீதாதேவி ஆகிேயாரின் மகள் தனிஷ்கா(வயது10). இவர் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி தனிஷ்கா, நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் வந்தார். பின்னர் அவர், கலெக்டர் பிரவீன் நாயரை சந்தித்து குல தெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் செல்வதற்கு உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூ.7 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கினார். இதனை பெற்றுக்கொண்ட கலெக்டர் சிறுமியை, பாராட்டி நன்றி தெரிவித்தார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா நெய்விளக்கு, குரவப்புலம், கரியாப்பட்டினம், அகஸ்தியம்பள்ளி, கோடியக்கரை, கோடியக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.
வேதாரண்யம் தாலுகா அவரிக்காட்டில் வைரவன் பேட்டை கிராமத்தில் உள்ள ஒரு செங்கல் சூளையில் தலைஞாயிறு வேளாணி மூந்தல் பகுதியை சேர்ந்த காளிதாஸ்(வயது 55) என்பவர் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தபோது அவர் தங்கியிருந்த கொட்டகையின் வாசலில் நின்று கொண்டிருந்த தொழிலாளி காளிதாசை மின்னல் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது அருகில் இருந்த அவரது பேரன் விஸ்வா(4) மின்னல் தாக்கியதில் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.
இதுகுறித்து தகவல் அறிந்த வேட்டைக்காரனிருப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பக்கிரிசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காளிதாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திட்டச்சேரி போலீஸ் சரகம் திருமருகல் மெயின் ரோட்டில் போலீசார் சார்பில் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருவதால் பொதுமக்கள் அவசியமின்றி யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்.
அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் வரும்போது முக கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும்.கொரோனாவை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு தரவேண்டும் என போலீசார் கலை நிகழ்ச்சி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் கலைக்குழுவினர், போலீசார் கலந்துகொண்டனர்.
இதேபோல நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தினர். நாகூர் கொத்தவால் சாவடி இருந்து தொடங்கிய கொரோனா விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி பெரிய கடை தெரு, அலங்கார வாசல், நெல்லு கடைதெரு, மெயின் ரோடு மற்றும் முக்கிய வீதிகளுக்கு சென்றது. பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி போலீஸ் சரகம் வடவூர் தென்பாதி பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 35). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பக்கிரிசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் தனது மூத்த மகன் திருமணத்திற்காக குமாரிடம் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கியதாக தெரிகிறது. இதில் ரூ.7,300-ஐ திருப்பி கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. மீதி தொகையை குமார் கடந்த 13-ந் தேதி பக்கிரிசாமி வீட்டிற்கு சென்று கேட்டுள்ளார். அப்போது வீட்டில் இருந்தவர்கள் தற்போது பணம் இல்லை என்றும், பிறகு தருவதாகவும் தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று குமார் கடைத்தெருவிற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். பழைய பிள்ளையார் கோவில் வளைவில் திரும்பியபோது பக்கிரிசாமியின் இளைய மகன் சுந்தரபாண்டியன்(24) என்பவர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து குமாரிடம், எப்படி எங்களது வீடு தேடி பணம் கேட்க வந்தாய்? என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த வாக்குவாதத்தின்போது சுந்தரபாண்டியன் அருகில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து குமாரின் தலையில் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் குமார் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தர பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 55) தொழிலாளி.
இவர் நேற்று இரவு தனது பேரன்களான விஸ்வா, மணிகண்டன் ஆகியோருடன் வேதாரண்யம் அடுத்த அவரி காட்டில் உள்ள ஒரு செங்கல் சூளையில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது இடி-மின்னலுடன் கனமழை பெய்ய தொடங்கியது. இதனால் காளிதாஸ் அங்குள்ள கொட்டகைக்கு சென்றார். அப்போது வாசலில் நின்று செங்கல் ஏதும் சேதமாகிறதா? என பார்த்தார். அந்த நேரத்தில் திடீரென காளிதாசை மின்னல் தாக்கியது. இதில் உடல் கருகிய நிலையில் சம்பவ இடத்திலேயே காளிதாஸ் இறந்தார். மேலும் அவரை காப்பாற்ற முயன்ற விஸ்வாவுக்கு காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த வேட்டைக்காரனிருப்பு சப்-இன்ஸ்பெக்டர் பக்கிரிசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காளிதாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த விஸ்வா சிகிச்சை பெற்று வருகிறார்.
இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






