என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
    X
    கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

    நாகூர், திருமருகலில் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

    நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தினர்.
    திட்டச்சேரி:

    திட்டச்சேரி போலீஸ் சரகம் திருமருகல் மெயின் ரோட்டில் போலீசார் சார்பில் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருவதால் பொதுமக்கள் அவசியமின்றி யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்.

    அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் வரும்போது முக கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும்.கொரோனாவை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு தரவேண்டும் என போலீசார் கலை நிகழ்ச்சி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் கலைக்குழுவினர், போலீசார் கலந்துகொண்டனர்.

    இதேபோல நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தினர். நாகூர் கொத்தவால் சாவடி இருந்து தொடங்கிய கொரோனா விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி பெரிய கடை தெரு, அலங்கார வாசல், நெல்லு கடைதெரு, மெயின் ரோடு மற்றும் முக்கிய வீதிகளுக்கு சென்றது. பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    Next Story
    ×