என் மலர்
நாகப்பட்டினம்
கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் முதல் நாளான இன்று சாம்பல் புதன் வழிபாடு நடந்தது. இதையொட்டி நாகை மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்புத் திருப்பலி காலையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஏராளமான கிறிஸ்தவர்களுக்கு அருட் தந்தைகள் நெற்றியில் விபூதி பூசினர். இந்த சிறப்பு திருப்பலியில் ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வந்து நாட்டு மக்கள் அமைதியாக வாழ சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
நாகப்பட்டினம்:
கர்நாடக மாநிலம் பெங்களூர் சிவாஜிநகரை சேர்ந்தவர் சபீர்அகமது (வயது 45). இவர் தனது மகன் முகமதுஅமானை (15) அழைத்து கொண்டு நாகை மாவட்டம் நாகூருக்கு சுற்றுலா வந்தார்.
இதற்காக அவர் நாகூரில் தங்கியிருந்து தர்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு மகனை அழைத்து கொண்டு சென்றார். இன்று அவர் நாகூர் கடலில் முகமதுஅமானுடன் குளித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென எழுந்த அலையில் தண்ணீரில் இருவரும் இழுத்து செல்லப்பட்டனர்.
தத்தளித்த நிலையில் காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்... என்று கூச்சலிட்டனர். ஆனால் சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி சபீர்அகமது, முகமது அமான் ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த நாகூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலா வந்த இடத்தில் கடலில் மூழ்கி தந்தை-மகன் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.






