என் மலர்
உள்ளூர் செய்திகள்

மணிவேல்
ஆட்டோ திருடிய வாலிபர் கைது
வேதாரண்யத்தில் ஆட்டோ திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை பகுதி நாகை சாலையில் வசிப்பர் சபீர்அகமது (30). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார். இரவு தனது ஆட்டோவை வீட்டின் பின்புறம் நிறுத்தி வைத்திருந்தார்.
அதிகாலை பார்க்கும் போது ஆட்டோவை காணவில்லை.
இது குறித்து அவர் வேதாரண்யம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சப்&இன்ஸ்பெக்டர் தேவசேனாதிபதி உட்பட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். நாகை செம்போடை ரோட்டில் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணி மேற்கொண்டபோது ஆட்டோ ஓட்டி வந்த ஒருவர் போலீசாரை கண்டதும் தப்ப முயன்றார்.
அவரை போலீசார் பிடித்து விசாரித்ததில் அவர் மணிவேல் (28) என்பதும், திருக்குவளை வட்டம், பாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.
இவர் ஓட்டி வந்த ஆட்டோ தோப்புத்துறை பகுதியில் திருடப்பட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து மணிவேலை கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
கடந்த ஆண்டு இதே மணிவேல் வேறொரு ஆட்டோவை வேதாரண்யத்தில் திருடி திருச்சி&தூவாக்குடி ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நிறுத்தி விட்டு மறைவாக நின்றபோது ஆட்டோ சங்கத்தினர் சந்தேகத்தில் போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் போலீசார்கள் சென்று மீட்டு வந்தனர்.
Next Story






