search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்லியம்மன் கோவிலில் சண்டி ஹோமம் நடைபெற்றது.
    X
    செல்லியம்மன் கோவிலில் சண்டி ஹோமம் நடைபெற்றது.

    செல்லியம்மன் கோவிலில் சண்டி ஹோமம்

    தெற்கு பொய்கைநல்லூர் செல்லியம்மன் கோவிலில் விவசாயம் செழிக்க வேண்டி காய்கறிகளால் சண்டிஹோமம் நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்குபொய்கைநல்லூரில் நூற்றாண்டு பழமைவாய்ந்த செல்லியம்மன் கோவிலில் நடைபெற்ற சண்டி ஹோமத்தில் கத்திரிக்காய், மாங்காய், வெண்டைக்காய், பாகற்காய் கீரை, பனங்கிழங்கு, எலுமிச்சை, நார்த்தங்காய், வாழை, கரும்பு, கொய்யா உள்ளிட்ட 3 முதல் 4 டன் காய்கறிகள் கொண்டு 2000 லிட்டர் நெய் உள்ளிட்டவைகளை கொண்டு சிறப்பு வேள்வி நடைபெற்றது

    தொடர்ந்து தங்கள் கிராமத்தில் விளைவிக்கக் கூடிய காய்கறிகள் சுற்றியுள்ள திருவாரூர், கும்பகோணம், காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், காய்கறி விவசாயம் செழிக்க வேண்டியும், இயற்கையிடமிருந்து விவசாயத்தை பாதுகாக்க வேண்டி தொடர்ந்து 9வது ஆண்டாக இந்த காய்கறி சண்டிஹோமம் நடத்தப்படுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

    யாகத்தில் வைக்கப் பட்டுள்ள கடல்நீர் பூஜைக்கு பிறகு செல்லி அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×