என் மலர்
மயிலாடுதுறை
- செங்கோலை சாட்சியாக கொண்டு மூன்றாவது முறையாக நரேந்திர மோடி ஆட்சி அமைப்பார்.
- ஈழத்துக்கும் பூம்புகாருக்கும் இடையே தொடர்பு இருந்தது
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் பா. ஜனதா கட்சியின் சார்பில் மத்திய அரசின் 9-ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் திருக்கடையூரில் நடைபெற்றது. கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது-
மயிலாடுதுறை மண்ணின் பெருமையை செங்கோல் மூலமாக பாரத பிரதமர் இந்தியா முழுவதும் எடுத்துச் சென்றுள்ளார். 1947 இல் திருவாவடுதுறை ஆதீனம் அப்போதைய பிரதமர் நேருவி டம் வழங்கிய செங்கோலை நேரு கைத்தடியாக அலகாபாத் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டது.
புதிய பாராளுமன்றத்தில் அதே செங்கோலைதிருவா சகம், கோளறு பதிகம் தேவாரத்தோடு பாராளு மன்றத்தில் செங்கோலை நிறுவி பாரத பிரதமர் மயிலாடுதுறை மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
மயிலாடுதுறை மண்ணில் உள்ள திருவாடுதுறை ஆதீனத்திலிருந்து தரப்பட்ட செங்கோலை சாட்சியாக கொண்டு மூன்றாவது முறையாக நரேந்திர மோடி ஆட்சி அமைப்பார்.
ஈழம் நன்றாக இருந்தபோது ஈழத்துக்கும் பூம்புகாருக்கும் இடையே தொடர்பு இருந்தது அந்த தொடர்பு மீண்டும் வளர வேண்டும் என்பது நரேந்திர மோடியின் எண்ணமாக உள்ளது. நரேந்திர மோடியை மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்த்துவது முக்கியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் அகோரம் தலைமை தாங்கினார், மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம்,மாநில செயற்குழு உறுப்பினர் பட்டியல் அணி வழக்கறிஞர் இராம. சிவசங்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். வழக்கறிஞர் பிரிவு மாநில பார்வையாளர் ராஜேந்திரன் வரவேற்று பேசினார்.
தேசிய பொதுக்குழு உறுப்பினர் அம்பேத்க ராஜன், மாவட்ட பொது செயலாளர் நாஞ்சில் பாலு, உள்ளீட்ட நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட பொதுச் செயலாளர் பாலாஜி நன்றி கூறினார்.
- சுவாமி சன்னதிகள் சிறப்பு வழிபாடு செய்து தரிசனம் செய்தனர்.
- கோயில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமி பிரசாதங்களை வழங்கினார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநா தசுவாமி கோயில் உள்ளது. நவக்கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் தனி சன்னதியில் அருள்பாலி க்கிறார்.
பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான ப. சிதம்பரம் வருகை புரிந்தார்.
தொடர்ந்து அவர் தையல்நாயகி அம்மன், வைத்தியநாதசுவாமி, செல்வமுத்துக்குமா ரசுவாமி, அங்காரகன், தன்வந்திரி ஆகிய சுவாமி சன்னதிகள் சிறப்பு வழிபாடு செய்து தரிசனம் செய்தார்.
அவருக்கு கோயில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமி பிரசாதங்களை வழங்கினார்.
அப்போது காங்கிரஸ் கட்சி பிரமுகர் சரச்சந்திரன் உடன் இருந்தனர்.
- மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த ஆலங்காடு ஊராட்சியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
- மாவட்ட கலெக்டர் மற்றும் சீர்காழி சட்டபேரவை உறுப்பினர் முகாமை துவக்கி வைத்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த ஆலங்காடு ஊராட்சியில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி மற்றும் சீர்காழி சட்டபேரவை உறுப்பினர் எம். பன்னீர்செல்வம் முகாமை துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து கால்நடை களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் அங்கு அமைக்கப்பட்டிருந்த கால்நடை அபிவிருத்தி சிறப்பு அரங்குகளை பார்வையிட்டு கேட்டறிந்தனர்.
மேலும் கால்நடை வளர்ப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆலோசனைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக சீர்காழி சட்டபேரவை உறுப்பினர் எம். பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் கால்நடை வளர்ச்சி துறை கூடுதல் இயக்குனர் சுமதி, ஆவின் பொது மேலாளர் மருத்துவர் ராஜசேகர், சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார், கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக அதிகாரிகள் குழுவினர் மற்றும் கொள்ளிடம் ஒன்றிய பெருந்தலைவர் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த கால்நடை வளர்க்கும் பொதுமக்கள் தங்கள் கால்நடைகளுடன் வந்து மருத்துவ சிகிச்சை பலன் பெற்றனர்.
- சீர்காழியில் ஓய்வுபெற்ற அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
- வெள்ளி விழா மாநாட்டை தமிழக முதல்வரை அழைத்து நடத்திட முடிவு செய்துள்ளோம்.
சீர்காழி:
சீர்காழியில் தனியார் திருமண மண்டபத்தில் ஓய்வுபெற்ற அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநில தலைவர் ரெங்கராஜ் தலைமை வகித்தார்.
மயிலாடுதுறை மாவட்ட தலைவர் பரமசிவம், மாவட்ட செயலாளர் செல்வராஜன், மாவட்ட பொருளாளர் வேலாயுதன், துணை தலைவர்கள் வேணு கோபால், கிருவேணிநாதன் முன்னிலை வகித்தனர்.
துணை தலைவர் எம்.பக்கிரிசாமி வரவேற்றார்.
மாநில அமைப்பு செயலாளர் மு.பிச்சையப்பா, மாநில பிரச்சார செயலாளர் இ.செல்வராஜ் பங்கேற்று பேசினர்.
மாநில செயற்குழு கூட்டத்தில் சங்கம் தொடங்கி 25ஆண்டு நிறைவடைகிறது.
வெள்ளி விழா மாநாட்டை தமிழக முதல்வரை அழைத்து நடத்திட முடிவு செய்துள்ளோம்.
மத்திய அரசாங்கம் 7வது ஊதியக்குழுவில் நிறைவேற்றிய மூத்த ஓய்வூதியர், இளைய ஓய்வூதி யருக்கும் இருக்ககூடிய ஓய்வூதிய முரன்பாடுகளைய தனியான சிறப்பு கமிட்டி அமைத்து அறிக்கை பெற்று அதனை அமுல்படு த்தியுள்ளது.
அதன்படி தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கும் நிறைவேற்ற வேண்டும் என்றார்.
- மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பாக பள்ளி மாணவ விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டது.
- மாணவகளுக்கு பரிசளிப்பு விழா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகவளாகத்தில் நடைபெற்றது.
தரங்கம்பாடி:
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு என்.எஸ். நிஷா தலைமை தாங்கி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது:-
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல்துறை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியபோட்டி, பேச்சுபோட்டி, கட்டுரைபோட்டி உள்ளிட்ட ஏராளமான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
கடந்த இரண்டு வருடத்தில் 60 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 1 லட்சத்து 83 ஆயிரத்து 386 லிட்டர் சட்டத்திற்கு புறம்பாக கடத்திவரப்பட்ட மதுபானங்கள், சாரயங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
50 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. 46 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளி மாநிலம் காரைக்கால் மாவட்ட த்திலிருந்து சாராயம் மற்றும் சட்டத்திற்கு புறம்பாக மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதை தடுக்கும் வகையில் நண்டலாறு, நல்லாடை, ஆயப்பாடி ஆகிய இடங்களில் காவல் சோதனை சாவடி அமைக்கப்பட்டு கண்காணி க்கப்பட்டு வருகிறது.
மேலும் கஞ்சா விற்பனை செய்தால் அதனை காவல்துறையினருக்கு தகவல் அளிக்கும் வகையில் புதிதாக வழங்கப்பட்ட வாட்ஸ்அப் எண் 9626169492 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் தகவல் அளிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முடிவில் மாவட்ட குற்ற ஆவண காப்பகம் துணைக் கண்கா ணிப்பாளர் மனோகரன் நன்றி கூறினார்.
- சாலையை சீரமைக்க கோரி சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
- சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து திருமுலைவாசல் செல்லும் சாலை மிகவும் மோசமடைந்து சாலையில் அதிக அளவு உள்ள பள்ளங்களால் வாகன ஒட்டிகள், பொதுமக்கள், மாணவ மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தனர்.
சீர்காழி -திருமுலைவாசல் செல்லும் சாலையை சீரமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் அக்கட்சியினர் கலந்து கொண்டனர்.
நெடுஞ்சா லைத்துறை அதிகாரிகள் பங்கேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் சீர்காழி ஈசானியத்திலிருந்து திருமுலைவாசல் வரை செல்லும் சாலையை சீரமைப்பது எனவும் மாதானம் கூட்டு ரோடு அருகே தேவையான இடங்களில் வேக தடை அமைப்பது எனவும் உறுதியளித்தனர் இதனை அடுத்து மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
- மகாராஜபுரம் ஊராட்சியில் நீர்ேதக்க தொட்டி அமைக்க அடிக்கல் நாட்டி பணியை தொடங்கப்பட்டது.
- பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை ஒன்றியம் மகாராஜபுரம் ஊராட்சி மணலூர் கிராமம் தெற்கு தெருவில் பாரத பிரதமர் ஆகாஷ் யோகிதா ஜனம் திட்டத்தின் கீழ் மேல் நிலை நீர் தேக்க தொட்டி 30 ஆயிரம் கொள்ளளவில் 15 லட்சம் ரூபாய் செலவில் ஒன்றிய குழு தலைவர் காமாட்சி மூர்த்தி பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணியை துவங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் மூவலூர் மூர்த்தி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் கே.புஷ்பலதா வேதநாயகம் முன்னிலை வகித்தனர்.
துணைத் தலைவர் மாலதி, திருமங்கலம் தி.மு.க. கிளைச் செயலாளர் மணிமாறன், வார்டு உறுப்பினர் காமராஜ் மற்றும் கிராம முக்கிய ஸ்தர்கள் நீலமேகம், ரமேஷ், அசோக் ராஜன், நாகராஜ், என ஏராளமாவர்கள் கலந்து கொண்டனர்.
இது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- குடமுழுக்கு நடத்துவதற்காக பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றது.
- காளியம்மனுக்கு அபிஷேகமும், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது.
மயிலாடுதுறை:
குத்தாலம் அருகே வழுவூர் கிராமத்தில் தில்லை காளியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்துவதற்காக பாலாலயம் செய்யப்பட்டு கோவில் திருப்பணிகள் நடைபெற்று வந்தது.
தற்போது கோவிலின் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் குடமுழுக்கு விழா விக்னேஸ்வர பூஜை, கோவிலின் பரிகார பூஜைகளுடன் கடந்த 22-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நாளான நேற்று 4-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து பூர்ணாகுதிக்கு பிறகு மேளதாளம் முழங்க புனித நீர் அடங்கிய கடங்கள் கோவிலை சுற்றி எடுத்துவரப்பட்டன.
பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோவிலில் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது.
தொடர்ந்து கர்ப்ப கிரகத்தில் அமைந்துள்ள தில்லை காளியம்மனுக்கு அபிஷேகமும், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை வழுவூர் கிராம மக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
- உறவினர் வீட்டில் மின்விளக்கு எரியாமல் இருந்தது.
- எதிர்பாராத விதமாக சதீஷ் மீது மின்சாரம் பாய்ந்தது.
மயிலாடுதுறை:
கொள்ளிடம் அருகே எருக்கூர் கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் ராமசாமி மகன் சதீஷ் (வயது 28).
எலக்ட்ரீசியன். இந்த நிலையில் சம்பவத்தன்று சதீஷ் தனது பெரியப்பா நாராயணன் என்பவரது வீட்டில் மின்விளக்கு எரியாமல் இருந்ததால், அவரது வீட்டிற்கு சென்று மின் வயரை சரி செய்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக சதீஷ் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில் அவர் வீட்டிற்குள்லேயே சுருண்டு விழுந்து இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சதீஷ் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சதீசுக்கு மனுஷா (23) என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- 8 லிட்டர் புதுச்சேரி சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
மயிலாடுதுறை:
மணல்மேடு அருகே மன்னிப்பள்ளம் பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் மணல்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மங்களநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மன்னிப்பள்ளம் மெயின்ரோடு பகுதியில் உள்ள தம்பிதுரை மகன் அருள்மொழி (வயது32) என்பவர் தனது வீட்டின் பின்புறத்தில் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
உடனே அங்கு சென்ற போலீசார், சாராயம் விற்பனையில் ஈடுபட்ட அருள்மொழியை கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து 8 லிட்டர் புதுச்சேரி சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
- கோ பூஜை, லட்சுமி பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன.
- புனிதநீர் அடங்கிய கடங்களை கோபுரத்திற்கு கொண்டு சென்றனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காடு அருகே வேதராஜபுரம் கிராமத்தில் அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் உள்ளது.
முன்னொரு காலத்தில் திருமங்கை ஆழ்வாருக்கு அடைக்கலம் தந்ததால் இவருக்கு அடைக்கலம் காத்த அய்யனார் என அழைக்கப்படுகிறார்.
இந்த கோவிலில் விநாயகர், அகோர வீரபத்திரர், தூண்டிக்கார சாமி, பெரிய உடையார், சின்ன உடையார் உள்ளிட்ட பரிவார சாமி சன்னதிகள் திருப்பணி நிறைவடைந்துள்ளது.
இதை அடுத்து இந்த கோவிலின் குடமுழுக்கு நேற்று நடந்தது.
இதை ஒட்டி கடந்த 22 ஆம் தேதி கணபதி பூஜை உடன் யாக சாலை பூஜைகள் தொடங்கியது.
இந்த பூஜைகளை திருவெண்காடு ஸ்வேதாரணேஸ்வரர் கோவில் அர்ச்சகர் சங்கர் கணேஷ் சிவாச்சாரியார் தலைமையில் 25க்கும் மேற்பட்ட வேத பண்டிதர்கள் இதில் பங்கேற்றனர்.
நேற்று காலை 6 ஆம் கால யாக பூஜை தொடங்கியது.
அப்போது கோ பூஜை, லட்சுமி பூஜை உள்ளிட்டவைகள் நடந்தன.
பின்னர் மகாபூர்ணாஹூதி செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மேள, தாளம் முழுங்கிட சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய யாக குடங்களை கோபுரத்திற்கு கொண்டு சென்றனர்.
அங்கு கோபுர கலசங்களுக்கு ஆராதனைகள் செய்யப்பட்டது.
இதை அடுத்து ஒரே நேரத்தில் அனைத்து சன்னதிகளுக்கும் புனித நீர் அபிஷேகம் செய்யப்பட்டு குடமுழுக்கு நடந்தது.
அப்போது கோபுரத்திற்கு மேல் கருடன் வட்டமிட்டதை கண்ட பக்தர்கள் ஐயப்பா ஐயப்பா என சரண கோஷமிட்டனர்.
பின்னர் மகா அபிஷேகம் செய்யப்பட்டது.
இதில் ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழுவினர், குலதெய்வ பக்தர்கள் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.இதை ஒட்டி திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளில் செய்திருந்தனர்.
- படுகாயமடைந்த சிறுமி கீர்த்தனா அதே இடத்தில் மயங்கி விழுந்தார்.
- போராட்டம் 45 நிமிடங்களுக்கு மேலாக நீடித்தது.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கப்பூர் ஊராட்சி பாரதி நகரை சேர்ந்தவர் கார்த்தி. இவரது மகள் கீர்த்தனா (வயது 12) ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.
கப்பூர் கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளாக மின்கம்பி மிகவும் தாழ்வாக தொங்கிக் கொண்டிருப்பதாகவும், கம்பியில் பல இடங்களில் ஜாயிண்ட் அடித்து மின்விநியோகம் செய்யப்படுவதால், எப்போது வேண்டுமானாலும் விபத்து நேரிடும் அபாயம் உள்ளதால், உடனடியாக மின் கம்பியை சீரமைத்து தருமாறு கிராம மக்கள் பலமுறை மின்வாரியத்தினரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் கப்பூர் கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கீர்த்தனா மீது இன்று காலை மின் கம்பி அறுந்து விழுந்தது.
இதில் படுகாயம் அடைந்த சிறுமி கீர்த்தனா அதே இடத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் சிறுமியை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்து அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கப்பூர் கிராம மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் மின்கம்பியை சீரமைக்காத மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து மயிலாடுதுறை- திருவாரூர் சாலை மார்க்கத்தில் மங்கைநல்லூர் என்ற இடத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 10:30 மணிக்கு தொடங்கிய இப்போராட்டம் 45 நிமிடங்களுக்கு மேலாக நீடித்தது. இதனால், இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பெரம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில் போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடனடியாக மின் கம்பியை சீரமைத்து தருவதாகவும் விரைவில் புதிய மின் கம்பங்களை அமைத்து மின் கம்பியை உயர்த்தி கட்டி தருவதாகவும் அளித்த உறுதி மொழியை ஏற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர்.






