என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    செம்பனார்கோவில் அருகே குடும்ப தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பொறையாறு:

    மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே கஞ்சாநகரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மனைவி தேவிகா (வயது32). நேற்று முன்தினம் காலை கணவருக்கு உணவு எடுத்து வைத்துள்ளார்.

    அப்போது இட்லிக்கு முதல் நாள் அரைத்து வைத்திருந்த சட்னியை எடுத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து சுந்தரமூர்த்தி, தனது 12 வயது மகனை அழைத்து கொண்டு சாப்பிட ஓட்டலுக்கு சென்று விட்டார். இதனால் மனவேதனை அடைந்த தேவிகா வீட்டுக்குள் சென்று தனது புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சுந்தரமூர்த்தி கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தபோது மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு ்அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த செம்பனார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேவிகா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
    தொகுதி வாரியாக முக்கிய கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:


    சீர்காழி (தனி)
    வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    மு.பன்னீர்செல்வம்திமுக94057
    பி.வி.பாரதிஅதிமுக81909
    பொன்.பாலுஅமமுக1308
    பிரபுசமக1000
    கவிதாநாம் தமிழர்11013
    மயிலாடுதுறை
    வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    ராஜ்குமார்காங்கிரஸ்73642
    சித்தமல்லி பழனிசாமிபாமக70900
    கோமல் அன்பரசன்அமமுக7282
    எம்.என்.ரவிச்சந்திரன்மநீம5933
    கி.காசிராமன்நாம் தமிழர்13186
    பூம்புகார்
    வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    நிவேதா முருகன்திமுக96102
    பவுன்ராஜ்அதிமுக92803
    செந்தமிழன்அமமுக1220
    மெஹராஜ்தீன்தமஜக950
    காளியம்மாள்நாம் தமிழர்14823
    தரங்கம்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. அரை மணிநேரம் நீடித்த மழையால் பல நாட்களாக வாட்டி வதைத்த வெயிலின் தாக்கம் சற்று தணிந்தது.
    பொறையாறு:

    தமிழகத்தில் தற்போது கோடை வெயில் கொளுத்தி வருகிறது. வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
    மயிலாடுதுறை மாவட்ட பகுதிகளில் இரவு நேரங்களிலும் வெயிலின் தாக்கத்தை உணர முடிவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

    மின்விசிறிகள் இயங்கினாலும் சூடான காற்றே வீசுகிறது. வெயிலை சமாளிக்க குளிர்பான கடைகளை மக்கள் நாடி சென்று வருகின்றனர். இளநீர், நுங்கு, வெள்ளரிப்பழங்கள் உள்ளிட்டவற்றின் விற்பனை முன்பை விட அதிகரித்து காணப்படுகிறது.

    இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. அரை மணிநேரம் நீடித்த மழையால் பல நாட்களாக வாட்டி வதைத்த வெயிலின் தாக்கம் சற்று தணிந்ததாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். தரங்கம்பாடி, செம்பனார்கோவில், பொறையாறு, காட்டுச்சேரி, காழியப்பநல்லூர் உள்ளிட்ட இடங்களில் மழைக்கு பின்னர் குளிர்ந்த காற்று வீசியது.
    மோட்டார் சைக்கிள் மின் கம்பத்தில் மோதிய விபத்தில் காயமடைந்தவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா தேரழுந்தூர் புளியடி தெருவை சேர்ந்த ஜெய்சங்கர் மகன் சங்கீத் (வயது23). இவர் தனது மோட்டார் சைக்கிளில் தேரழுந்தூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மூவலூர் சிவன் கோவில் அருகே சென்றபோது நெடுஞ்சாலையின் இடதுபுறம் உள்ள மின் கம்பத்தின் மீது திடீரென மோட்டார் சைக்கிள் மோதியது. 

    இதில் படுகாயம் அடைந்த சங்கீத் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைபெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சங்கீத் பரிதாபமாக இறந்தார். 

    இதுகுறித்து அவருடைய தந்தை ஜெய்சங்கர் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, குத்தாலம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கொரோனா தொற்று 2-வது அலை அதிகரித்து வருவதால் அரசு துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
    திருக்கடையூர்:

    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கொரோனா தொற்று 2-வது அலை அதிகரித்து வருவதால் அரசு துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து திருக்கடையூர் சுற்றுப்பகுதி பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை மூலம் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ் தலைமை தாங்கினார். சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேசன், ஜெயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். முகாமை வட்டார மருத்துவ அலுவலர் டக்டர் கார்த்திக்சந்திரகுமார் தொடங்கி வைத்தார். முகாமில் ஏராளமானோர் கலந்துகொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.
    மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளர்களை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் துப்புரவு பணியாளர்களை தாக்கியவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி நேற்று மாலை சாலை மறியல் செய்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர். அவர்களை கைது செய்யும் வரை பணி செய்யப் போவதில்லை. மருத்துவமனை அலுவலகம் முன்பே நாங்கள் தர்ணா இருப்போம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    அப்போது பாதிக்கப்பட்ட ஒப்பந்த துப்புரவு பணியாளர் அருண் கூறுகையில், கொரோனா காலங்களில் மருத்துவமனை கட்டுப்பாட்டில் உள்ளதால் எங்களுக்கு அனாவசியமான ஆட்கள் உள்ளே வராமல் தடுக்க மேலதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி நாங்கள் கட்டுப்பாடுடன் பணிகள் செய்து கொண்டிருந்தோம். 2 வாலிபர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து கேட்டை திறக்கும்படி மிரட்டினர். தற்போது அனுமதி இல்லாததால் பின்னர் வருமாறு கூறினோம். அதையும் கேட்காமல் தகாத வார்த்தைகளால் திட்டினர். உடனே செல்போன் மூலம் அவர்களுடைய நண்பர்களுக்கு அழைப்பு கொடுத்து வரவைத்தனர்.

    பின்னர் கற்களை எடுத்து வீசி எங்களை தாக்கினர். அவர்களை கைது செய்யாத வரை நாங்கள் பணி செய்யப் போவதில்லை. போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் திமுக 2 தொகுதிகளிலும், காங்கிரஸ் 1 தொகுதியில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது
    மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வெற்றி வாய்ப்பு விவரம்:


    பூம்புகார்

    திமுக

    மயிலாடுதுறை

    காங்கிரஸ்

    சீர்காழி

    திமுக

    கொள்ளிடம் பகுதியில் முந்திரி அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மகசூல் குறைந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
    கொள்ளிடம்:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கடலோர பகுதிகளான புதுப்பட்டினம், தாண்டவன்குளம், பழையபாளையம், ஆலங்காடு, வேட்டங்குடி, எடமணல், கூழையார், தொடுவாய், திருமுல்லைவாசல், ஆகிய பகுதிகளில் சுமார் 600 ஏக்கர் நிலப்பரப்பில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    தற்போது முந்திரி காய்த்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. தற்போது விவசாயிகள் முந்திரி பழங்களை அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், முந்திரி சாகுபடிக்கு அதிக தண்ணீர் தேவை இல்லை. வறட்சியை தாங்கி வளரக்கூடியது. தற்போது இங்கு விளைவிக்கும் முந்திரி பண்ருட்டிக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து பதப்படுத்தப்பட்டு திருப்பதிக்கு லட்டு செய்வதற்காக அனுப்பப்படுகிறது.

    கொள்ளிடம் பகுதியில் அதிகமாக முந்திரி சாகுபடி செய்துள்ளோம். கடந்த ஆண்டு நல்ல மகசூல் என்பதால் ஒரு ஏக்கருக்கு 8 குவிண்டால் வரை முந்திரி கொட்டை கிடைத்தது. அப்போது குவிண்டால் ரூ.9 ஆயிரம் வரை விற்பனை செய்தோம். தற்போது விளைச்சல் குறைந்து விட்டது. இதனால் ஒரு ஏக்கருக்கு 6 குவிண்டால் மட்டுமே மகசூல் கிடைத்துள்ளது. விலையும் குறைந்து ரூ.7 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
    வேட்டங்குடி கிராமத்தில் முந்திரி சாகுபடியில் பூக்கள் கருகிய நிலையில் இருப்பதை படத்தில் காணலாம்.
    விலை குறைந்ததற்கு காரணம் கொரோனா தொற்று கட்டுப்பாட்டால் வியாபாரிகள் அதிகமாக வருவது இல்லை. இதனால் விலை குறைந்து விட்டது. மேலும் பூக்கள் அதிகமாக கருகி வருவதால், விளைச்சல் மிகவும் குறைந்து விடும் என்பதால் எங்களுக்கு கவலையாக உள்ளது என்றனர்.
    மயிலாடுதுறை அருகே 17 வயது மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி உடல்நிலை சரியில்லை என்று மயிலாடுதுறை அரசு மருத்துமனையில் சேர்ந்துள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், மாணவி 9 வார கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர். 

    இதுகுறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இதற்கு காரணமானவர் ஆக்கூர் தெற்கு தெருவை சேர்ந்த பவுன்ராஜ் (வயது 21) என்பது தெரிய வந்தது. 

    இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பவுன்ராஜை கைது செய்தனர்.
    வைத்தீஸ்வரன்கோவில் குடமுழுக்கையொட்டி 4 ரத வீதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
    மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா நீதிமன்ற உத்தரவுப்படியும், தமிழக அரசின் கொரோனா வழிகாட்டுதல்படியும் இன்று (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.

    இந்தநிலையில் பக்தர்கள் கூடுவதை தடுக்கும் வகையில் இன்று காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பரிந்துரையின் பேரில் வைத்தீஸ்வரன்கோவில் 4 ரத வீதிகளில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்க மாவட்ட கலெக்டர் லலிதா 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    அதன்படி அங்கு 5 பேருக்கு மேல் கூட்டமாக செல்லக் கூடாது, மருந்துக்கடைகள், பால் விற்பனை நிலையங்களை தவிர அனைத்து கடைகளையும் மூட வேண்டும்.

    மக்கள் குடமுழுக்கை பார்க்கும் வகையில் யூடியூப் மற்றும் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

    எனவே யாரும் வைத்தீஸ்வரன்கோவிலுக்கு தரிசனம் செய்ய வரவேண்டாம் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு இன்று குடமுழுக்குவிழா சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி பக்தர்கள் பங்கேற்பின்றி, அரசின் நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற்றது.
    சீர்காழி

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்திய நாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோயிலில் தனி சன்னதியில் செல்வ முத்துக்குமார சுவாமி, நவக் கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் தன்வந்திரிசுவாமிகள் அருள்பாலிக்கின்றனர்.

    செவ்வாய் பரிகார தலமாகவும், நோய் தீர்க்கும் தலமாகவும் விளங்கும் இக்கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு இன்று குடமுழுக்கு விழா நடந்தது. இதையொட்டி கடந்த 25-ந் தேதி 8 கால யாகசாலை பூஜைகளுக்காக 147 யாககுண்டங்கள் அமைக்கப்பட்டு அதில் 108 மூலிகை பொருட்கள் இட்டு நடந்து வந்தது.

    நேற்று காலை பரிவார யாக பூஜைகள் தொடங்கி, மகா பூர்ணாஹூதி, தீபாராதனை செய்விக்கப்பட்டு, யாகசாலைகளிலிருந்து புனிதநீர் அடங்கிய கடங்கள் வேதமந்திரங்கள் முழங்கிட சிவாச்சாரியார்களால் புறப்பாடு ஆகி, மேள, தாளங்கள் முழங்கிட கோவிலை வலம் வந்து ஆதிவைத்தியநாதர், வலஞ்சுழி வினாயகர், வீரபத்திரர், தெட்சிணாமூர்த்தி, துர்க்கைஅம்மன், பத்ரகாளியம்மன், நவகிரகங்கள் ஆகிய பரிவார தெய்வங்களின் சன்னதி விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது.

    தொடர்ந்து இன்று காலை 8ம் கால யாகசாலைபூஜைகள் நிறைவடைந்து, புனிதநீர் அடங்கிய கடங்கள், வேதமந்திரங்கள் முழங்கிட புறப்பட்டு கோயிலை வலம் வந்து கற்பக வினாயகர், வைத்தியநாதசுவாமி, தையல்நாயகிஅம்மன், செல்வமுத்துக்குமாரசுவாமி, அங்காரகன் மூலவர் விமானங்கள், 6கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னியிலையில் குடமுழுக்கு நடைபெற்றது.

    இதில் நீதிமன்ற உத்தரவின்படி பக்தர்கள் யாரும் கோவில் உள்ளேயும் வெளிவட்ட சாலைகளிலும் அனுமதிக்கப்படவில்லை. கோவிலை சுற்றியுள்ள வீடுகளில் இருந்த பக்தர்கள் மாடிகள் மீது ஏறி குடமுழுக்கை தரிசனம் செய்தனர்.

    இந்நிகழ்ச்சியில் உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரி விக்ராந்த் ராஜா, சென்னை உயர்நீதிமன்ற அரசு சிறப்பு வழக்கறிஞர் கார்த்திகேயன், மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் வலிதா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட உரிமையியல் நீதிபதி பார்கவி ஆகியோர் மட்டும் கலந்து கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். இதனால் எளிமையான முறையில் குடமுழுக்கு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
    மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    மயிலாடுதுறை:

    தமிழகத்தில் கொரோனா நோயின் 2-வது அலை அதிக வேகமாக பரவி வருகிறது. நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசிகள் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு விதமான மருந்துகள் தடுப்பூசியாக போடப்பட்டு வருகிறது.

    கடந்த 2 வாரங்களாக தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வருகின்றனர். முதல்டோஸ் போட்டுகொண்டவர்கள் முதலில் எந்த மருந்தை போட்டுகொள்கிறார்களோ அதே மருந்ததைதான் 2-வது டோசில் போட்டுக் கொள்ள வேண்டும்.

    தற்போது கோவாக்சின் மருந்து மிகவும் தட்டுப்பாடாக இருந்து வருகிறது. கோவிஷீல்டு தடுப்பூசியும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று காலை 8.30 மணிமுதல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வதற்காக பொதுமக்கள் வந்து நீண்டநேரம் வரிசையில் காத்திருந்துள்ளனர். காலை 11 மணிக்குமேல் நின்று கொண்டிருந்தவர்களிடம் கோவாக்சின் தடுப்பூசி மருந்து தீர்ந்துவிட்டது என்று அரசு மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அரசு தலைமை மருத்துவமனையின் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ×