என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    திருமுல்லைவாசலில் கொரோனா பாதுகாப்பு சுகாதார பணிகள் செய்யாத ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகையிட்டனர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் பரிமளா தமிழ்ச்செல்வன். இவர், கொரோனா தொற்று ஏற்பட்ட காலத்தில் இருந்து அலுவலகத்திற்கு வருவதில்லை எனவும், எந்தவித பாதுகாப்பு சுகாதார பணிகளும் செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் திருமுல்லைவாசல் ஊராட்சியில் 20-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டனர். இதில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்தநிலை ஏற்பட்டும் இதுவரை ஊராட்சியில் கிரிமி நாசினி, பிளீச்சிங் பவுடர் உள்ளிட்ட எந்த சுகாதார பணிகளும் செய்யபடவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன் தலைமையில் ஒன்றியக்குழு உறுப்பினர் மாலினி பூவரசன், தி.மு.க. கிளை செயலாளர்கள் ஸ்டீபன், வக்கீல் கார்த்திக் மற்றும் கிராம மக்கள், ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    பின்னர் சமூக இடைவெளியை கடைபிடித்து, முக கவசம் அணிந்து கண்டன கோஷமிட்டனர். இதனால் திருமுல்லைவாசல் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் போராட்டக்காரர்கள் தாமாக கலைந்து சென்றனர்.
    சாலைகளில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 16 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து, சீர்காழி போலீஸ் நிலைய வளாகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
    சீர்காழி:

    தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கத்தால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் 2-வது ஊர் அடங்கை அமல்படுத்தி உள்ளது. இதன் காரணமாக தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரை பால் கடை, பழக்கடை, உணவகம், உள்ளிட்ட கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் ஊரடங்கை மீறி சீர்காழி பகுதியில் நேற்று ஏராளமான மோட்டார் சைக்கிள்கள் வலம்வந்தன. சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி தலைமையில் ஏராளமான போலீசார் சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில் சாலைகளில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 16 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து, சீர்காழி போலீஸ் நிலைய வளாகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

    பின்னர் மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து, அறிவுரை வழங்கி வாகன ஓட்டிகளை அனுப்பி வைத்தனர்.
    மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறுவோர் மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் போலீசார் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
    மயிலாடுதுறை:

    தமிழ்நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது உரிய நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர். அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறுவோர் மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் போலீசார் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 14 போலீஸ் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறி வியாபாரம் செய்த டீ கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்ட 30 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல முக கவசம் அணியாமல் வாகனங்களில் பயணம் செய்த 250 பேரிடம் அபராத தொகை ரூ.5 ஆயிரம் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிள்களில் முக கவசம் அணியாமலும், ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணம் செய்தவர்கள் என மொத்தம் 1,000 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டது.
    சீர்காழியில் குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
    சீர்காழி:

    சீர்காழி பிடாரி கீழ வீதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 44). சாராய வியாபாரியான இவர் மீது மதுவிலக்கு தொடர்பான பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு் ஓம் பிரகாஷ் மீனா பரிந்துரையின் பேரில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா, சங்கரை கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி சீர்காழி மதுவிலக்கு போலீசார் குண்டர் சட்டத்தில் சங்கரை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
    மணல்மேடு அருகே டாக்டர் வீட்டில் 11 பவுன் நகை- ரூ.2¾ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    மணல்மேடு:

    மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட சின்னஇலுப்பப்பட்டு குறுக்கு ரோட்டை சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மகன் ரெங்கநாதன் (வயது36). டாக்டரான இவர் நேற்று முன்தினம் காலை தனது கர்ப்பிணி மனைவியை அழைத்துக்கொண்டு மயிலாடுதுறையில் உள்ள தனியார் ஸ்கேன் மையத்துக்கு சென்று விட்டு அன்று இரவு மூவலூரில் உள்ள தனது மாமனார் வீட்டில் சென்று தங்கினார்.

    நேற்று காலை 9 மணிக்கு தனது வீட்டுக்கு ரெங்கநாதன் திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் பீரோவில் இருந்த 11 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் கொள்ளை போய் இருந்தது. ஆனால் கொள்ளை போன நகைகள் இருந்த பெட்டியில் இருந்த 8 பவுன் நகைகளை எடுக்காமல் மர்ம நபர்கள் விட்டு சென்றுள்ளனர். நகை- பணம் கொள்ளை போனது குறித்து மணல்மேடு போலீஸ் நிலையத்தில் ரெங்கநாதன் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி நகை- பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
    மயிலாடுதுறையில் டிரைவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை டவுன் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 40). டிரைவரான இவர் அதே பகுதியில் தெருமுனையில் உள்ள மதகில் உட்கார்ந்திருந்தார். அதே பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் மகன் விக்னேஷ் என்பவர் அங்கு வந்துள்ளார். அப்போது கடந்த 6 மாதத்திற்கு முன்பு விபத்தில் சிக்கிய தனது கார் சாவியை ஏன் பறித்து சென்றாய்? என்று கூறியதோடு தனது கையில் வைத்திருந்த அரிவாளை எடுத்து முரளியை வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த முரளி, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேசை வலைவீசி தேடி வருகின்றனர்.
    ஊரடங்கு மீறி மோட்டார் சைக்கிளில் வெளியே வந்தவர்களுக்கு போலீசார் ரூ.200 அபராதம் விதித்தனர்.
    பொறையாறு:

    செம்பனார்கோவில் கடைவீதியில் மதியம் 12 மணிக்கு கடைகள் அனைத்து அடைக்கப்பட்டு, சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அப்போது செம்பனார்கோவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கு மீறி மோட்டார்சைக்கிளில் வெளியே வந்தவர்களுக்கு போலீசார் ரூ.200 அபராதம் விதித்தனர். மேலும் அரசு உத்தரவை கடைபிடிக்காவிட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரித்து அவர்களை வீட்டிற்கு செல்லுமாறு அனுப்பினர்.
    கொள்ளிடம் அருகே கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கொள்ளிடம்:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு சுனாமி நகரை சேர்ந்தவர் நடராஜன் (வயது 44). இவர், நேற்று காலை அதே ஊரை சேர்ந்த 5 பேருடன் பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றார்.

    இவர்கள் 6 பேரும் 1½ கிலோ மீட்டர் தூரத்தில் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென கடலில் படகு கவிழ்ந்தது. இதனால் கடலில் தத்தளித்தபடி மீனவர்கள் நீந்தி சென்று அந்த பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த மற்றொரு படகில் ஏறி உயிர் தப்பினர். நடராஜன் மட்டும் கடலில் மாயமாகி விட்டார்.

    உடனே அந்த படகில் இருந்த மீனவர்களின் ஒத்துழைப்புடன் தங்களுடன் மீன் பிடிக்க வந்த நடராஜனை தேடும் பணியில் சக மீனவர்கள் ஈடுபட்டனர். 3 மணி நேரம் தேடுதலுக்கு பின்னர் நடராஜனை பிணமாக மீட்டனர். இதைத்தொடர்ந்து அவரது உடலை பழையாறு கடற்கரைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து கடலோர காவல் படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருவெண்காடு அருகே லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    திருவெண்காடு:

    மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அருகே உள்ள ராதாநல்லூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த துரை மகன் விஷ்ணு (வயது22). கூலி தொழிலாளியான இவர், நேற்று காலை ராதாநல்லூர் மெயின்ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே செங்கல் ஏற்றி வந்த டிப்பர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் காயம் அடைந்த விஷ்ணு சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுபற்றி தகவல் அறிந்த திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, சப்-இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த விஷ்ணு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    திருவெண்காடு அருகே லாரி மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவெண்காடு:

    மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அருகே உள்ள ராதாநல்லூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த துரை மகன் விஷ்ணு (வயது22). கூலி தொழிலாளியான இவர், நேற்று காலை ராதாநல்லூர் மெயின்ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே செங்கல் ஏற்றி வந்த டிப்பர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் காயம் அடைந்த விஷ்ணு சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுபற்றி தகவல் அறிந்த திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, சப்-இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த விஷ்ணு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    மயிலாடுதுறையில் மகளை பாலியல் துன்புறுத்தல் செய்த தந்தை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை ரயிலடி பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 34). சமையல் தொழிலாளி இவர், தனது மகளை பாலியல் துன்புறுத்தல் செய்தது தொடர்பான வழக்கில் கடந்த பிப்ரவரி 3-ந் தேதி போக்சோ சட்டத்தில் கைது செய்து, நாகை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் மாவட்ட கலெக்டர் லலிதா, சிறையில் இருந்த ஈஸ்வரனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை பெற்ற மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி மற்றும் போலீசார் நாகை கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஈஸ்வரனை திருச்சி கொண்டு சென்று மத்திய சிறையில் அடைத்தனர்.
    சீர்காழி ரெயில்வே ரோட்டில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால் வங்கி மூடப்பட்டது. வங்கி முழுவதும் நகராட்சி சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி மற்றும் கொள்ளிடத்தில் வங்கி ஊழியர்கள் மற்றும் காவலர்களுக்கு கொரோனா தொற்று வியாழக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

    சீர்காழி ரெயில்வே ரோட்டில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால் வங்கி மூடப்பட்டது. வங்கி முழுவதும் நகராட்சி சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

    இதேபோல் கொள்ளிடம் ஆணைக்காரன்சத்திரம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றிவரும் இருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டு இருவரும் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

    ×