என் மலர்
செய்திகள்

லாரி மோதி பலியான விஷ்ணு. (பழைய படம்).
திருவெண்காடு அருகே லாரி மோதி தொழிலாளி பலி
திருவெண்காடு அருகே லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவெண்காடு:
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அருகே உள்ள ராதாநல்லூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த துரை மகன் விஷ்ணு (வயது22). கூலி தொழிலாளியான இவர், நேற்று காலை ராதாநல்லூர் மெயின்ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே செங்கல் ஏற்றி வந்த டிப்பர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் காயம் அடைந்த விஷ்ணு சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுபற்றி தகவல் அறிந்த திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, சப்-இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த விஷ்ணு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story